இந்தியாவின் முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஜின்டால் ஸ்டீல் மற்றும் பவர் நாடுமுழுவதும் ஏற்பட்டு உள்ள ஆக்சிஜன் தேவையை உணர்ந்து தனது தொழிற்சாலைகளில் கொரோனா பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் வாயுவைத் தயாரிக்கத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் ஜின்டால் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனத்தின் தலைவரான நவீன் ஜின்டால் தனது டிவிட்டரில் 500 டன் திரவ நிலையில் ஆக்சிஜன் தயாராக ஒடிசா அன்குள் பகுதியில் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது மட்டும் அல்லாமல் மத்திய பிரதேச மாநில அரசிடம் பேசி, தினமும் எங்களது ராய்கர் தொழிற்சாலையில் இருந்து போதுமான ஆக்சிஜன்-ஐ விநியோகம் செய்து வருகிறோம் எனவும் நவீன் ஜின்டால் தனது
டிவீட்டில் தெரிவித்துள்ளார்.
மேலும் தினமும் 100 டன் ஆக்சிஜனை எந்த மாநிலத்திற்கு வேண்டும் என்றாலும் எங்களால் அனுப்ப முடியும். மேலும் தெலுங்கான, ஆந்திரா பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் அனுப்பத் தத்தம் மாநில அரசிடம் உறுதி அளித்துள்ளோம் என நவீன் ஜின்டால்.

கடைசியாக நவீன் ஜின்டால் நிறுவனத்தால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம் எனவும், விரைவில் இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலை மாறும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது ரிலையன்ஸ், ஜின்டால் உட்படப் பல தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் வாயுவை உற்பத்தி செய்து நாடு முழுவதும் விநியோகம் செய்து வருகிறது. ஆனாலும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ள மக்களுக்குப் போதுமானதாக இல்லை.
மேலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதனைத் தேவையான இடத்தில் கொண்டு சேர்ப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும் காரணத்தால் பிரதமர் மோடி ரயில் சேவை முதல் விமானப் போக்குவரத்து சேவை வரையில் அனைத்தையும் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் பயண நேரம் பெரிய அளவில் குறையும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications