ஹோம் லோன் வாங்கியுள்ளீர்களா? இதை மட்டும் பண்ணுங்க.. இனி EMI திண்டாட்டமே இல்லை!

சென்னை: வீட்டுக் கடன் வாங்கி சொந்த வீட்டை வாங்குவது தான், தற்போது அதிக அளவிலான நபர்கள் தேர்ந்தெடுக்கும் முடிவாக இருக்கிறது. மலிவான வட்டி விகிதங்களில் நீண்ட கால கடன் வசதியை இந்த வீட்டுக் கடன்கள் வழங்குகின்றன. இதனால் ஒரே பேமெண்டாக செலுத்தித் தங்களுக்கு பிடித்த வீடுகளை வாங்குவதற்கு முடியாதவர்கள், வீட்டுக் கடன்களைப் பயன்படுத்துகின்றனர். சிலர் வீட்டு கடன்களை வாங்கிவிட்டு மாதா மாதம் அதனை கட்டுவதற்கு சிரமப்படுகின்றனர். இதுபோன்ற நபர்கள் வீட்டுக் கடன் பெறும்போது கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை, இந்த கட்டுரையில் பார்ப்போம்.

வீட்டுக் கடன் EMI: வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தைப் பொறுத்து உங்கள் மாத EMI நிர்ணயிக்கப்படுகிறது. நீண்ட காலத்திற்கு வீட்டுக் கடன்களுக்கான கால அளவை அதிகரிப்பதால் உங்கள் EMI தொகை குறைகிறது. ஆனால், நீண்ட கால கடனுடன், நீங்கள் நீண்ட காலத்திற்கு EMI செலுத்துவதால், மொத்த வட்டி செலவு அதிகரிக்கலாம். இதற்கு மாறாக, குறைவான கால கடன் அதிக EMI-ஐ கொண்டிருக்கும், ஆனால் மொத்த வட்டியைக் குறைக்கும். இதற்கு சிறந்த வழி, வீட்டுக் கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தி, நீங்கள் நிர்வகிக்கக்கூடிய EMI தொகையை வழங்கும் குறுகிய காலக் கடனை கண்டறிவதுதான்.

 ஹோம் லோன் வாங்கியுள்ளீர்களா? இதை மட்டும் பண்ணுங்க.. இனி  EMI திண்டாட்டமே இல்லை!


சிபில் ஸ்கோர்: நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால் வீட்டுக் கடனை வழங்குபவர்கள், உங்களை நம்பகமான கடன் பெறுபவராக பார்ப்பார்கள். சிபில் ஸ்கோர் நீங்கள் எவ்வாறு உங்களுடைய முந்தைய கடனை திருப்பி செலுத்தி இருக்கிறீர்கள், அவற்றைச் சரியான நேரத்திற்கு திருப்பி செலுத்தி இருக்கிறீர்களா.. என்பதைப் பொறுத்து இந்த சிபில் ஸ்கோர் அமையும். எனவே, ஒருவருடைய சிபில் ஸ்கோரை வைத்து அவரின் கடன் வரலாறு மொத்தத்தையும் ஒரு வங்கி தெரிந்து வைத்து விடும். நல்ல சிபில் ஸ்கோரை பராமரிப்பது நீங்கள் எளிதில் கடன் பெற உதவும்.

வெளிப்படையாக இருங்கள்: உங்கள் கடன் வழங்குனரிடம் உங்கள் வருமானம் சார்ந்த அனைத்து ஆதாரங்களையும் வெளிப்படையாகக் கூறுங்கள். அப்பொழுதுதான் உங்களுடைய வருமானத்திற்கு ஏற்ற EMI வரம்பை அவர்கள் நிர்ணய எடுத்துக் கூறுவார்கள். சிலர் அவர்களுக்கே தெரியாமல் அதிக அளவிலான கடன்களை வாங்கிவிட்டு பின்னர் EMI செலுத்தும் போது சிரமப்படுவார்கள். உங்களுடைய வருமானத்தின் சான்றுகளைக் காண்பிக்கும் போது வங்கிகளே உங்களுக்கு ஏற்ற மாத EMI தொகையை கூறிவிடும். கடன் வாங்கும் போது வெளிப்படைத் தன்மை ரொம்ப முக்கியம். உங்களுடைய உண்மையான வருமானத்தை மறைத்து கடன் வாங்குவது பின் நாளில் உங்களை சிரமப்பட வைத்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ப்ரீ பேமெண்ட் வசதிகள்: வீட்டுக் கடன்களை வழங்குபவர்கள் உங்களின் ஒரு பகுதி தவணையை முன்கூட்டியே செலுத்தும் வசதிகளை வழங்குகின்றன. இது கடன் தொகையை குறைக்க உதவுகிறது. அதாவது நீங்கள் கடன் வாங்கிவிட்டு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்கள் கடனின் அளவை குறைக்க ஏதேனும் ஒரு தொகையை அசலில் வரவு வைக்கலாம். இதற்கு சில வங்கிகள் 1 முதல் 3 மாத கால அவகாசத்திற்கு பிறகு இந்த வசதியை வழங்குகின்றன. சில வங்கிகள் 1 முதல் 6 மாத காலத்திற்குப் பிறகு, இந்த வசதியை வழங்குகின்றன. உங்கள் கடன் வழங்குனரின் ப்ரீ பேமெண்ட் திட்டங்கள் குறித்து முன்னரே அறிந்து வைத்திருப்பது அவசியம். கடன் வாங்கிய பிறகு உங்களுக்கு ஏதேனும் தொகை கைக்கு வந்து அவற்றை வைத்து நீங்கள் வீட்டு கடன்களை அடைக்க விரும்பினால், அடைக்கலாம்.

ஹோம் லோன் ட்ரான்ஸ்ஃபர்: உங்களுடைய முந்தைய கடன் வழங்குநர் அதிக வட்டியை வசூலித்தால் அந்தக் கடனை வேறு வங்கிக்கு ஹோம் லோன் ட்ரான்ஸ்பர் மூலமாக மாற்றிக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் மாற்றும்போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதாவது உங்கள் முந்தைய கடன் வழங்குநரை விட நீங்கள் மாற்ற இருக்கும் கடன் வழங்குநர் குறைந்த வட்டியை வசூலிக்கிறாரா.. மேலும் பிராசசிங் கட்டணங்கள் எவ்வாறு உள்ளது என்பது போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதுபோன்ற சில விவரங்களை தெரிந்து கொள்ளாமல் லோன் ட்ரான்ஸ்ஃபர் செய்தால் சில நேரங்களில் முந்தைய கடன் வழங்குனரின் வட்டி விகிதமும், தற்போது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள வங்கியின் வட்டி விகிதமும் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+