இந்திய டெலிகாம் துறையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் 5ஜி சேவைகள் இன்னும் நாட்டில் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வேளையில், மத்திய டெலிகாம் துறை 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடத்த உள்ளது.
கடந்த ஏலம் மத்திய அரசுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்த நிலையில், இந்த ஏலம் கைகொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோல் கடந்த ஏலத்தில் பெரும் சர்ப்ரைஸ் ஆக அதானி குழுமம் பங்கேற்ற நிலையில், இந்த ஏலத்திலும் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை நடத்தவுள்ள 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்க ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று தனியார் டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமே இந்த முறை போட்டியிட உள்ளன.
இந்த ஏலத்தில் ரூ.96,317.65 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் வழங்கப்படவுள்ளது. இந்த ஏலம் ஜூன் 6 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த முறை ஏலத்தில் அதானி குழுமம் மற்றும் பொதுத்துறை டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்பதற்கான கடைசி நாள் வரை மூன்று தனியார் டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை எந்த புதிய நிறுவனமும் விண்ணப்பிக்கவில்லை என்பதால் போட்டி மிகவும் குறைவாகவே இருக்கும்
மே 20 ஆம் தேதி 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பொதுத் தேர்தல் காரணமாக தற்போது ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த ஏலத்தில் 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz, 2500 MHz, 3300 MHz மற்றும் 26 GHz பேன்டுகளில் உள்ள ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு வர உள்ளது.
இந்த 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்து தொழில் துறை நிபுணர்கள் கூறுகையில், முந்தைய ஏலத்தைப் போல் இந்த ஏலத்தில் அதிக போட்டி இருக்க வாய்ப்பில்லை என கூறுகின்றனர். ஏனென்றால், இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போதைய தேவைக்கு ஏற்ப போதுமான 5ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை வைத்துள்ளது.
மேலும் சில வட்டாரங்களில் மட்டுமே தங்களது ஸ்பெக்ட்ரத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டியுள்ளது. இதில் பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகிய நிறுவனங்கள் மட்டுமே போட்டிப்போட்டு வாங்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் டெலிகாம் பில்லியனர் என அழைக்கப்படும் சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் ஜம்மு காஷ்மீர், ஒடிசா, பீகார், உத்தரப்பிரதேசம் (கிழக்கு), மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய வட்டாரங்களில் தங்களது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இதேபோல் நிதி நெருக்கடியில் தவித்து வரும் வோடபோன் ஐடியா மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப்பிரதேசம் மேற்கு மண்டலங்களில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஜியோவுக்கு இத்தகைய பிரச்சனை ஏதுமில்லை.
Jefferies நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வின் படி, ஏர்டெல் மற்றும் Vi நிறுவனங்கள் ரூ.4,200 கோடி மற்றும் ரூ.1,950 கோடி மதிப்பிலான காற்றை மட்டுமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும், அதே வேளையில் ரிலையன்ஸ் ஜியோ இந்த ஆண்டு எந்த ஸ்பெக்ட்ரமும் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
முதல் 5ஜி ஏலம்: 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த முதல் 5ஜி ஏலத்தில், மத்திய அரசு ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. 10 5ஜி பேன்டுகளில் 72 GHz அலைக்கற்றை சுமார் 20 வருட ஒப்பந்தத்திற்கு வழங்கப்பட்டது. அரசு நிர்ணயம் செய்த விலையில் இந்த அலைக்கற்றையின் மொத்த மதிப்பு 4.3 லட்சம் கோடி, ஆனால் அரசு பெற்றதோ 1.5 லட்சம் கோடி ரூபாய்.
2ஜி வழக்கு: இந்தியாவையே அதிர்ச்சி அடைய வைத்து 2008-ம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அப்போதைய தொலைத்தொடர்புத் துறை மத்திய அமைச்சராக ஆ.ராசா இருந்த போது, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை உரிமங்கள் வழங்கப்பட்டது.
இந்த முறையில் பெரும் பிரச்சனை இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் பல வருட விசாரணையில் 2012-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி 2ஜி வழக்கில், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏல முறையில் மட்டுமே அலைக்கற்றைகளை ஒதுக்க வேண்டும் எனவும் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த 112 2ஜி அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
4ஜி ஏலம்: இதேபோலே 4ஜி ஏலத்தில் இன்போடெல் பிராட்பேண்ட் என்ற சிறிய நிறுவனம் இந்தியாவின் 22 டெலிகாம் வட்டத்தில் ஸ்பெக்ட்ரம் வென்ற நிலையில், அடுத்த சில மணிநேரத்திலேயே அது ரிலையன்ஸ்-க்கு விற்கப்பட்டது. மேலும் அப்போது ஏலத்தில் 4ஜி ஸ்பெக்ட்ரம் டேட்டா சேவைக்கு மட்டும் தான் அறிவிக்கப்பட்ட நிலையில் இதை வாய்ஸ் சேவைக்கும் பயன்படுத்தலாம் என மத்திய அரசு விதிகளை மாற்றியது. இதன் பின்பு 2016ல் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமானது டெலிகாம் துறையை தலைகீழாகப் புரட்டிப்போட்டது.
2014ல் இன்போடெல் பிராட்பேண்ட் போன்ற சிறிய நிறுவனம் எப்படி இந்தியாவின் 22 டெலிகாம் வட்டத்தில் ஸ்பெக்ட்ரம் வெல்லும் அளவுக்கு பிட்டிங் தொகையை, தனது நிறுவனத்தின் மதிப்பைத் தாண்டி அறிவித்தது என கேள்வி எழுப்பப்பட்டது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications