இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் 6 GHz ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் புதிய போர் தொடங்கியுள்ளது. ஒரு புறம் அமெரிக்க டெக் நிறுவனங்களான ஆப்பிள், அமேசான், மெட்டா, சிஸ்கோ, எச்பி, இன்டெல் போன்ற நிறுவனங்கள் இந்த அலைவரிசையை மொத்தமாக வை-ஃபைக்கு (Wi-Fi 6E, Wi-Fi 7) ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இதேபோல் இந்த அலைவரிசையை இலவசமாக பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் இந்திய டெலிகாம் அமைப்பிடம் கோரிக்கை வைத்துள்ளது.
மறுபுறம் ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன் ஐடியா போன்ற இந்திய டெலிகாம் நிறுவனங்கள் இதை மொபைல் சேவைகளுக்கு (5G, 6G) ஏலம் விட வேண்டும், இதேபோல் இலவசமாக பயன்படுத்த அனுமதி அளித்தால் போட்டித்தன்மை குறைந்துவிடும் என்று வலியுறுத்துகின்றன.

டெலிகாம் கட்டுப்பாட்டு அமைப்பான TRAIயின் அடுத்த ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்த ஆலோசனை அறிக்கைக்கு இந்த நிறுவனங்கள் அளித்த கருத்துகள் தற்போது பிரச்சனையை தீவிரப்படுத்தியுள்ளன. இதேபோல் செயற்கைகோள் பிராண்ட்பேன்ட் சேவைகான அலைக்கற்றையை இலவசமாக அளிக்க எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் கேட்டப்போதும் இதே போன்ற பிரச்சனை வந்தது.
ஆப்பிள், அமேசான், சிஸ்கோ, மெட்டா, எச்பி, இன்டெல் ஆகியவை இணைந்து TRAIக்கு அளித்த கருத்தில், 6 GHz அலைவரிசையை மொபைல் சேவைகளுக்கு தற்போது ஒதுக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளன. முழு அலைவரிசையையும் Wi-Fi 6E மற்றும் Wi-Fi 7 போன்ற தொழில்நுட்பங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோருகின்றன. இது லட்சக்கணக்கான சாதனங்களுக்கு அதிகவேக வை-ஃபை இணைப்பை வழங்கும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது.
மேலும் 2027 உலக ரேடியோகம்யூனிகேஷன் கான்ஃபரன்ஸ் (WRC-27) முடியும் வரையில் இத்தொடர்பான முடிவுகளை எடுப்பதை தள்ளிவைக்க வேண்டும் என்றும், அதுவரை இந்த அலைவரிசையை யாருக்கும் ஒதுக்க கூடாது என்றும் பரிந்துரைத்துள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ, வோடாஃபோன் ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்கள் 6 GHz அலைவரிசையின் முழு 1200 MHzயையும் ஏலத்துக்கு சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இந்தியாவில் 5G விரிவாக்கத்திற்கும், எதிர்கால 6G தொழில்நுட்பத்திற்கும் கூடுதல் அலைவரிசை தேவை என்று அவை கூறுகின்றன.
செல்லுலர் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (COAI) - அலைவரிசையை ஒதுக்கீடு செய்வதை எதிர்த்துள்ளது. தரமான சேவை, தேசிய அளவில் விரிவாக்கம், டிஜிட்டல் இந்தியா, 6G போன்றவற்றை பாதிக்கும் என்று COAI எச்சரிக்கிறது. இந்த ஏலத்தில் இதை ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் அரசின் ஏல வருவாய் குறையும், வெளிநாட்டு OTT நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என்றும் கூறுகிறது.

இதேவேளையில் பார்தி ஏர்டெல் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் நியூட்டரல் நிலைப்பாட்டை எடுத்துள்ளன. 6 GHz அலைவரிசையின் மேல் பகுதியில் மொபைல் சேவைக்கான எகோசிஸ்டம் பயன்படுத்த இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்று அவை கூறுகின்றன. WRC-27 கான்பிரென்ஸ் வரையில் ஏலத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று ஏர்டெல் பரிந்துரைக்கிறது.
சீனா, பிரேசில், ஐரோப்பிய நாடுகள் போல இந்தியாவும் மேல் 6 GHzயை 6Gக்கு ஒதுக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது. டிராய் மற்றும் மத்திய அரசு எடுக்கும் முடிவு இந்தியாவின் இண்டர்நெட் இணைப்பு எதிர்காலத்தை வடிவமைக்கும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications