ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்! யூபிஐ முதல் சிலிண்டர் வரை.. அந்த 7 மாற்றங்கள் என்னென்ன?

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் புதிய விதிகள் அமலுக்கு வரும். அந்த வகையில் வருகின்ற ஜூன் 1-ஆம் தேதியும் ஒரு சில மாற்றங்கள் வரவுள்ளன. முன்கூட்டியே இதை நாம் தெரிந்து வைத்துக் கொண்டால் தேவையற்ற செலவுகளையும், கடைசி நேரத் தலைவலியையும் வெகுவாக தவிர்க்கலாம். அப்படி இந்த மாத தொடக்கத்தில் இருந்து என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

UPI: ஆன்லைன் மோசடி அதிகரித்திருப்பது அனைவரும் அறிந்ததுதான். எனவே பண மோசடிகளை தவிர்ப்பதற்காக என்பிசிஐ ஒரு புதிய முறையை செயல்படுத்தத் தயாராகி வருகிறது. நீங்கள் ஒருவருக்கு QR கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்பும்போதோ அல்லது அவர்களுடைய மொபைல் எண்ணுக்கு பணம் அனுப்பும்போதோ அவர்களுடைய வங்கி கணக்கில் என்ன பெயர் இருக்கிறதோ? அந்த பெயர் காண்பிக்கப்படும். இதன் மூலம் நீங்கள் தவறான நபருக்கு பணம் அனுப்புவது முற்றிலும் தவிர்க்கப்படும்.

இதற்கு முன்னர் அவர்களுடைய செல்லப் பெயர் திரையில் காண்பிக்கப்பட்டது. ஆனால் தொடர் மோசடிகளைக் கருத்தில் கொண்டு வங்கிக் கணக்கின் பெயரே இனி காண்பிக்கப்படும்.

ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்! யூபிஐ முதல் சிலிண்டர் வரை.. அந்த 7 மாற்றங்கள் என்னென்ன?

எல்பிஜி சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் OMC நிறுவனங்கள் சிலிண்டர் விலைகளில் சில திருத்தங்களைச் செய்யும். அந்த வகையில் ஜூன் 1-ஆம் தேதி அன்றும் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதமே கமர்சியல் சிலிண்டர் கமர்சியல் சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்ந்து ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி தந்தது. இதனால் ஒரு கமர்சியல் சிலிண்டரின் விலை ரூ.3,000-த்தைக் கடந்தது. ஆனால் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் இல்லத்தரசிகளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்தது. இந்த மாதமும் கமர்சியல் சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ரயில் பயணம்: வருகின்ற ஜூன் மாதத்தில் இந்திய ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட இருக்கிறது. இதனால் சுமார் 77 இந்திய ரயில்கள் வரை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு சில ரயில் வழித்தடங்களில் பிரச்சனை இருப்பதால் அந்த வழித்தடங்கள் மாற்றப்படவும் வாய்ப்புள்ளது. மேலும் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேஷ், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்களில் இந்த தாக்கம் அதிகமாக இருக்கும். தமிழகத்திலிருந்து இந்த மாநிலங்களுக்கு ஜூன் மாதத்தில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால் ரயில் கிளம்பும் லைவ் ஸ்டேட்டஸ்-ஐ சரி பார்த்துக் கொள்வது நல்லது.

பான் கார்டு மாற்றம்: வருமான வரித்துறை பான் கார்டு விதிகளில் சில தளர்வுகளையும் அதே நேரத்தில் சில கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளது. நீங்கள் ரூ.50,000-த்துக்கும் மேல் வங்கியில் கேஷ் டெபாசிட் செய்தால் இனி பான் கார்டு வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதே போல சொத்து பரிவர்த்தனைக்காக பான் கார்டை பயன்படுத்தும் போது இதற்கு முன்னர் ரூ.10 லட்சம் வரையில் பரிவர்த்தனை செய்யலாம். ஆனால் தற்போது இந்த வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.45 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து பரிவர்த்தனை செய்யும் போது, கண்டிப்பாக பான் கார்டு வழங்க வேண்டும். பான் கார்டு இல்லாத தனிநபர்கள் இதற்கு முன்பு ஃபார்ம் 60 பயன்படுத்தி வந்தனர். தற்போது அரசு ஃபார்ம் 97-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

சோலார் பேனல்கள்: இன்றைய எலக்ட்ரிசிட்டி பில்லைக் கருத்தில் கொண்டு பல வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அரசு புதிய "Approved List of Models and Manufacturers" என்ற விதியை ஜூன் 1 முதல் அமலுக்கு கொண்டு வரவுள்ளது. இனிமேல் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சோலார் மாடல்களை பயன்படுத்தினால் மட்டும்தான் அதற்கு மானியம் வழங்கப்படும். தரம் குறைந்த அல்லது அங்கீகரிக்கப்படாத சோலார் பேனல்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்காது.

ஏடிஎம் கட்டணங்கள்: சில வங்கிகள் தற்போது பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை மாற்றியமைத்து வருகின்றன. அதோடு சில வங்கிகள் தங்களுடைய ஏடிஎம் பரிவர்த்தனை விதிகளில் மாற்றங்களை அறிவித்திருக்கிறது. பஞ்சாப் நேஷனல் பேங்க் சில டெபிட் கார்டுகளுக்கு மட்டும் பண பரிவர்த்தனை வரம்பை குறைத்துள்ளது. ஜூன் மாதத்தில் நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளைப் பொறுத்தே வங்கிகள் ஏடிஎம் சேவை கட்டணங்களை மாற்ற வாய்ப்புள்ளது.

ஆர்பிஐ பணவியல் கொள்கை கூட்டம்: பணவியல் கொள்கை கூட்டம் வருகின்ற ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவின் பணவீக்கம் மற்றும் பொருளாதாரத்தை பொறுத்து வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படும். ரெப்போ விகிதம் குறைந்தால் உங்களுடைய வீட்டுக் கடன் இஎம்ஐ-யும் குறையும். அதுவே அதிகரித்தால் நீங்கள் அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை வரலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+