சபாஷ்.. ஜியோவுக்கு டஃப் கொடுக்கும் ஏர்டெல்.. 8 நகரங்களில் 5 ஜி சேவை..இனி ஆட்டம் வேற லெவல்!

டெல்லி: இணைய உலகில் 5ஜியின் பங்கானது மிக பெரிய பங்கு வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பல வருடங்களாக இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்டு வந்த 5ஜி சேவையானது ஒரு வழியாக இன்று தொடங்கப்பட்டுள்ளது.

மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி 5ஜி சேவையை இந்தியாவில் 5ஜி சேவையினை தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் குழுமத் தலைவர்களும் கலந்து கொண்டு பேசினர்.

8 நகரங்களில் 5ஜி சேவை

8 நகரங்களில் 5ஜி சேவை

குறிப்பாக இந்த கூட்டத்தில் பேசிய பார்தி ஏர்டெல்-ன் தலைவர் சுனில் மிட்டல், 4 மெட்ரோ நகரம் உட்பட 8 நகரங்களில் 5 ஜி சேவை கிடைக்கும். 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும், 5ஜி சேவையானது நாடு முழுவதும் கிடைக்கும் என பார்தி ஏர்டெல் நிறுவனம் வழங்கும் கூறியுள்ளார்.

8 நகரங்கள்

8 நகரங்கள்

நாட்டில் 5ஜி சேவையை தொடங்கிய முதல் நிறுவனம் பார்தி ஏர்டெல் ஆகும். தற்போது முதல் கட்டமாக டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூர் உள்ளிட்ட 8 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு


மார்ச் 2023க்குள் பல முக்கிய நகரங்களுக்கும் ஏர்டெல் சேவை கிடைக்கும் என்றும், 2024க்குள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவை கிடைக்கும் என அறிவித்துள்ளது.

5ஜி அறிமுக மாநாட்டில் பேசிய மிட்டல், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் வளர்ச்சி தொழில் நுட்பத்துடன் இணைந்துள்ளதை புரிந்து கொண்டுள்ளார். இது பெருமைபடக் கூடிய ஒரு விஷயம்.

அம்பானியின் பங்கு

அம்பானியின் பங்கு

பல தலைவர்களும் தொழில்நுட்பத்தினை பாராட்டுகிறார்கள். ஆனால் அதன் நுணுக்கமான புரிதல் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக இணைப்பது என்பது, மோடி ஜி தவிர, வேறு யாராலும் செய்ய முடியாது.

4ஜி வளர்ச்சிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் முக்கிய பங்களிப்பினை பற்றி கூறியவர், 4ஜி-க்கு அதிக வேகம் கொடுத்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் மிக வேகமாக செயல்பட்டோம். கொரோனா காலத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டோம் என்றும் மிட்டல் கூறியுள்ளார்.

எல்லாம் தயார்

எல்லாம் தயார்

பார்தி ஏர்டெல்லின் தொழில நுட்ப அதிகாரியான ரந்தீப் சிங், நிறுவனத்தின் பின்தள கட்டமைப்பு தயாராக உள்ளது. 5ஜி சேவைக்காக மொபைல் டவர்களில் சில உபகரணங்களை நிறுவ வேண்டும். நாங்கள் அதனை படிப்படியாக செய்து வருகிறோம். மொபைல் டாவர்களில் நிறுவப்பட்ட கோபுரங்களுக்கு அருகில் உள்ள பகுதியில் இந்த சேவை கிடைக்கும் என கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+