பெங்களூரு: இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களாக ஐஐஎம், ஐஐடி ஆகியவை கருதப்படுகின்றன. இங்கே சீட் கிடைத்துவிட்டால் நல்ல கல்வி கிடைக்கும் என்பதோடு, சிறந்த இடத்தில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. இதற்கு ஏற்ற வகையில் ஐஐஎம் பெங்களூரு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐஐஎம் பெங்களூரில் கல்வி பயின்ற 516 மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஐஎம் பெங்களூரில் இறுதியாண்டு மாணவர்களுக்காக கேம்பஸ் பிளேஸ்மெண்ட் டிரைவ் நடைபெற்றது.

தேசிய அளவிலான மற்றும் உலகளவிலான நிறுவனங்கள் இதில் பங்கேற்றன. இறுதியாக 516 மாணவர்கள் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
மொத்தம் 163 நிறுவனங்கள் கேம்பஸ் மூலம் மாணவர்களுக்கு நேர்காணல்களை நடத்தியுள்ளது. இதில் மாணவர்களுக்கு பல கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் தேர்வான மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஐஐஎம் பெங்களூரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 516 29 மாணவர்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வெளிநாட்டு கன்சல்டிங்கில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே பி மார்கன், ஹெல்த் சிட்டி, கேம் அண்ட் ஐலேண்ட் ஆகிய நிறுவனங்களில் பணி வாய்ப்பு மாணவர்கள் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். இப்படி கேம்பஸ் மூலம் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் மொத்த சம்பள மதிப்பு 32.5 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கன்சல்டிங் துறையில் உள்ள நிறுவனங்கள் அதிக மாணவர்களை வேலைக்கு எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. கன்சல்டிங் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் சுமார் 218 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பளித்துள்ளது.
நிதித்துறை, வங்கி மற்றும் முதலீட்டு துறையை சேர்ந்த நிறுவனங்கள் 81 வேலை வாய்ப்புகளை தந்துள்ளதாகவும், ஐடி மற்றும் இ-காமர்ஸ் துறையை சேர்ந்த நிறுவனங்கள் 49 பணிவாய்ப்புகளை தந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு துறையை சேர்ந்த நிறுவனங்கள் 36 பணி வாய்ப்புகளை தந்துள்ளதாகவும், பெரு நிறுவனங்கள் 30 பணி வாய்ப்புகள் மற்றும் ரீடெயில் நிறுவனங்கள் 28 பணி வாய்ப்புகளை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனலிட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனங்கள் 13 பேருக்கு வேலைவாய்ப்பு தந்துள்ளதாகவும் சுகாதாரத் துறையில் 12 பேர் பணி வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications