இந்திய வம்சாவளியினை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமரான நிலையில், இந்தியாவுக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியாகலாம். இவ்விரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வலுப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இங்கிலாந்து இந்தியா இடையேயான வணிக சூழலானது மாறலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
இத்தகைய சூழலில் இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்கும், இந்திய பிரதமரான நரேந்திர மோடியும் முதல் முறையாக, ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்டபோது நேரில் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பிக்கு பிறகு, சில மணி நேரத்திலேயே இங்கிலாந்து, இந்தியர்களுக்கு சாதகமான ஒரு அறிவிப்பினை கொடுத்தது.
விசாவில் தளர்வு
ஒவ்வொரு ஆண்டும் 3000 இளம் இந்தியர்கள் இங்கிலாந்தில் பணியாற்ற அனுமதி கொடுத்துள்ளது. இது இங்கிலாந்து - இந்தியா யங்க் புரபஷ்னல் ( UK - india young professionals) என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 18 - 30 வயதுடைய இளைஞர்கள் இங்கிலாந்தில் 2 ஆண்டுகள் பணிபுரிய வாய்ப்புகள் கிடைக்கும் எனலாம்.
பேச்சு வார்த்தை
இதற்கிடையில் இங்கிலாந்து மற்றும் இந்திய வர்த்தகர்கள் இடையே ஒரு பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. அது இந்தியா இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தான். இந்த ஒப்பந்தம் குறித்து ஆறாவது கட்ட பேச்சு வார்த்தையானது நடைபெறவுள்ளது.
ஏற்கனவே வெளியான அறிக்கையில் இரு நாட்டு அதிகாரிகளும் எஃப்டிஏ குறித்து தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் சுமூக முடிவு எட்டப்படலாம் என்றும் கூறப்பட்டது.
எப்போது முடியும்?
முன்னதாக இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) மார்ச் 2023க்குள் முடிவடையலாம் என்று கூறப்பட்டது. ஆக இந்த பேச்சு வார்த்தையானது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த பேச்சு வார்த்தைக்காக இங்கிலாந்து வர்த்தக அமைச்சர், டெல்லி வந்துள்ளார். முதல் முறையாக தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயலை முதல் முறையாக சந்திக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல கட்ட பேச்சு வார்த்தை
இந்த பேச்சு வார்த்தையானது கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடந்து வரும் நிலையில், விரைவில் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தீபாவளிக்குள் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் இது இறுதி கட்டத்தினை எட்டாத நிலையில், இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடக்கவுள்ளது. இந்த ஒப்பந்தம் சுமூக நிலையை எட்டினால் இதன் மூலம் இரு நாட்டு வர்த்தகமும் மேம்படும் எனலாம்.
இரு தரப்பு வணிகமும் மேம்படும்
குறிப்பாக வரி குறைப்பு மூலம் ஜவுளி, தோல் மற்றும் விலையுயர்ந்த ஆபரண ஏற்றுமதி என பலவற்றையும் அதிகரிக்க உதவும். இதே இங்கிலாந்தில் ஸ்காட்ச் மற்றும் விஸ்கி மற்றும் ஆட்டோமொபல் எனவும் வரிச் சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த இரு தரப்பு வணிகம் மேம்படும். இது இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தரப்பு வணிக நடவடிக்கை
கடந்த 2021 - 22ம் ஆண்டிலேயே இவ்விரு நாடுகளுக்கு இடையேயான வணிகம் என்பது 17.5 பில்லியன் டாலராக அதிகரித்தது. இது கடந்த 2020 - 21ல் 13.2 பில்லியன் டாலராக இருந்தது. இந்த காலகட்டத்தில் இந்தியாவின் ஏற்றுமதியும் 10.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதே இறக்குமதியானது 7 பில்லியன் டாலராகவும் இருந்தது.
எதிர்பார்ப்பு?
மொத்தத்தில் இன்று நடக்கவிருக்கும் இந்த பேச்சு வார்த்தையில் முக்கிய முடிவுகள் வெளியாகலாம். இது மேற்கொண்டு இவ்விரு நாடுகளுக்கு இடையேயான வணிக வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம். இது இந்தியாவின் வளர்ச்சியினை ஊக்குவிக்க பயனாக அமையலாம். எப்படியிருப்பினும் இதற்கு ரிஷி சுனக் தலைமையிலான அரசு ஒப்புதம் அளிக்குமா? இந்தியாவுக்கு பச்சை கொடி காட்டுவாரா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications