பிரதமர் மோடி சனிக்கிழமை நடைபெற்ற இந்தியன் மொபைல் காங்கிரஸ் விழாவில் பங்கேற்று இந்தியாவில் 5ஜி சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார்.
ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் விரைவில் வாடிக்கையாளர்களுக்கு 5 ஜி சேவையை வழங்க உள்ளன.
டெலிகாம் நிறுவனங்களும் எப்போது முதல் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான 5ஜி சேவை கிடைக்கும் என தெரிவித்துள்ளன.
5ஜி சேவை
இன்று நடைபெற்ற இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2022 மாநாட்டில், 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்த பிறகு இந்திய டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடாபோன், குவால்காம் மற்றும் பிற நிறுவனங்கள் தங்களது 5ஜி சேவை குறித்து விளக்கியுள்ளன.
20 மடங்கு வேகம்
4ஜி தொலைத்தொடர்பு சேவையுடன் ஒப்பிடும் போது 5 சேவையில் இணையதள வேகம் 30 மடங்கு அதிக வேகமாக இருக்கும். 1 ஜிபி கொண்ட ஒரு கோப்பை 3 நொடியில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
ரிலையன்ஸ் ஜியோ
இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தீபாவளி முதல் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், காந்திநகர், குர்காம், ஹைதராபாத், லன்கோ, புனே உள்ளிட்ட நகரங்களில் 5ஜி சேவை வழங்க உள்ளது. 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் 5ஜி சேவை
ஏர்டெல் நிறுவனம் இந்தியா முழுவதும் 2024 மார்ச் மாதத்திற்குள் 5ஜி சேவையை வழங்கும் என தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக டெல்லி. வாரனாசி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 8 நகரங்களில் 5 ஜி சேவை கிடைக்கும் என ஏர்டெல் நிறுன தலைமை நிர்வாக அதிகாரி சுனில் மட்டல் தெரிவித்துள்ளார்.
வோடாஃபோன் ஐடியா
ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்து வரும் வோடாபோன், 5ஜி சேவை விரைவில் தொடங்கப்படும் என மட்டும் தெரிவித்துள்ளது. ஆனால் எப்போது முதல் என தெரிவிக்கவில்லை.
6ஜி சேவை
இந்தியாவில் 5ஜி சேவை இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெலிகாம் நிறுவனங்கள் 6ஜி சேவை பற்றியும் பேசத் தொடங்கிவிட்டன. இந்தியாவில் 6ஜி தொலைத்தொடர்பு சேவை 2030-ம் ஆண்டு கிடைக்கும் என கூறப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications