இந்தியன் ரயில்வே ஏராளமான பயணிகளுக்கு மலிவு விலையில் பயணம் செய்ய உதவும் போக்குவரத்து முறையாகும். இந்திய மக்கள் பலருக்கும் பிடித்த ஒரு போக்குவரத்தும் ரயில் பயணம் தான். விசாலமான இருக்கைகள், உறங்கிக் கொண்டே பயணம் செய்யும் வசதி, குறைந்த டிக்கெட் கட்டணம் என ரயில் பயணத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான பயணிகள் தினசரி அடிப்படையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்கின்றனர்.
ரயில் பயணத்திற்காக டிக்கெட் வாங்கும்போது டிக்கெட்டுடன் பல விஷயங்கள் இலவசமாக கிடைக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இது குறித்த போதிய தகவல்கள் இல்லாத காரணத்தினால் பயணிகள் அவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் உள்ளனர். பயணத்தின் போது நமக்கு கிடைக்கும் வசதிகள் என்னென்ன? என்பது குறித்துதான் இந்த பதிவில் பார்க்கவுள்ளோம்.

இலவச வைஃபை: ரயில் நிலையத்திற்கு முன்பே வந்து விட்டால் நீங்கள் இலவச வைஃபை சேவையைப் பயன்படுத்தலாம். சிலர் நீண்ட தூரத்தில் இருந்து பயணம் செய்து வரும்போது ஸ்டேஷனுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே வந்து விடுவார்கள். எனவே போர் அடிக்காமல் இருக்க இந்த இலவச வைஃபை சேவையை பயன்படுத்தலாம்.
இலவச சிகிச்சை: ரயிலில் பயணம் செய்யும்போது உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், ரயில்வே-யின் ஹெல்ப் லைன் நம்பரை அழைக்கலாம். அப்படி அழைத்தால் ரயிலில் பயணம் செய்யும்போது இலவச சிகிச்சை மற்றும் மருந்துகள் கிடைக்கும்.
ஏசி கோச்: நீங்கள் ஏசி கோச்-களில் பயணம் செய்தால், பயணத்தின் போது வீட்டில் இருந்து போர்வை, தலையணை போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ரயிலிலேயே உங்களுக்கு போர்த்திக் கொள்ளப் போர்வை மற்றும் தலைக்கு வைக்க தலையணை ஆகியவை வழங்கப்படும். பயணத்திற்குப் பிறகு அதை திருப்பித் தர வேண்டும். இருப்பினும் சில ரயில்களில் இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
உணவு வசதி: ரயில் பயணம் செய்யும்போது வீட்டில் இருந்து உணவு எடுத்து வரவில்லை என்றால் உணவு உங்கள் இருக்கைக்கு வந்து சேரும். இந்த வசதி ராஜ்தானி, வந்தே பாரத் போன்ற சில ரயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உணவு இலவசமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்கு டிக்கெட் வாங்கும் போது கட்டணம் சேர்க்கப்பட்டிருக்கும்.
காத்திருப்பு அறையில் ஓய்வெடுக்கலாம்: சில காரணங்களால், உங்கள் ரயில் தாமதமாகி இருந்தால் ரயில் நிலைய அதிகாரிகளை அணுகி, அங்குள்ள ஏசி அல்லது ஏசி அல்லாத காத்திருப்பு அறைகளில் ஓய்வெடுக்க முடியும். இதற்கு சில கட்டணங்கள் பொருந்தும்.
பயணக் காப்பீடு: ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணியும் பாதுகாப்பாக சென்றடைய ரயில்வே பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. ரயில் பயணங்களின் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அத்தகைய சூழ்நிலையில் ரூ.10 லட்சம் வரையில் காப்பீட்டையும் இந்திய ரயில்வே வழங்குகிறது. இதற்கு டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கட்டணத்துடன் 45 பைசா மட்டும் அதிகமாக வசூலிக்கப்படும்.
புகார் அளிக்கும் வசதி: ரயில் பயணம் செய்யும்போது ஏதேனும் பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக உங்களுடைய புகாரை நீங்கள் பதிவு செய்ய முடியும். டிக்கெட் முன்பதிவு அலுவலகங்களிலும் புகார் அளிக்கலாம். இது தவிர pgportal.gov.in என்ற இணையதளம் அல்லது 9717630982, 011-23386203 மற்றும் 139 போன்ற ரயில்வே ஹெல்ப்லைன் நம்பர் ஆகியவற்றை தொடர்பு கொண்டும் உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications