இந்தியாவில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை முன்னெச்சரிக்கை இன்றி நரேந்திர மோடி செல்லாது என அறிவித்தது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது யாராலும் மறக்க முடியாது. இந்த அறிவிப்பு வெளியான முதல் இரண்டு நாட்கள் மக்கள் பாராட்டி வந்த நிலையில் அடுத்த நாளில் இதன் பாதிப்புகளை உணர்ந்தனர்.
இந்நிலையில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் முழுமையாக முடிந்த நிலையில் இந்தியாவில் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம். வங்கி கணக்கு முதல் ஏடிஎம் வரை..
2000 ரூபாய் நோட்டு
பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மோடி அரசு தடை செய்த பின்பு மக்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை மாற்றிக்கொள்ள வங்கிகளுக்கு அதிகளவில் படையெடுத்த காரணத்தால் பணத் தட்டுப்பாடு அதிகரித்தது.
இதன் பின்பு பணத் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் விதமாக மோடி அரசு முதல் முறையாக இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டுப் புழக்கத்திற்கு வந்தது.
இந்த 2000 ரூபாய் நோட்டில் சிப் இருப்பதாகவும், செயற்கைக்கோள் வாயிலாக இதை டிராக் செய்ய முடியும் என்ற வதந்திகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
டிஜிட்டல் பொருளாதாரம்
மத்திய அரசு முதலில் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகப் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தது. ஆனால் வங்கிகளிலும், வங்கி கணக்கிலும் செய்யப்பட்ட பல மோசடிகள் மூலம் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது என உணர்ந்து, டிஜிட்டல் பொருளாதாரத்தையும், டிஜிட்டல் பேண்மென்ட்-ஐ மேம்படுத்த வேண்டும் என அறிவித்தது.
வங்கி வாசல்
மத்திய அரசு 2016 நவம்பர் 8ஆம் தேதி பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்த பின்பு மக்கள் தங்களிடம் இருக்கும் பணத்தைப் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்ற வேண்டும் என்பதற்காக வங்கி வாசலிலேயே காத்துக்கிடந்தனர். இதில் பலர் உயிரையும் விட்டனர்.
டிஜிட்டல் பேமெண்ட் சேவை
மத்திய அரசின் உந்துதல் காரணமாக இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டது, குறிப்பாக மத்திய அரசு உருவாக்கிய யூபிஐ பேமெண்ட் தளம் இந்தியாவில் மாபெரும் புரட்சியைச் செய்துள்ளது.
டிஜிட்டல் பணப் பரிமாற்றம்
டிஜிட்டல் பணப் பரிமாற்றம் மற்றும் டிஜிட்டல் நிதியியல் சேவைகள் நகரங்களில் அதிகளவிலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக நாடுகளிலேயே அதிகத் தொகையை டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்த நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
யூபிஐ
இந்தியாவில் தற்போது முக்கிய டிஜிட்டல் பணப் பரிமாற்றமாக இருப்பது யூபிஐ தான், பணப் பரிமாற்றத்திலிருந்து பேமெண்ட் வரையில் முக்கியப் பரிமாற்ற தளமாக உள்ளது. ஆனால் கிராமம் மற்றும் சிறிய டவுன் பகுதிகளிலும் இன்னமும் டிஜிட்டல் நிதி சேவைகளைக் கொண்டு சேர்க்க முடியவில்லை.
ஜன் தன் யோஜனா
இந்த நிலையில் இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வங்கி மற்றும் டிஜிட்டல் சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இலவச வங்கி கணக்குகளை ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் அளிக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் இதுவே மக்களுக்குச் சுமையாக மாறியது என்றால் மிகையில்லை.
பொதுத்துறை வங்கிகள்
ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் வங்கி கணக்கைத் திறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் முறையாக வங்கி கணக்குத் திறப்பவர்கள், அல்லது ஏழை எளிய மக்களாக இருக்கிறார்கள். தனியார் வங்கியும் இக்கணக்குகளைத் திறக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தாலும், பொதுத்துறை வங்கிகள் தான் இத்திட்டத்தின் கீழ் அதிக வங்கி கணக்குகளைத் திறந்தது.
மினிமம் பேலென்ஸ்
ஆனால் ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் திறந்த கணக்குகளுக்கு மினிமம் பேலென்ஸ் நிர்ணயம் செய்து, அதைப் பின்பற்றாதவர்கள் கணக்கில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டதால் பல கோடிப் பேர் பாதிக்கப்பட்டது. வங்கிகள் எளிய மக்களின் பணத்தை அபராதம் பெயரில் அபகரித்ததாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தது.
ஏடிஎம் பயன்பாடு
நகரங்களில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் வந்துவிட்ட நிலையில் ஏடிஎம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் கிராமம் மற்றும் சிறு டவுன் பகுதிகளில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் முழுமையாக வராத நிலையில் மக்கள் ஏடிஎம் இயந்திரத்தைத் தான் நம்பியுள்ளனர்.
சுத்தி சுத்தி பிரச்சனை
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் அதிகரித்து அதிகளவிலான சுமையை மக்களுக்கு இந்த 5 ஆண்டுகளில் அளிக்கப்பட்டது. இப்படிச் சுத்தி சுத்தி பல பிரச்சனைகள் இருக்கும் காரணத்தாலேயே மக்கள் பணத்தைக் கையில் வைத்திருக்க முன்பை விடவும் அதிகம் விரும்பினர்.
5 ஆண்டுகள்
பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடைசெய்து 5 ஆண்டுகள் முழுமையாக முடிந்தும் இந்தியாவில் இன்னமும் பணம் தான் அனைத்து துறையிலும் முக்கிய நிதி பரிமாற்றமாக உள்ளது. 2021ஆம் நிதியாண்டில் நிதி பரிமாற்றத்தில் ஜிடிபி அளவில் 14.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை
இதன் மூலம் பணமதிப்பிழப்பு அறிவிக்க முக்கியக் காரணமாக இருந்த கருப்புப் பணத்தையும் ஒழிக்கவில்லை, டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதிலும் பல வகையில் தோல்வி அடைந்த காரணத்தால் தற்போது ஜிடிபி அளவில் 14.5 சதவீதம் பணம் மக்கள் கையில் உள்ளது. இது 2015 அளவீடு அதாவது பணமதிப்பிழப்பு அறிவிக்கும் முன்பு இருந்த அளவீட்டை விடவும் அதிகமாகும்.
இதனால் இந்தியாவில் எதுவும் மாறவில்லை என்பது தெரிகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications