இந்திய டெலிகாம் சந்தையை தலைகீழாக மாற்றப்போகும் 5ஜி சேவையை அளிக்க அனைத்து டெலிகாம் சேவை நிறுவனங்களும் தயாராக இருக்கும் நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்காகக் காத்திருந்தது.
மத்திய அரசு ஏலம் நடத்துவதற்கான சரியான காலகட்டத்தைத் தேடி வந்த நிலையில் நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் இருந்தது, இந்நிலையில் இன்று மக்களவையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடத்துவதற்கான ஒப்புதலை அளித்தது.
நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் இருந்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தாலும் நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் சோகத்தில் தான் உள்ளது ஏன் தெரியுமா..?!
5ஜி அலைக்கற்றை
5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடந்த அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிகவும் சோகத்தில் உள்ளது. புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு அழைப்பு விண்ணப்பத்தின் (NIA) படி, 5G அலைக்கற்றைகளின் இருப்பு விலையை அமைச்சரவை மாற்றவில்லை.
நிதி நெருக்கடி
5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் ஜூலை இறுதியில் துவங்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அனைத்து தனியார் டெலிகாம் சேவை நிறுவனங்களும் அதிகப்படியான நிதி நெருக்கடியில் இருக்கும் காரணத்தால் தான் கட்டணத்தை அடுத்தடுத்து உயர்த்தி வருகிறது.
கோரிக்கை
இந்நிலையில் 5ஜி அலைக்கற்றைக்கான விலை அதிகமாக இருந்தால் மீண்டும் தனியார் டெலிகாம் சேவை நிறுவனங்கள் கடன் மற்றும் நிலுவைத் தொகை சுமையில் தள்ளப்படும் என்ற நிலை உள்ளது. இதை முன்கூட்டியே சுதாரித்து டெலிகாம் நிறுவனங்கள் மத்திய டெலிகாம் துறையிடம் முக்கியமான கோரிக்கையை வைத்தது.
விலை குறைப்பு
அலைக்கற்றைகளின் இருப்பு விலையை 2018 இல் இருந்து 90% குறைக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் டிராய் தனது பரிந்துரைகளில் ஆகஸ்ட் 2018 பரிந்துரைக்கப்பட்ட விலைகளை விட 39% மட்டுமே குறைத்துள்ளது.
72,097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை
இதற்கிடையில், 20 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் மொத்தம் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை விற்பனைக்கு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. இதில் 600 மெகா ஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்டுகள் கீழ் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்படும்.
சி-பேண்ட் விலை
பிரீமியம் 3.3-3.67 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் (சி-பேண்ட்) ஒரு யூனிட் ரூ.317 கோடி அடிப்படை விலையாக ஏப்ரல் 11 அன்று டிராய் நிர்ணயம் செய்து பரிந்துரை செய்தது. இது 2018ஆம் ஆண்டு அளவீட்டை விடவும் 36 சதவீதம் குறைவாகும்.
மாற்றமில்லை
இதேபோல் 700 மெகாஹெர்ட்ஸ் விலை 40 சதவீதம் குறைந்து 3,297 கோடி ரூபாய்க்கு நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்தது. இந்த விலை மேலும் குறைக்க டெலிகாம் நிறுவனங்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையிலும் அறிவிப்பு அழைப்பு விண்ணப்பத்தில் (NIA) எவ்விதமான மாற்றத்தையும் செய்யவில்லை.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications