இந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் ஒட்டு மொத்த உலகத்தையும் அடித்து நொறுக்கிக் கொண்டு இருக்கிறது என்றால், மறு பக்கம் வழக்கம் போல அரசியல் பிரச்சனைகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
அதிலும் காங்கிரஸ், பாஜக கட்சிக்கு மத்தியில் ஏதோ ஒரு பிரச்சனை திரும்ப திரும்ப வந்து கொண்டே தான் இருக்கிறது.
நேற்று கூட ஒரு பிரச்சனை கிளம்பியது. அதை காங்கிரஸ் தரப்பும், பாஜக தரப்பும் தங்கள் பாணியில் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
என்ன பிரச்சனை
பாபா ராம் தேவ், மெகுல் சோக்ஸி, விஜய் மல்லையா உட்பட சுமார் 50 பேரின் கடன்களாக சுமார் 68,600 கோடி ரூபாயை கடன் கொடுத்த வங்கிகள் written off (வரவே வராத கடன்களாக ஒதுக்குவது) செய்ததாக, ஒரு தனி நபரின் ஆர்டிஐ கேள்விக்கு மத்திய ரிசர்வ் வங்கி பதில் கொடுத்து இருக்கிறது. இந்த பிரச்சனையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் போக்கில் சிந்தித்து, விமர்சனங்களை செய்து வருகின்றன.
எதிர்கட்சிகள்
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட, பல கட்சிகளும், பணக்காரர்களுக்கு அரசு கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டதாக விமர்சனம் செய்து, கருத்துக்களைச் சொல்லி வருகிறார்கள். விமர்சனங்களையும் செய்து வருகிறார்கள். பல கோடி மக்கள் ஏழ்மையில் வாடும் போது, அவர்களைக் கண்டு கொள்ளாமல் இப்படி அரசு பெரு முதலாளிகளின் கடன்களை writing off செய்வது தவறு என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.
நிதி அமைச்சர்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, ராகுல் காந்தி உட்பட எதிர்கட்சியினர்களின் கருத்துக்களை வலுவாக மறுத்து இருக்கிறார். 68,600 கோடி ரூபாய் வங்கிக் கடன்களை, writing off bad debt செய்ததற்கு வேறு அர்த்தம் கொடுக்கப்படுகிறது என தன் தரப்பு விளக்கங்களைக் கொடுத்து இருக்கிறார்.
விளக்கம்
"ஆர்பிஐ சொல்லி இருப்பது போல 4 வருட சுழற்சி அடிப்படையில் வாரா கடன்களுக்கு provision செய்து இருக்கிறோம். முழுமையாக provision செய்த பின், வங்கிகள் அதை written off (வரவே வராத கடன்களாக) செய்வார்கள். இப்படி முழு கடனையும், வாரா கடன்களாக எழுதிய பின்பு கூட, கடனை வசூலிக்க முழு வேலைகளும் நடக்கும். எந்த கடனும் தள்ளுபடி செய்யப்படவில்லை" என தெளிவாகச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர்.
எப்படி புரிந்து கொள்வது
பொதுவாக வங்கியில், ஒருவர் கடன் வாங்கி 90 நாட்களுக்கு வட்டியோ அசலோ செலுத்தவில்லை என்றால் அதை வாரா கடன்களில் (NPA) சேர்த்துவிடுவார்கள். அதற்கு அடுத்த சில ஆண்டுகளுக்கு கடன் திரும்ப வரவில்லை என்றால் provisioning செய்து கொண்டே வருவார்கள். அதன் பின் அதை witten off செய்துவிடுவார்கள். அதன் பிறகு கூட கடன் வாங்கியவர்களிடம் இருந்து கடன்களை வசூலிக்க வங்கிகள் தொடர்ந்து வேலை பார்க்கும். இது கடன் தள்ளுபடி அல்ல.
காங்கிரஸ் காலத்தில்
அதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை, நிதி அமைச்சர் காங்கிரஸ் காலத்தில் 2009 - 10 முதல் 2013 - 14 நிதி ஆண்டில் 1.4 லட்சம் கோடி ரூபாய் witten off செய்யப்பட்டதே என எடுத்துவிட்டு இருக்கிறார். அதோடு காங்கிரஸ் காலத்தில், பணத்தை திருப்பிச் செலுத்தும் அளவுக்கு பணம் இருப்பவர்கள் கூட பணத்தை பல வழிகளில் டைவர்ட் செய்து கடனைத் திருப்பிச் செலுத்த மாட்டார்கள் எனவும் சொல்லி இருக்கிறார்.
கடன் தள்ளுபடி
கடன் தள்ளுபடி என்பது, கொடுத்த கடனை திருப்பிச் செலுத்த வேண்டாம் எனச் சொல்ல வேண்டும். அதற்குப் பெயர் தான் கடன் தள்ளுபடி. நாங்கள் வங்கி நடைமுறைப்படி Written off செய்து இருக்கிறோமே ஒழிய, கடன்களைத் தள்ளுபடி செய்யவில்லை என விளக்கம் கொடுத்து இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications