சென்னை: உலகில் எந்த ஒரு முதலீட்டில் முதலீடு செய்ய வேண்டுமானாலும், அதிலும் சில சிக்கல்கள் இருக்கும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே உங்கள் கனவு வீட்டை வாங்கும் முன் அல்லது ஏதேனும் நிலத்தை வாங்கும் முன் சில முக்கியமான அம்சங்களைக் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த பதிவில் நீங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்.
இடம் மற்றும் சந்தை ஆராய்ச்சி: முதலீடு செய்வதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கூறுகளில் ஒன்று இடம். ஒரு பாத்திரத்தை வாங்குவதற்கே எத்தனை முறை ஆராய்ச்சி செய்து பார்த்து வாங்குகிறோம். விலை உயர்ந்த சொத்தை வாங்குவதற்கு முன்பும், அதே போல அருகில் பள்ளிகள், மருத்துவமனைகள், கடைகள் உள்ளனவா.. போக்குவரத்து வசதி எப்படி உள்ளது.. தொழில் துறை வசதிகள் இருக்கிறதா.. என்ற விவரங்களைப் பற்றி ஆராய்வதும் முக்கியம்.

2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், இந்திய வீட்டு விலை குறியீடு ஆண்டுக்கு 3.81% அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இதன் மூலம் நாம் ஒன்றை தெரிந்து கொள்ளலாம். நாம் இருக்கும் இடம் எப்படிப்பட்ட இடம் என்பதை பொறுத்து தான் நீங்கள் வாடகைக்கு வீடு கட்டி இருந்தாலும் சரி அல்லது உங்களுக்கு சொந்தமாக வீடு வாங்க இருந்தாலும் சரி, நிலமாக இருந்தாலும் சரி அதனுடைய மதிப்பு மதிப்பிடப்படுகிறது.
பயன்படுத்தும் நோக்கம்: நீங்கள் வாங்கும் ரியல் எஸ்டேட் சொத்து எதற்காக என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நீண்ட கால முதலீடாக வாடகைக்கு விடுதல் அல்லது சொந்தப் பயன்பாட்டிற்கு வாங்க இருக்கிறீர்களா என்பது போன்ற விவரங்களை வைத்து அதற்கு ஏற்ப சொத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். உதாரணமாக வாடகைக்கு விடுவதற்கு நகர்ப்புறங்களில் சொத்து வாங்குவது சால சரி. ஆனால் நீண்ட காலம் முதலீட்டிற்கு வளர்ந்து வரும் பகுதிகளில் வாங்குவது நல்லது.
சொத்தின் மொத்த மதிப்பு மற்றும் வளர்ச்சி: சொத்து வாங்குவதற்கு முன்பு அதன் சந்தை மதிப்பு குறித்து ஆராய்ச்சி செய்யுங்கள். நீங்கள் வாங்கும் ரியல் எஸ்டேட் சொத்து பிற்காலத்தில் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளதா.. அருகில் அதற்கு ஏற்றவாறு போக்குவரத்து திட்டங்கள், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளனவா.. தொழில்துறை வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பது போன்ற காரணிகளையும் மதிப்பாய்வு செய்யுங்கள். இதை சரியாக செய்தால் உங்கள் முதலீட்டின் மதிப்பு காலப்போக்கில் அதிகரிக்கும்.
நிதி விருப்பங்களை ஆராய்தல்: ரியல் எஸ்டேட் முதலீட்டில் ஈடுபடுவதற்கு முன்பு தங்களுடைய நிதி கடமைகளைப் பற்றி ஆராய வேண்டும். சிலர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய தங்களது சொந்த சேமிப்பைப் பயன்படுத்தி இருப்பார். இது போன்ற நேரங்களில் அடுத்து வரும் அவசர தேவைக்கு பணத்தை வைத்துக்கொண்டு முதலீடு செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அதே போல் சிலர் வங்கிகளில் கடன் பெற்று முதலீடு செய்திருப்பார். இது போன்ற நேரங்களில் உங்களால் மாதா மாதம் EMI செலுத்த முடியுமா.. அதற்கான வட்டி விகிதங்கள் மற்றும் நீங்கள் வாங்கிய இடம், இந்த கடனை அடைத்த பிறகு உங்களுக்கு உதவும் வகையில் இருக்குமா.. என்ற காரணிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நீங்கள் கடன் வாங்கி வாங்கும் சொத்து பிற்காலத்தில் மதிப்பற்றதாக இருக்கும் போது நிலம் வாங்கியதில் எந்த பிரயோஜனமும் இருக்காது.
சொத்தில் உள்ள பிரச்சனை: நீங்கள் வாங்க இருக்கும் சொத்தின் சட்டபூர்வ நிலையை சரி பார்க்கவும். சொத்து உரிமையாளரின் தகவல்கள் உண்மையா.. மற்றும் பிற சட்ட ஆவணங்கள் சரியானதாக உள்ளதா.. என்பதை சரி பார்க்கவும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் நீங்கள் சட்ட சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். இது போன்ற மோசடிகளும் நடக்கிறது. யாரோ ஒருவருடைய சொத்தை தன் சொத்து போல காட்டிக் கொண்டு பிறரை ஏமாற்றி விற்று விடுகின்றனர். இது தெரியாத மக்கள் வாங்கிவிட்டு அதற்குப் பிறகு பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications