செயற்கை நுண்ணறிவு (AI) சேவை தளமான சாட்பாட் டிஜிட்டல் சேவையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கும் வேளையில் அதன் உரிமையாளரான OpenAI நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
OpenAI நிறுவனர்களில் ஒருவரான இஸ்ரேல் நாட்டை சேர்ந்த Ilya Sutskever தலைமையிலான நிர்வாக குழு சிஇஓ மற்றும் இணை நிறுவனரான சாம் ஆல்ட்மேன்-ஐ நிறுவனத்தை விட்டு நீக்கியதில் இருந்து பெரும் பிரச்சனையாக மாறியது.

இந்த நிலையில் இன்றும் சாம் ஆல்ட்மேன் OpenAI நிறுவனத்திற்குள் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் என்ற அடையாள அட்டை இல்லாமல் கெஸ்ட் என்ற அடையாள அட்டை உடன் சென்ற போட்டோவை டிவிட்டரில் பகிர்ந்தார். இது பெரிய அளவில் வைரலானது, சாம் ஆல்ட்மேன் போட்டோ பதிவிட்டு அடுத்த சில மணிநேரத்தில் ஒரு செய்தி..
OpenAI நிறுவன ஊழியர்கள், நிறுவனத்தின் இயக்குநர்கள் நிர்வாக குழுவில் இருந்து விலகத் தவறினால், ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டியதாக நவம்பர் 20ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
OpenAI நிறுவனத்தின் சுமார் 505 ஊழியர்கள் புதிய மைக்ரோசாஃப்ட் AI குழுவிற்கு மாறப்போவதாக நிறுவனத்தை எச்சரித்ததாக CNN தெரிவித்துள்ளது. ஊழியர்களின் இந்த முடிவுக்கு முக்கியமான காரணம் சாம் ஆல்ட்மேன் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய AI டீம்-ன் தலைவராக அறிவித்துள்ளார்.
சாம் ஆல்ட்மேன் உடன் Gerg Brockman, மற்றும் 3 முக்கிய AI விஞ்ஞானிகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நேற்று நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது சாம் ஆல்ட்மேன் விஸ்வாசியாக இருக்கும் 505 ஊழியர்கள் OpenAI நிறுவனத்தின் இயக்குநர்கள் நிர்வாக குழுவில் இருந்து விலகத் தவறினால், ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வதாக மிரட்டி வருகின்றனர்.
கையெழுத்திட்ட 505 ஊழியர்களில் மீரா முராட்டி, Ilya Sutskever ஆகியோரும் அடங்குவர். இன்று சமர்ப்பித்த அறிக்கையில் திறமையில்லாத நிர்வாகத்தின் கீழ் பணியாற்ற முடியாது, நிர்வாகத்தின் முடிவு OpenAI நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இப்படிப்பட்ட நிறுவனத்தின் கீழ் பணியாற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
கடைசியாக 2 மணி நேரத்திற்கு முன்பு சாம் ஆட்மேன் வெளியேற்றிய Ilya Sutskever வெளியிட்ட டிவீட்டில் OpenAI நிறுவனத்தின் நிர்வாகத்தின் நடவடிக்கைகளில் நான் பங்கேற்றதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். OpenAIக்கு தீங்கு விளைவிக்க நான் ஒருபோதும் விரும்பவில்லை. நாங்கள் ஒன்றாக உருவாக்கிய அனைத்தையும் நான் விரும்புகிறேன், மேலும் நிறுவனத்தை மீண்டும் இணைக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என டிவீட் செய்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications