ஊழியர்களுக்கான உலகின் மிகப்பெரிய சமுக வலைதளமாக இருக்கும் லிங்க்டுஇன் தளத்தில் சுமார் 50 கோடி வாடிக்கையாளர்களின் பர்சனல் சேட்டா திருடப்பட்ட டார்க் வெப் தளத்தில் விற்பனைக்குப் பட்டியலிடப்பட்டு உள்ளது. 50 கோடி வாடிக்கையாளர்கள் என்பது லிங்க்டுஇன் தளத்தின் மொத்த வாடிக்கையாளர்களில் 3ல் 2 பங்காகும்.

விற்பனைக்குப் போடப்பட்டு உள்ள தரவுகளில் 50 கோடி பயனர்களின் பெயர், ஈமெயில், போன் நம்பர், வேலை செய்யும் நிறுவனத்தின் தரவுகள், சமூக வலைத்தள இணைப்புகள் எனப் பல முக்கியத் தரவுகள் விற்பனை செய்யப்பட உள்ளதாகச் சைபர் நியூஸ் இந்தத் தகவல் திருட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
சமீபத்தில் பேஸ்புக் தகவல் திருட்டுக் குறித்துப் பெரும் அதிர்ச்சியை அளித்த நிலையில் தற்போது லின்க்டுஇன் தளத்தில் ஏற்பட்டு உள்ள தகவல் திருட்டு மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தகவல் திருட்டு குறித்து லிங்க்டுஇன் ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. 50 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை ஹேக்கிங் செய்து திருடப்படவில்லை, இதற்கு மாறாகப் பாட்ஸ் (Bots) உபயோகித்துத் தளத்தில் இருக்கும் தகவல்கள் சுறண்டப்பட்டு உள்ளது என்று லிங்க்டுஇன் தெரிவித்துள்ளது. மேலும் லிங்க்டுஇன் தளத்தில் முறையற்ற வகையில் நுழைவுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது, இதன் மூலம் லிங்க்டுஇன் தளம் பாதுகாப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
பாட்களைப் பயன்படுத்தித் தளத்தில் publicly viewable data பிரிவில் இருக்கும் தரவுகள் மட்டுமே தற்போது திருடப்பட்டு உள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ளவும் முயற்சி செய்வதாகத் தெரிவித்துள்ளது லிங்க்டுஇன்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications