இந்திய டெலிகாம் சேவை துறையை மாற்றி அமைக்கப்போகும் புதிய தகவல் தொடர்பு சட்டம் 2023 ஜூன் 26 ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படும் வேளையில், 1885 ஆம் ஆண்டின் இந்திய டெலிகிராம் சட்டம் மற்றும் 1933 ஆம் ஆண்டின் இந்திய வயர்லெஸ் டெலிகாம் சட்டம் ஆகிய பழைய சட்டங்கள் முற்றிலுமாக நீக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் அதிவேகமான 5G சேவைகளை நாடு முழுவதும் வரைவாக வழங்கும் நோக்கத்துடன் மத்திய டெலிகாம் துறை 5ஜி அலைக்கற்றைகளின் (spectrum) ஏலம் ஜூன் 27 ஆம் தேதி (இன்று) முதல் தொடங்கவுள்ளது. இந்த ஏலத்தில் 96,000 கோடி ரூபாய் மதிப்பிலான 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்ட உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏலத்தில், வெறும் 10.5 ஜிகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகள் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இது, கடந்த ஆண்டு ஜூலை 2022ல் நடைபெற்ற முதல் 5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட 72 ஜிகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை விட மிகக் குறைவான அளவீடாகும்.
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், மற்றும் வோடபோன் ஐடியா போன்ற முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமே பங்குபெற உள்ளது. அரசு நிறுவனமான BSNL மற்றும் MTNL ஆகியவை தற்போது 4ஜி சேவை அறிமுகப்படுத்தி வருவதால் 5ஜி அலைக்கற்றை தேவைப்படாது.
எனவே இந்த ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொண்டு, 5G சேவைகளுக்கான அலைக்கற்றைகளைப் பெற தீவிரமாக உள்ளன. மொத்தம் எட்டு ஸ்பெக்ட்ரம் பேன்ட்-ல் அலைக்கற்றை ஏலம் விடப்பட்ட உள்ளது. மேலும் இன்று காலை 10.00 முதல் ஸ்பெக்ட்ரம் ஏலம் துவங்கப்பட உள்ளது.
இந்த ஏலத்தில் 800 MHz, 900 MHz, 1,800 MHz, 2,100 MHz, 2,300 MHz, 2,500 MHz, 3,300 MHz, 26 GHz ஆகிய எட்டு ஸ்பெக்ட்ரம் பேன்ட்-ல் அலைக்கற்றை ஏலம் விடப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு 96317 கோடி ரூபாய், இது அரசு நிர்ணயம் செய்த விலை அளவீடாகும்.
ரிலையன்ஸ் ஜியோ: இந்த ஏலத்தில் பங்கேற்க சுமார் 3,000 கோடி ரூபாய் முன்கூட்டிய டெபாசிட் செலுத்தியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இதன் மூலம், அதிக அளவிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
பார்தி ஏர்டெல்: ரிலையன்ஸ் ஜியோ உடன் தொடர்ந்து போட்டிப்போடும் பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக சுமார் 1,050 கோடி ரூபாய் மதிப்பிலான முன்கூட்டிய டெபாசிட் செலுத்தியுள்ளது.
வோடபோன் ஐடியா: இந்த ஏலத்திற்காக 300 கோடி ரூபாய் முன்கூட்டிய டெபாசிட் செலுத்தியுள்ளது வோடபோன் ஐடியா நிறுவனம். குறைந்த செலவில் ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக 26 GHz ஸ்பெக்ட்ரத்தை வாங்குவதில் கவனம் செலுத்தக்கூடும்.
3300 MHz ஸ்பெக்ட்ரம் குறைந்த மூலதன செலவில் 5G சேவைகளை வழங்குவதற்கான முக்கிய அலைவரிசைகளில் ஒன்றாக இருப்பதால், இதன் மீது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டக்கூடும்.


Click it and Unblock the Notifications