டெல்லி: இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
அதிவேக இணையச் சேவையானது புதிய பொருளாதார வாய்ப்புகளை மேற்கோண்டு மேம்படுத்தும். இது நாட்டிற்கு மாற்று சக்தியாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே 2035ம் ஆண்டில் 5ஜின் மொத்த செலவு 450 பில்லியன் டாலர்களை எட்டலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இலக்கு
இது உலகின் முன்னணி தொழில் நுட்ப சந்தையான சீனாவினை விட, அடுத்த கட்டத்திற்கு செல்ல இந்தியாவுக்கு மிக உதவிகரமாக இருக்கும் எனலாம். இத்தகைய பிரகாசமான எதிர்காலத்திற்கு மத்தியில் அம்பானி மற்றும் அதானி உள்ளிட்ட பில்லியனர்களும் 5ஜி களத்தில் இறங்கியுள்ளனர்.
5ஜியின் வேகம் 4ஜி யை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். இதன் மூலம் மதமில்லாமல் வேகமாக இணைய சேவையும் பெறலாம். இது டிஜிட்டல் இந்தியா வளர்ச்சி இலக்கினை அடைய உதவும் என நம்பப்படுகிறது.
டெல்லயில் மாநாடு
டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த 6வது இந்திய கைப்பேசி மாநாட்டினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 5ஜி சேவையானது சென்னை உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவின் பில்லியனர்களில் இருவரான முகேஷ் அம்பானியும் உரையாற்றினார்.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி தனது ஜியோ நிறுவனம் டிசம்பர் 2023-க்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் என்றும், இந்த மாதத்திற்குள் 5ஜி சேவையினை வழங்க தேவையான நடவடிக்கையினை எடுத்து வருவதாகவும் கூறினார். மேலும் ஜியோ மலிவு விலையில் 5ஜி சேவையினை வழங்கும் என்றும், டிசம்பர் 2023-க்குள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் 5ஜி சேவையினை கொண்டு வரும் என்றும் கூறினார்.
ஐந்து இலக்குகளின் சுருக்கம்
மேலும் 5ஜி என்பது ஒரு நாட்டினையே மாற்றியமைக்க கூடிய ஐந்து இலக்குகளின் சுருக்கமாகும். 5ஜி சேவை மூலம் மலிவு விலையில் மிக உயர்ந்த கல்வியினை வழங்கும். இதன் மூலம் சாதாரண பொதுமக்களும் அவர்களின் திறன் மேம்பாட்டினை உயர்த்திக் கொள்ள முடியும். இதன் மூலம் இளைய தலைமுறையினர்கள் அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள உதவும். இது அவர்களின் திறனை மேம்படுத்திக் கொள்ள உதவும். இதன் மூலம் அவர்கள் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். இந்தியாவின் போட்டித் தன்மையை அதிகரிக்க உதவும் என கூறினார்.
உயர்தர மருத்துவ சேவை
5ஜி சேவையை வழங்குவதன் மூலம் மருத்துவமனைகளை ஸ்மார்ட் மருத்துவமனைகளாக மாற்ற முடியும். இதன் மூலம் உயர்தர சுகாதார சேவையினை வழங்க முடியும். இது இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சிறந்த டாக்டர்களின் சேவையினை பெற வழிவகுக்கும். மொத்தத்தில் இந்த சேவையானது இந்திய மக்களின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும். இது அவர்களின் சொத்தினையும் அதிகரிக்க உதவும்.
கிராமம் & நகரத்திற்கு இடையிலான இடைவெளி
5ஜி சேவையானது நகர்புறத்திற்கும் விவசாயத்திற்கும் இடையிலான இடைவெளியினை குறைக்க உதவும், இது விவசாய சேவைகள், வர்த்தக சேவை, முறைசாரா தொழில், போக்குவரத்து துறை, எரிபொருள் உள்கட்டமைப்பு என பல துறைகளை மேம்படுத்த உதவும். இது நகர்புறத்திற்கும் விவசாயத்திற்கும் இடையிலான இடைவெளியினை குறைக்க உதவும்.
டிரைவிங் மாடர்னைஷேசன்
5ஜி அனைத்து பொருளாதார நடவடிக்கையால் மிகப்பெரிய மாற்றத்தினை உருவாக்க முடியும். இந்தியாவினை புதுமைகளின் மையமாக மாற்றும். மேலும் 5ஜிக்கான காலநிலை நெருக்கடியைத் சமாளிக்க உதவுகிறது. மொத்தத்தில் இந்திய பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் நவீனமயமாக்கல் மற்றும் லாபத்தினை மேம்படுத்த உதவும்.
AI
உலகின் உளவுத் துறையாக மாற 5ஜி வழிவகுக்கும். இது இந்தியாவினை முக்கிய ஏற்றுமதியாளராகவும் மாற்ற உதவும். இந்த 5 இலக்குகள் இந்திய தொழிற்துறையில் மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம். இது இன்னும் மிகப்பெரிய முதலீடுகளை ஈர்க்க உதவும், இது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications