இன்றெல்லாம் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடுகள் அதிகரித்துவிட்டன. அதற்கு ஏதுவாக பல வங்கிகளும் தொடர்ந்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து கிரெடிட் கார்டு பற்றிய விவரங்களைக் கூறி அவற்றைப் பெற தூண்டுகின்றனர். ஆனால் நீங்கள் புதிதாக கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பவராக இருந்தால் சில முக்கிய விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக செலுத்தப்படாத நிலுவைத் தொகைக்கு கிரெடிட் கார்டு வழங்குனர்கள் ஆண்டுக்கு 36 முதல் 48 சதவீத வட்டியை வசூலிக்கின்றன. இந்த பதிவில் கிரெடிட் கார்டு பெறுவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் குறித்து பார்ப்போம்.
கிரெடிட் கார்டுகள் நம் வாழ்க்கையில் பல வசதிகளை வழங்குகின்றன. ஆனால், கிரெடிட் கார்டுகளை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே அவற்றின் நன்மைகளை அனுபவிக்க முடியும். இதற்காக, கிரெடிட் கார்டுகளைப் பற்றி சில முக்கிய விஷயங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

கிரெடிட் லிமிட்: ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் ஒவ்வொரு கிரெடிட் லிமிட் இருக்கும். நீங்கள் அந்த லிமிட்டை தாண்டி பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக, உங்கள் கிரெடிட் கார்டுக்கு ரூ.5 லட்சம் லிமிட் இருந்தால், நீங்கள் ரூ.5 லட்சத்துக்குள் மட்டுமே பில்களை வைத்திருக்க வேண்டும்.
கிரெடிட் கார்டு யூட்டிலிசேஷன் ரேஷியோ (Credit card utilisation ratio): கிரெடிட் கார்டு யூட்டிலிசேஷன் ரேஷியோ என்பது கிரெடிட் கார்ட் பயன்பாட்டு விகிதம் என அழைக்கப்படுகிறது. இந்த விகிதத்தை 30 சதவீதத்திற்கு கீழ் வைத்திருக்க வேண்டும். உதாரணமாக உங்கள் கிரெடிட் கார்டு வரம்பு ரூ.10 லட்சமாக இருந்தால்.. கிரெடிட் கார்டில் ரூ.3 லட்சத்திற்கும் மேல் செலவழிக்கக் கூடாது.
கிரெடிட் ஸ்கோர்: கிரெடிட் கார்டு பில்களைச் சரியான நேரத்தில் செலுத்துவது கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கும். இது உங்கள் கார்டுக்கு அதிக கிரெடிட் லிமிட் பெறவும் உதவும். உதாரணமாக, உங்கள் கிரெடிட் கார்டு வரம்பு ரூ.5 லட்சமாக இருந்தால், நீங்கள் தொடர்ந்து பில்களை சரியான நேரத்தில் செலுத்தினால், உங்கள் கடன் வரம்பு மேலும் ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்படும்.
வட்டி இல்லாத காலம்: உங்கள் கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் ஏதேனும் பொருட்களை வாங்கினால், உங்களுக்கு 45 நாட்கள் வட்டி இல்லாத காலம் கிடைக்கும். ஆனால் இந்த காலம் முடிந்தவுடன், வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.
குறைந்தபட்ச நிலுவைத் தொகை மற்றும் மொத்த நிலுவைத் தொகை: கிரெடிட் கார்டு பில் கட்டணத்தைப் பெறும்போது, உங்களுக்கு 2 தேர்வுகள் வழங்கப்படுகின்றன. குறைந்தபட்ச நிலுவைத் தொகையைச் செலுத்தலாம் அல்லது மொத்த நிலுவைத் தொகையைச் செலுத்தலாம். குறைந்தபட்ச நிலுவைத் தொகையை மட்டும் செலுத்துவதற்குப் பதிலாக, மொத்த நிலுவைத் தொகையைச் செலுத்த பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் குறைந்தபட்ச நிலுவைத் தொகையைச் செலுத்தும்போது, மீதமுள்ள தொகைக்கு வட்டி விதிக்கப்படும்.
பணம் எடுத்தல்: கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஏடிஎம்-களில் பணம் எடுக்கலாம். ஆனால் இவற்றை அவசர காலங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பணமாக எடுக்கும் தொகையை திருப்பி செலுத்துவதற்கு அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications