2026-ம் ஆண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், செல்வம் மற்றும் ஆடம்பரம் குறித்த மக்களின் பார்வை வெகுவாக மாறி வருகிறது. இனிமேல், விலையுயர்ந்த கார் அல்லது பிராண்டட் பொருட்களை வெளிப்படையாக காட்டுவது உண்மையான பணக்காரரின் அடையாளமாக இருக்காது. மாறாக, நிலையான பொருளாதார சிக்கல் இல்லாமல் நிம்மதியாகவும் மன அமைதியுடனும் வாழும் திறனே உண்மையான நிதிச் சுதந்திரத்தின் அடையாளமாக உயர்ந்து வருகிறது. இது குறித்துப் பட்டயக் கணக்காளரான நிதின் கௌசிக் என்பவர் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் நிதிச் சுதந்திரத்தை அடைந்த ஒருவரின் அன்றாட வாழ்க்கையில் காணக்கூடிய 6 முக்கியமான வசதிகளைபட்டியலிட்டுள்ளார்.
கடன் சுமை இல்லாத இரவு தூக்கம் : நிதிச் சுதந்திரம் பெற்ற முதல் அறிகுறி, கிரெடிட் கார்டு (Credit Card) கடன் குறித்த கவலை இல்லாதது தான். இரவில் உங்களை தூங்க விடாமல் துரத்தும் கடன் என்றால், அது கிரெடிட் கார்டு கடன் தான். அதை அடைத்துவிட்டாலே கடன் சுமை இல்லாமல் இருப்பதை உணர முடியும்.

தூங்கும்போது வளரும் முதலீடுகள் : இந்தக் காலகட்டத்தில் செல்வம் என்பது தினந்தோறும் பங்குச் சந்தையை பார்த்து பதற்றப்படுவது அல்ல. நீங்கள் தூங்கும்போது, முதலீடுகள் அமைதியாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பது என்பதுதான் புதிய வரையறை. அதாவது, நமது நேரடி கவனம் தேவையில்லாமல், பணம் தானாகவே வளரும் ஒரு நிலையை அடைவது நீண்ட கால திட்டமிடலின் வெற்றியை பிரதிபலிக்கிறது.
EMI தேதி : இ.எம்.ஐ. போன்ற கட்டண தேதி நெருங்கும் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னதாகவே கடமைகளை நிறைவேற்றும் திறன் மற்றொரு முக்கிய வசதி. நோட்டிபிகேஷன் வருவதற்கு முன்பே வாடகை அல்லது இ.எம்.ஐ. தொகையை செலுத்திவிடுவது நிதி நெருக்கடி இல்லாத ஒரு நிலையான வாழ்க்கையை குறிக்கிறது. இது கவலையை தவிர்த்து, பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்கிறது.
புத்துணர்ச்சியுடன் இருக்கும் சேமிப்புக் கணக்கு : அவசர காலத்திற்குத் தேவைப்படும் கையிருப்பின் முக்கியத்துவம் குறித்து கூறியுள்ள கௌசிக், பணம் எந்நேரமும் தீர்ந்துவிடாமல், அவசர காலச் செலவுகள் மற்றும் எதிர்கால தேவைகளுக்கு என ஒரு காப்பீடு வைத்திருப்பதை உணர்த்துகிறது. நிதி எப்போதும் கஷ்டத்தில் இல்லாமல், கட்டுக்குள் இருப்பதை இது காட்டுகிறது.
மளிகைப் பொருட்கள் லிஸ்ட் : அன்றாட அனுபவங்கள்தான் நிதிச் சுதந்திரத்தின் உண்மையான அளவுகோலாகும். பொருட்களின் விலையைப் பற்றி மனக்கணக்குப் போடாமல், மளிகைப் பொருட்களை வாங்குவது என்பது ஒரு நுட்பமான ஆனால் மிக ஆழமான வசதியை குறிக்கிறது. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பணம் போதுமானதாக இருப்பதை இது காட்டுகிறது.
எதிர்காலத்துக்கான நோக்கம் : உண்மையான செல்வம் என்பது, இன்று செலவு செய்வதற்காக பணத்தைக் கரைக்காமல், உறுதியான எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் அதைப் பயன்படுத்துவதுதான். உங்கள் பணம் இன்று செலவாகிப் போகாமல், நாளைக்கான பாதுகாப்பை கட்டமைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வது என்பது உடனடி ஆசைகளை விட, நீண்ட கால வளர்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுப்பதை காட்டுகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications