இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தங்களுடைய ஊழியர்களிl 2 சதவீதம் பேர் அதாவது 12 ஆயிரம் பேரை நடப்பு நிதியாண்டில் வேலையை விட்டு நீக்குவதாக கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இது ஐடி துறையில் வேலை செய்யும் பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
டிசிஎஸ் உள்ளிட்ட பல்வேறு ஐடி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை அதிகாரப்பூர்வமாக பணிநீக்கம் செய்யாமல் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அதாவது அதிகாரப்பூர்வமாக ஒரு குறிப்பிட்ட நபர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துவிட்டு மீதமுள்ள ஊழியர்களை கட்டாயப்படுத்தி அவர்களையே ராஜினாமா செய்து வெளியேற செய்வது. பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தற்போது இந்த உத்தியை கையாண்டு தான் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. இதனை தான் silent layoff என அழைக்கின்றனர்.

ஒரு ஐடி ஊழியர் எக்னாமிக் டைம்ஸ்க்கு அளித்துள்ள பேட்டியில் ஹெச்ஆர் என்னை அழைத்தார் இனி நீங்கள் இந்த நிறுவனத்திற்கு தேவை இல்லை உடனடியாக வெளியேறி விடுங்கள் என கூறினார் என்கிறார். மற்றொரு ஊழியர் என்னை மீட்டிங் இருக்கு என அழைத்தார்கள் இன்று தான் நீங்கள் இந்த நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய கடைசி நாள் என கூறினார்கள் மூன்று மாத சம்பளத்தோடு என்னை ராஜினாமா செய்ய சொல்லி வெளியேற்றினார்கள் என தெரிவித்திருக்கிறார்.
ஒரு நபர் என்னுடைய மேலாளர் ஒரு பட்டியலை தயாரித்து வைத்திருக்கிறார் . இவர்கள் அனைவருக்கும் வேறு வேலை தேடிக் கொள்வதற்கு 3 மாதங்கள் வாய்ப்பு வழங்குகிறோம் என கூறினார் என ஒரு ஐடி ஊழியர் தெரிவித்திருக்கிறார் . டெக் நிறுவனங்கள் ஏஐ பயன்பாட்டினை அதிகரித்திருப்பது ,அமெரிக்க நிறுவனங்கள் ஐடி சேவைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்தது என பல்வேறு காரணங்கள் ஐடி துறையின் மந்த நிலைக்கும், நிறுவனங்கள் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பதற்கும் காரணமாக முன்வைக்கப்படுகின்றன.
இத்தகைய சூழலில் அமெரிக்காவை சேர்ந்த ஹெச்எஃப்எஸ் ரிசர்ச் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் ஊழியர்களை புதிதாக பணிக்கு அமர்த்தாமல் இருக்கும் ஊழியர்களுக்கு பதவி உயர்வை வழங்காமல் தாமதப்படுத்தி வருகின்றன, செயல் திறன் சரியில்லை என போலியான காரணங்களை கூறி பணி நீக்கம் செய்கின்றன சில சமயங்களில் கட்டாயப்படுத்தி ஊழியர்களையே ராஜினாமா செய்ய வைக்கின்றன என கூறுகிறது. இந்த சைலன்ட் லேஆஃப் ஐடி ஊழியர்களுக்கு பேராபத்தாக அமைந்திருக்கிறது என தெரிவிக்கிறது.

தற்போது தனிப்பட்ட திறன்கள் கொண்ட நபர்களை தான் நிறுவனங்கள் வேலையில் தக்க வைத்துக் கொள்கின்றன எனக் கூறும் டீம் லீஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் சர்மா கூறுகிறார். 2025 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 55 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரம் பேர் வரை வேலை இழக்கக்கூடும் எனக் கூறியிருக்கிறார். ஜூலை மாதத்தில் இருந்து தற்போது வரை அசெஞ்சர், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கிட்டதட்ட 23,000 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றன.
நாள்தோறும் ஐடி ஊழியர்கள் தங்களுக்கு மின்னஞ்சல் வந்துவிடுமோ தங்களுக்கு ஹெச் ஆர் இடம் இருந்து அழைப்பு வந்து விடுமோ என்ற அச்சத்துடன் வேலை செய்து வருகின்றனர் . டிசிஎஸ் 6000 பேரை தான் இதுவரை வேலையில் இருந்து நீக்கியதாக அறிவித்துள்ளது. ஆனால் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கையில் 19,755 பேர் குறைந்து இருக்கின்றனர். இவர்கள் கட்டாய ராஜினாமா செய்ய வைக்கப்பட்டவர்கள் ஒரு சாரார் கூறுகின்றனர். டிசிஎஸ்-இன் இந்த நடவடிக்கை அத்தோடு நின்றுவிடாது மற்ற நிறுவனங்களும் இதனை பின்பற்றும்.
குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் என்றால் நிச்சயமாக அவர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லை ஐடி நிறுவனங்களை பொறுத்தவரை 10 முதல் 25 ஆண்டுகள் வரையிலான பணி அனுபவம் கொண்ட ஊழியர்களுக்கு தான் இந்த பணி நீக்கத்தில் குறி வைக்கின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் நேரடியாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யாமல் கட்டாயப்படுத்தி அவர்களை வேலையில் இருந்து நீக்கி சாமர்த்தியமாக செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவின் 283 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அவுட்சோர்சிங் துறை தற்போது பெரும் சிக்கலில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருபுறம் மேக்ரோ பொருளாதார நிலையற்ற தன்மை, கிளைண்டுகள் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது உள்ளிட்டவை இதற்கு காரணமாக கூறலாம்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications