இந்த வேலை ரொம்ப போர் அடிக்குதுங்க.. சர்வே-ல் வெளியான சுவாரஸ்ய பதில்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக செய்யும் வேலையை விரும்பி செய்ய வேண்டும். அப்படி வேலை செய்தால் தான் அதில் வளர்ச்சி காண முடியும் என பலரும் நினைப்பதுண்டு. ஆனால் விரும்பும் வேலை எல்லோருக்கும் அமைகிறதா? என்றால் நிச்சயம் இல்லை. கிடைக்கும் வேலையை விரும்பி செய்யும் காலம் இது.

ஆனால் இது குறித்தான ஆய்வொன்றில் 50% பேர், தாங்கள் செய்யும் வேலை, தங்களுக்கு சலிப்பூட்டுவதாகவும் (Boaring) தெரிவித்துள்ளனர்.

இதனால் தற்போது செய்யும் வேலையை விட்டு விட்டு, புதிய வேலையை தேட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பணி நீக்கத்தினை விட.. ஸ்டார்ட் அப்கள் எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருக்காங்க தெரியுமா.. மாஸ்! பணி நீக்கத்தினை விட.. ஸ்டார்ட் அப்கள் எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருக்காங்க தெரியுமா.. மாஸ்!

வேலை சலிப்பூட்டுகிறது

வேலை சலிப்பூட்டுகிறது

இது குறித்த Valuvox நடத்திய ஆய்வில் , இந்தியாவில் வேலைவாய்ப்பின் தற்போதைய சூழ்நிலையைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளது. இது குறித்து இண்டீட் பகிர்ந்துள்ள தகவல்கள் படி, அனைத்து ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களில் 57% பேர் தற்போதைய வேலைகள் சலிப்பூட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

திறனை மேம்படுத்தி புதிய வேலை

திறனை மேம்படுத்தி புதிய வேலை

இதே 50% மேலான ஊழியர்கள் தங்கள் வேலைகளின் மூலம் அதிகமான பணியாளர்கள் திறன் மேற்படுத்துதல் மூலம், புதிய வாய்ப்புகளுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

28% பேர் மகிழ்ச்சி மற்றும் நெகிழ்வுத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், 19% பேர் நல்ல வேலை வாழ்க்கை சம நிலைக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் கூறியுள்ளது.

பணி நீக்கத்தால் கவலை

பணி நீக்கத்தால் கவலை

வேலை தேடுபவர்களில் பெரும்பாலோர் 65% தற்போதைய பணி நீக்கத்தின் மத்தியில், கூடுதல் தூரம் செல்ல தங்கள் விருப்பத்தை நிறுத்திக் கொள்ள விரும்புகிறார்களாம்.

தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், வேலை தேடுவோர் தங்களின் தற்போதைய வேலைகளில் கவலையடைந்துள்ளனர். பணி நீக்கங்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போதைய வேலையிலும் முழுமையாக ஈடுபடத் தயாராக இல்லை எனலாம்.

பிடிக்கவில்லை என்றாலும் தொடர வேண்டிய நிலை

பிடிக்கவில்லை என்றாலும் தொடர வேண்டிய நிலை

இந்தியாவினை பொறுத்தவரையில் பணி நீக்கம் என்பது பற்பல துறைகளிலும் இருந்தாலும், தங்களது பணிகளில் கடுமையான சூழலே இருந்து வருகின்றது. வேலைகளில் விருப்பம் என்பது இல்லாவிட்டாலும், பலரும் தங்களது குடும்ப சூழல் காரணமாகவே தொடரும் நிலையே இருந்து வருகின்றது. அதுவும் இதுபோன்ற நெருக்கடியான சூழலில் வேலையே பிடிக்காவிட்டாலும் தொடர வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளனர்.

எதிர்காலத்தை கணிப்பது கடினம்.. பணி நீக்கம் குறித்து சுந்தர் பிச்சை கருத்து.. குழப்பத்தில் ஊழியர்கள்! எதிர்காலத்தை கணிப்பது கடினம்.. பணி நீக்கம் குறித்து சுந்தர் பிச்சை கருத்து.. குழப்பத்தில் ஊழியர்கள்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

57% of india's employees bored with their jobs

In a recent study conducted in India, over 50% of people said that their work is boring
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X