Work From Home-க்கு மூடு விழா.. இனியும் எதிர்பார்க்காதீங்க பாஸ்..! ரெசிஷன் எதிரொலியா..?

இந்திய நிறுவனங்கள் அனைத்தும் உலக நாடுகளில் எதிரொலிக்கும் பொருளாதார மந்தநிலையை எப்படி சமாளிப்பது என்பதை தீவிரமாக யோசித்து வருகிறது.

இந்தியாவில் எட்டெக் (EdTech) நிறுவனங்களை தாண்டி முதல் நிறுவனமாக சோமேட்டோ 3 சதவீத ஊழியர்களை தனது கார்ப்பரேட் பிரிவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் குறைந்தது 100 பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.

அமெரிக்கா முதல் ஜப்பான் வரையில் உலகின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.

வொர்க் ப்ரம் ஹோம்

வொர்க் ப்ரம் ஹோம்

இதேவேளையில் பெரும்பாலான நிறுவனங்களில் தற்போது எடுக்கப்படும் முக்கியமான நடவடிக்கை என்றால் ஊழியர்களுக்கு கடந்த 3 வருடமாக அளித்து வந்த வொர்க் ப்ரம் ஹோம் சலுகை மொத்தமாக ரத்து செய்து ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைப்பது தான்.

இந்தியாவில் இதன் நிலைமை என்ன தெரியுமா..?

இந்திய சந்தை

இந்திய சந்தை

இந்திய சந்தையில் தற்போது ஒட்டுமொத்த நிறுவனங்களும் எப்படியாவது ரெசிஷன் பாதிப்பில் இருந்து தப்பித்து விட வேண்டும் என்பது தான், இதற்காக ஊழியர்களிடம் இருந்து அதிகப்படியான பணிதிறனை பெற வேண்டும் என்பது 90 சதவீத நிறுவனங்களின் முக்கிய குறிக்கோளாக உள்ளது.

வொர்க் ப்ரம் ஹோம் சலுகை

வொர்க் ப்ரம் ஹோம் சலுகை

இதை சாத்தியமாக்க இந்திய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை ரத்து செய்ய துவங்கியுள்ளது. Randstad அமைப்பு செய்த ஆய்வில் இந்தியாவில் சுமார் 46 சதவீத நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மொத்தமாக அலுவலகத்திற்கு வரவழைக்கும் முடிவில் உள்ளது.

ஹைப்ரிட் வொர்க் மாடல்

ஹைப்ரிட் வொர்க் மாடல்

மேலும் 32 சதவீதம் நிறுவனங்கள் ஹைப்ரிட் வொர்க் மாடலை கொடுத்துள்ளனர், 16 சதவீதம் நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை கொடுத்துள்ளது.

உற்பத்தி நிறுவனங்கள்

உற்பத்தி நிறுவனங்கள்

இந்தியாவில் பெரும்பாலான உற்பத்தி துறை நிறுவனங்களில் ஊழியர்கள் வந்து ஆக வேண்டிய கட்டாயம் இருக்கும் காரணத்தால் அனைவரும் வருகின்றனர். உற்பத்தி துறையை தொடர்ந்து BFSI துறையில் 68 சதவீதம் நிறுவனங்களில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருகின்றனர்.

பிற துறைகள்

பிற துறைகள்

இதை தொடர்ந்து ரீடைல் துறையில் 57 சதவீதம் ஊழியர்களை மொத்தமாக அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளது. ஐடி துறையில் 53 சதவீதம், BPO துறையில் 45 சதவீத நிறுவனங்கள் ஹைப்ரிட் மாடலில் இயங்கி வருகிறது, 24 சதவீத BPO நிறுவனங்கள், 18 சதவீத ஐடி நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் மாடலில் இயங்கி வருகிறது என Randstad நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகிறது.

BPO/IT/tech ஊழியர்கள்

BPO/IT/tech ஊழியர்கள்

செப்டம்பர் மாதத்தின் 2 வது வாரத்தில் முடிக்கப்பட்ட இந்த ஆய்வில் BPO/IT/tech ஊழியர்களின் வேலைதிறன் வீட்டில் இருந்து பணியாற்றும் போது மிகவும் சிறப்பாக இருந்ததாக கூறப்படும் நிலையில் வொர்க் ப்ரம் ஹோம் சலுகை குறித்து ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் தொடர்ந்து எதிரும் புதிருமாகவே உள்ளது.

பெண் ஊழியர்கள்

பெண் ஊழியர்கள்

BPO/IT/tech நிறுவனங்களில் பெண் ஊழியர்கள் அதிகமானோர் வீட்டில் இருந்து பணியாற்று வதை தான் விரும்புகின்றனர். இதேபோல் பெரு நகரங்களில் இருக்கும் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற விரும்புகின்றனர். குறைந்த பட்சம் ஹைப்ரிட் மாடல் எதிர்பார்க்கின்றனர்.

வேலை திறன்

வேலை திறன்

ஆனால் ஊழியர்களின் முழுமையான வேலை திறன் பெற முடியாத அனைத்து நிறுவனங்கள், துறைகளும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவழைப்பது தவிர வேறு வழியே இல்லை என கூறுகின்றனர். இதேபோல் ரெசிஷன் அச்சத்தில் அதிகமாக இருக்கும் போது நிறுவனங்களுக்கு போதுமான வர்த்தகம் வருவாய் கிடைக்கவில்லை எனில் பணிநீக்கத்தை தவிர வேறு வழியே இல்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+