சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்தக் கனவை நிறைவேற்ற பட்ஜெட் குறைவாக வைத்திருப்பவர்கள் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குகின்றனர். அப்படி வாங்குபவர்கள் சில விஷயங்கள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கும் போது சிலர் உங்களை ஏமாற்றக்கூடும். எனவே தகவலறிந்து முடிவெடுப்பது உங்களுக்கு நிதி சிக்கல் வராமல் தடுக்கும்.
பட்ஜெட் அமைத்தல்: முதலில் கார் பதிவு, காப்பீடு மற்றும் பழுதுபார்ப்பு செலவுகள் உட்பட எவ்வளவு தொகையை செலவழிக்க இருக்கிறீர்கள் என்பதை தீர்மானியுங்கள்.

ஆராய்ச்சி: விற்பனையாளரை முழுமையாக நம்ப வேண்டாம். அவர் கூறும் விஷயங்களை நன்கு ஆராய்ச்சி செய்யுங்கள். நீங்கள் வாங்க இருக்கும் கார் மாடலுக்கான ரிவ்யூகள் போன்றவற்றை ஆன்லைனில் தேடுங்கள். அப்போதுதான் அவர் சொல்லும் தகவல் குறித்த நம்பகத்தன்மை தெரிய வரும்.
வாகனத்தின் வரலாறு: கார் ஏற்கனவே எவ்வளவு நாள் சேவை செய்திருக்கிறது? விபத்துக்கள் ஏற்பட்டு இருக்கிறதா? மற்றும் உரிமை விவரங்கள் ஆகியவற்றையும் சரிபார்க்கவும். பதிவு சான்றிதழ், காப்பீடு, வரி ரசீதுகள் போன்ற ஆவணங்கள் செல்லுபடியாகும் நிலையில் இருக்கிறதா? மேலும் அவை உண்மையானதா? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
கார் பராமரிப்பு: நீங்கள் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குகிறீர்கள்.. ஆனால் அதில் ஏற்கனவே டேமேஜ் இருக்கும் பட்சத்தில் செலவு செய்து வாங்கிய காருக்கு மீண்டும் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே கார் வாங்கும் போதே வெளிப்புறம், உட்புறம் பேட்டரி மற்றும் இதர தேய்மானங்கள் உள்ளதா என சரி பார்ப்பது நல்லது.
டெஸ்ட் டிரைவ்: ஒரு வாகனத்தை வாங்கும் போது என்ஜின் செயல் திறன், பிரேக், கிளட்ச் ஸ்டியரிங் மற்றும் சஸ்பென்ஷன் ஆகியவற்றை சரிபார்க்க காரை ஓட்டி பார்க்கவும். ஓட்டும்போதே ஏதேனும் சத்தங்கள் ஏற்படுகிறதா? என்பது குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
மெக்கானிக்கின் ஆலோசனை: அதோடு ஒரு நிபுணரின் உதவியை நாடுவது நல்லது. ஒரு நம்பகமான மெக்கானிக் காரை பரிசோதிக்கவும், வேறு ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவும் உங்களுக்கு உதவுவார். ஒரு வேளை நீங்கள் ஆராய்ச்சி செய்யும் போது பார்க்க முடியாத சில சிக்கல்கள் குறித்தும் நிபுணர் உங்களுக்கு கண்டறிந்து கூறி விடுவார்.


Click it and Unblock the Notifications