நொய்டா: பணி ஓய்வுபெற்ற பிறகு, ஓய்வுகாலத்தை உபயோகமுள்ளதாக மாற்ற நினைத்து மாதந்தோறும் ரூ.3.5 லட்சம் வருவாய் ஈட்டுகிறார் ரமேஷ். குங்குமப்பூ அதிக விலை கொண்டது. ஒரு கிலோ குங்குமப்பூ லட்சக்கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டிலேயே அதை உற்பத்தி செய்து வருகிறார் நொய்டாவை சேர்ந்த ரமேஷ்.
1980 ஆம் ஆண்டு என் ஐ டி குருஷேத்ராவில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பயின்ற ரமேஷ் 30 ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களில் பணி செய்துள்ளார். பணி நிமித்தமாக பல்வேறு இடங்களுக்கு அவர் பயணம் செய்துள்ளார்.

அப்படி 2002 ஆம் ஆண்டு அவர் தென்கொரியாவிற்கு பணி நிமித்தமாக சென்று ஆறு மாதம் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு ஹைட்ரோபோனிக் மைக்ரோ கிறீன் மற்றும் குங்குமப்பூ விவசாயம் குறித்த விழிப்புணர்வு கிடைத்தது.
இந்தியா திரும்பிய அவர் இந்தியா தன்னுடைய தேவையில் 70% குங்குமப்பூவை ஈரானிலிருந்து இறக்குமதி செய்வதை அறிந்தார். காஷ்மீரில் விளையும் குங்குமப்பூ 30% தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறது.
இந்தியாவில் குங்குமப்பூவிற்கான தேவை அதிகரித்திருப்பதும் ஆனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் இருப்பதையும் அவர் உணர்ந்து கொண்டார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் குங்குமப்பூ விவசாயத்தை கையில் எடுத்தார்.
2017ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டில் 100 அடி கொண்ட அறையில் குங்குமப்பூ விவசாயத்தை செய்யத் தொடங்கினார். இதற்காக 4 லட்சம் ரூபாய் செலவு செய்த அவர் தன்னுடைய வீட்டில் குங்குமப்பூவை விளைவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கினார்.
மேலும் 2 லட்சம் ரூபாய்க்கு காஷ்மீரில் இருந்து குங்குமப்பூ விதைகளை வாங்கினார். இது தவிர அறையில் குறிப்பிட்ட காலநிலை நிலவுவதற்கு ஏற்ப மின்சார சாதனங்களை அமைப்பது உள்ளிட்டவற்றிற்காக மாதுந்தோறும் 4,500 செலவாகும் என கூறுகிறார்.
குங்குமப்பூவை பொறுத்தவரை சந்தையில் நல்ல விலைக்கு செல்கிறது எனக் கூறும் அவர் ஹோல்சேல் மார்க்கெட்டில் ஒரு கிலோவை 2.5 லட்சம் ரூபாய்க்கும் ரீடெயில் சந்தையில் ஒரு கிலோவை 3.5 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்ய முடியும் என கூறுகிறார்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக இருந்தால் ஒரு கிலோ குங்குமப் பூவை 6 லட்சம் ரூபாய் வரை விற்கலாம் என்கிறார். தற்போது இதன் மூலம் நல்ல வருவாய் கிடைப்பதாகவும் மாதத்திற்கு 3.5 லட்சம் என வருவாய் ஈட்டுவதாகவும் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.
தற்போது ரமேஷ் வீட்டிலேயே குங்குமப்பூ விவசாயம் செய்வது குறித்து பயிற்சி நிலையம் அமைத்து பயிற்சி அளித்து வருகிறார். நொய்டாவில் உள்ள அகார்சார்க் சேஃப்ரான் இன்ஸ்டியூட் என்ற பெயரில் நடத்தி வரும் பயிற்சி நிலையத்தில், இதுவரை 370 பேருக்கு அவர் பயிற்சி அளித்து இருப்பதாகவும் இரண்டு நாட்களுக்கு இந்த பயிற்சி வகுப்பு நடைபெறும் என்றும் கூறுகிறார். இதன் இந்த பயிற்சிக்கான கட்டணம் 12 ஆயிரம் ரூபாயாகும்.
Story written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications