இந்தியாவில் 5ஜி 2022 அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது 4ஜி பயனர்களை விட 3.6 மடங்கு மொபைல் டேட்டாவை 5ஜி பயனர்கள் பயன்படுத்துவதாக நோக்கியா தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் மொத்த டேட்டா டிராபிக்கில் 15 சதவீதத்தை 5ஜி பயனர்கள் பயன்படுத்தியுள்ளனர். 5ஜி அறிமுகம் டேட்டா பயன்பாட்டின் வளர்ச்சி பெரிய அளவிலான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என நோக்கியாவின் மொபைல் பிராண்ட்பேன்ட் இன்டெக்ஸ் அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் 5ஜி சாதனங்களின் பயன்பாட்டு எண்ணிக்கை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, இந்தியாவில் மொத்தம் பயன்பாடடில் உள்ள 796 மில்லியன் 4ஜி சாதனங்களில் சுமார் 17 சதவீதம் அதாவது 134 மில்லியன் 5ஜி சேவை பயன்படுத்தகூடியவை.
இந்தியாவில் டேட்டா பயன்பாடு நுகர்வு ஆண்டுக்கு ஆண்டு 20 சதவீதம் அதிகரித்து மாதத்துக்கு 17.4 எக்சாபைட்டுகளாக உள்ளது. இது உலகின் மிக அதிகமான டேட்டா பயன்பாடுகளில் ஒன்றாகும்.
சராசரியாக, ஒரு தனிப்பட்ட சந்தாதாரர் மாதத்துக்கு 24 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்துகிறார் என்று நோக்கியா இந்தியா - மார்க்கெட்டிங் மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களின் தலைவர் அமித் மார்வா கூறினார்.
இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் 5ஜி ட்ராஃபிக் கணிசமான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. மெட்ரோ வட்டங்கள் இதில் முன்னணியில் உள்ளன. ஒட்டுமொத்த மொபைல் டேட்டா டிராஃபிக்கில் 20 சதவீத பங்கை எட்டியுள்ளது 5ஜி சேவை.
மேம்படுத்தப்பட்ட 5ஜி சேவை, செயல்திறன், மலிவு விலையில் பரந்த அளவிலான சாதனங்கள் கிடைப்பதுடன், புதிய டேட்டா-தீவிர பயன்பாடுகள், சேவைகளின் அறிமுகம் ஆகியவை எதிர்கால 5G வளர்ச்சியை துரிதப்படுத்தும். ஒரு பயனரின் சராசரி மாதாந்திர டேட்டா டிராஃபிக்கும் 24 அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தற்போது 159 மில்லியன் 5ஜி சந்தாதாரர்கள் உள்ளனர் என்று பாங்க் ஆஃப் அமெரிக்கா குளோபல் ரிசர்ச் அறிக்கை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில் 5ஜி பயனர்களின் வளர்ச்சி எதிர்பார்ப்புகளை தாண்டியுள்ளது.

நாட்டில் 5ஜி சந்தாக்கள் 2023 இல் 130 மில்லியன்கள் என்றும், 2029 ஆம் ஆண்டில் 860 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது மொத்த மொபைல் சந்தாக்களில் 68% ஆகும். 5ஜி சந்தா வளர்ச்சி 2023 முழுவதும் இந்தியாவில் வலுவாக உள்ளது.
5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் புதுமையான விஷயங்களைத் திறக்கிறது. புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துகிறது.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications