சென்னை: வரி செலுத்துவது நம் ஜனநாயக கடமை. ஆனால், வரி செலுத்தும் போது சில தவறுகளை செய்வது, தேவையில்லாமல் அதிக வரி செலுத்தி விடுவதற்கு வழிவகுத்துவிடும். இந்த கட்டுரையில், வருமான வரித் தாக்கல் செய்யும் போது பொதுவாக செய்யப்படும் 6 தவறுகளை பற்றியும், அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பது பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சம்பளம் பெறுபவர்களாக இருந்தால் அவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும். இதுபோன்ற வரி செலுத்தும் நபர்கள் அவர்களுக்கே தெரியாமல் செய்யும் சில தவறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வரி விலக்குகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது: வரி செலுத்துபவர்கள் வருமான வரிச் சட்டத்தின் கீழ் பல்வேறு வரி விலக்கு சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பிரிவு 80சி-இன் கீழ், சில முதலீட்டு திட்டங்களுக்கு வரி விலக்குகள் கிடைக்கின்றன. இதில் PPF, ELSS, NSC, EPF போன்ற திட்டங்கள் அடங்கும்.
இந்த வாய்ப்புகளை கவனிக்காமல் இருப்பது அல்லது அவற்றின் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது வரி சேமிப்பு வாய்ப்புகளைத் தவறவிடுவதற்கும், அதிக வரி செலுத்தவும் வழிவகுக்கும். எனவே, வரி செலுத்துபவர்கள் இந்த வரி சேமிப்பு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது சிறந்தது.
வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) விலக்கு: சம்பளம் பெறும் தனிநபராக இருந்தால், உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியாக வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) கிடைத்தால், நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாடகைக்கு வரி விலக்கு கோரலாம். வாடகை ரசீதுகளை சமர்ப்பிக்கத் தவறினாலோ அல்லது ஆவணங்களை வழங்கத் தவறினாலோ, இந்த வரி சேமிப்பு வாய்ப்பை இழக்க நேரிடும்.
மருத்துவக் காப்பீடு பிரீமியங்களைத் தவிர்த்தல்: தனிநபர், மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருக்கான மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளுக்காக செலுத்தப்படும் பிரீமியங்கள், 80D பிரிவின் கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையவை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாதவர்கள், அதிக வரி செலுத்த வேண்டி இருக்கும் . கூடுதலாக, மூத்த குடிமக்கள் இந்த பிரிவின் கீழ் அதிக வரி விலக்கு பெற தகுதியுடையவர்கள்.
NPS திட்டத்தின் நன்மைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது: NPS திட்டத்திற்கு அளிக்கப்படும் பங்களிப்புகள் பிரிவு 80CCD(1B) இன் கீழ் வரி விலக்குக்கு தகுதியுடையவை.
தாமதமாக வரித் தாக்கல் செய்தல்: கடைசி தேதியைக் கடந்து தாமதமாக தாக்கல் செய்தால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு முன்பே தாக்கல் செய்துவிடுவது நல்லது.
வருமான வரி தாக்கல் செய்யும் போது தவறுகளைச் செய்வது: வருமான வரி தாக்கல் செய்யும் போது தவறுகள் இருந்தால், வரித்துறை அதிகாரிகளிடம் இருந்து விசாரணைக்கு ஆளாக நேரிடும். மேலும், கூடுதல் வரி மற்றும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, வருமான வரி தாக்கல் செய்யும் போது எந்த தவறுகளும் இல்லாமல் சரியாக தாக்கல் செய்வது அவசியம்.
வரி செலுத்துவது கடினமான பணி அல்ல. சரியான திட்டமிடல் மற்றும் வரி விதிமுறைகளைப் பற்றிய அடிப்படை அறிவு இருந்தால், வரி செலுத்தும் போது செய்யும் தவறுகளைத் தவிர்த்து, வரிச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications