பெண்களுக்கு ஏற்ற அசத்தலான 5 வேலை வாய்ப்புகள்.. வீட்டிலிருந்தே செம்மையா சம்பாதிக்கலாம்!

இப்போது உள்ள சூழலில் ஒரு குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி ஆகிய இருவரும் வேலைக்கு சென்றால் மட்டுமே எதிர்காலத் தேவைக்காக நிதியை சேமிக்க முடியும். ஆனால் சிறு குழந்தைகளை பராமரிக்க வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உள்ளதால் ஒருவர் மட்டுமே வேலைக்குச் செல்ல முடியும். இதுபோன்ற சமயங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகள் பெண்களுக்கு உள்ளது. இதில் அவர்களுக்கு ஏற்ற வேலையை தேர்வு செய்து பணியாற்றலாம். வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் குடும்ப வாழ்க்கையை திறம்பட சமநிலைப்படுத்த முடியும்.

இல்லத்தரசியாக இருந்தால் தங்களுடைய குழந்தைகளை பார்த்துக் கொண்டே வீட்டிலிருந்து வேலை பார்க்க வேண்டும் என்று எண்ணுவது வழக்கமான ஒன்றுதான். இது போன்ற எண்ணம் கொண்ட இல்லத்தரசிகள், கீழ்காணும் வேலை வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கலாம். இதில் ஏதேனும் வேலை உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் அவற்றை நீங்கள் வீட்டில் இருந்தே செய்யலாம்.

 பெண்களுக்கு ஏற்ற அசத்தலான 5 வேலை வாய்ப்புகள்.. வீட்டிலிருந்தே செம்மையா சம்பாதிக்கலாம்!

டேட்டா என்ட்ரி (Data Entry): இந்த வேலைக்கு கணினி, இணைய இணைப்பு மற்றும் டைப்ரைட்டிங் போன்ற குறைந்தபட்ச திறன்கள் தேவைப்படும். பல்வேறு ஃப்ரீலான்சிங் தளங்கள் இந்த வேலைகளை வழங்குகிறது.

எனவே அவர்கள் கொடுத்துள்ள ஜாப் டிஸ்கிரிப்ஷன் என்ன என்பதை தெரிந்து கொண்டு அவர்களை தொடர்பு கொண்டு பிற விவரங்களை கேட்டு அறியலாம்.

பிளாக்கிங்: உங்களுக்கு வார்த்தைகளை வைத்து நன்றாக எழுதவரும் என்றால், பிளாக்கிங் வேலையை நீங்கள் செய்யலாம். பல நிறுவனங்கள் எழுத்தாளர்களை தேடுகிறது, காப்பி ரைட்டிங், கோஸ்ட் ரைட்டிங், மற்றும் கன்டென்ட் ரைட்டிங் போன்ற வேலைகள் கிடைக்கும். அப்வொர்க் போன்ற தளங்கள் பல ஃப்ரீலான்ஸ் வேலைகளை வழங்குறது. இதில் சேர்ந்து வீட்டிலிருந்தே நீங்கள் சம்பாதிக்கலாம்.

யூடியூப்: YouTube தளத்தை பயன்படுத்தி பலர் பணம் சம்பாதிக்கின்றனர். நீங்களும் அவ்வாறு செய்து உங்களுக்குப் பிடித்த விஷயங்களை வீடியோ எடுத்து யூடியூப்-இல் அப்லோட் செய்யலாம்.

உங்களுடைய வீடியோ பலரை ஈர்த்து நல்ல views-களை பெற்றால் உங்களுக்கு யூடியூப் நிறுவனத்திடம் இருந்து பணம் வழங்கப்படும். உங்களுக்கு எடிட்டிங் திறமை இருந்தால் அதனை ஸ்க்ரீன் ரெக்கார்ட் செய்து அதனை அப்லோட் செய்யலாம் அல்லது சமையல் தெரிந்தால், அதனை வீடியோ எடுத்த அப்லோட் செய்யலாம். உங்களுக்கு வரும் views-களை பொறுத்து உங்களுக்கு பணம் வழங்கப்படும். இதனை நீங்கள் ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தியே தொடங்கலாம்.

கிராஃப்ட் ஒர்க்: பேப்பியர் மேச், எம்பிராய்டரி, குரோச்செட் அல்லது மண்பாண்டங்கள் போன்ற கைவினைப்பொருட்கள் செய்வதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், உங்களுடைய தயாரிப்புகளை ஆன்லைனில் விற்கலாம். இது போன்ற ஃபேஷன் திறன் மற்றும் craft பொருட்களுக்கு ஆன்லைனில் எப்பொழுதும் மதிப்பு இருக்கும். இதில் முக்கியமானவை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும். மேலும் அதனை தொடர்ந்து செய்ய முடியுமா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

அமேசான் போன்ற தளங்களில் விற்பனை செய்வதற்கு முன் உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

மொழிபெயர்ப்பு (Translation): நீங்கள் பல மொழிகளில் புலமை பெற்றவராக இருந்தால், இந்த வேலை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வீட்டிலிருந்தே மொழிபெயர்ப்புப் பணியை நீங்கள் தொடரலாம், இந்த வேலைக்கு குறிப்பாக ஆங்கிலம் தேவைப்படும். மேலும் ஒன்று அல்லது இரண்டு இந்திய மொழிகள் உங்களுக்கு தெரிந்தால் இந்த வேலையை செய்யலாம்.

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் வரை பல்வேறு நிறுவனங்களுக்கும் அவற்றின் செயல்பாடுகளுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+