திரையுலகில் 50 ஆண்டுகள்! ரஜினிகாந்த் தன்னுடைய முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் கால் பதித்து 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் . 170 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார் .இவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் வணிகரீதியாக பெருமளவில் வெற்றி பெற்றவை .

கூலி படம்: இன்றளவும் ரஜினியின் திரைப்படம் வெளியாகிறது என்றால் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களின் கொண்டாட்டம் கொஞ்சம் கூட குறையவில்லை. தமிழ்நாடு கடந்து வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய தமிழர்களும் சரி இந்தியர்களும் சரி ரஜினியின் திரைப்பட வெளியீட்டை ஒரு திருவிழாவைப் போல கொண்டாடுகின்றனர்.

திரையுலகில் 50 ஆண்டுகள்! ரஜினிகாந்த் தன்னுடைய முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

50 ஆண்டுகள் சினிமா பயணம்: ரஜினியின் 50 ஆண்டு கால சினிமா பயணத்தின் முக்கிய மைல் கல்லாக கூலி திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு அவர் 200 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றிருக்கிறார். ரஜினிகாந்தை பொறுத்தவரை மிக சாதாரண ஒரு பின்புலத்திலிருந்து திரைத்துறைக்கு வந்து வெற்றி பெற்றவர். கூலி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூலியாக தான் வேலை பார்த்ததை நினைவு கூர்ந்தார்.

கூலியாக அரிசி மூட்டை தூக்கியவர்: கூலியாக அரிசி மூட்டைகளை ஏற்றி இறக்க வேண்டும் ஒரு மூட்டையை இறக்கினால் 10 பைசா கிடைக்கும், அதற்காக எவ்வளவு சிரமப்பட்டேன் என்பதை அவர் பகிர்ந்தார். நிஜக்கூலியாக 10 பைசா சம்பளம் வாங்கிய ரஜினி தான் தற்போது திரையில் கூலி என்ற படத்திற்காக 200 கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறார்.

திரையுலகில் 50 ஆண்டுகள்! ரஜினிகாந்த் தன்னுடைய முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சூப்பர் ஸ்டார்: ரஜினிகாந்த் கூலியாக வேலை செய்து பின்னர் பஸ் கண்டக்டராக வேலை செய்தவர். பிற்காலத்தில் சென்னைக்கு வந்த அவருக்கு திரைத்துறையில் வில்லன் கதாபாத்திரம் கிடைத்தது அப்படியே ஹீரோவாக களமிறங்கிய ரஜினிகாந்த் தி ஒன்லி சூப்பர் ஸ்டாராக இன்றும் திகழ்கிறார்.

முதல் படம் சம்பளம்: ரஜினிகாந்த் திரைத்துறையில் கால் பதித்து 25 ஆண்டுகள் ஆகின்றன. 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்கு அவர் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் 1978ஆம் ஆண்டு அவர் பைரவி படத்தில் நடித்த போது அவருடைய சம்பளம் 50,000 ரூபாய் . இந்த படத்திற்கு அவர் 5000 ரூபாய் அட்வான்ஸ் தொகையாக பெற்றாராம்.

ரஜினியின் சம்பளம்: அதற்கு முன்பு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த போதெல்லாம் குறைந்தபட்ச தொகையையே இவர் சம்பளமாக வாங்கி வந்திருக்கிறார் . பிரியா திரைப்படத்தில் 1 லட்சம் ரூபாயை சம்பளமாக வாங்கி இருக்கிறார். அப்படியே படிப்படியாக சம்பளத்தை உயர்த்தி வந்தார். படம் வெளியாகி நன்றாக ஓடும் போது போனஸ் தொகையாகவும், இவருக்கு கணிசமான வருமானம் கிடைக்கும்.

இப்போது சம்பளம் எவ்வளவு: தற்போது ரஜினிகாந்தின் சம்பளம் கிட்டத்தட்ட 200 கோடிகளை கடந்திருக்கிறது . கூலி படத்தில் அவருக்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் இருப்பதாக சொல்லப்படுகிறது . ரஜினியின் நிகர சொத்து மதிப்பு 430 கோடி ரூபாயாக இருக்கிறது. போயல் கார்டனில் உள்ள இவரது இல்லம் 30 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+