சுய தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணும் இளைஞர்கள் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். படித்த பட்டதாரிகளும் நிறுவனங்களுக்கு சென்று பணிபுரிந்து விட்டு தங்களுக்கு வேலை செட் ஆகவில்லை எனக் கூறி தெருவோர கடைகள், துணி கடைகள், ஆன்லைன் விற்பனை போன்றவற்றை செய்கின்றனர். நீங்களும் ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தால்.. உங்களுக்குத்தான் இந்தப் பதிவு. இந்த பதிவில் சில வணிக யோசனைகள் குறித்து பார்க்கவுள்ளோம்.
ஈ-காமர்ஸ்: உங்களுடைய தயாரிப்பு மற்றும் சேவைகளை ஆன்லைனில் விற்பனை செய்யலாம். ஆன்லைன் ஷாப்பிங்கின் போக்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே எலக்ட்ரானிக்ஸ், நுகர்வோர் பொருட்கள் போன்ற பல்வேறு தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்யலாம். அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஷாப்பிஃபை போன்ற தளங்களிலும் உங்களுக்குனே தனி அக்கவுண்ட் ஓபன் செய்து அந்த வலைதளங்களின் மூலமாகவும் உங்கள் தொழிலை மேம்படுத்தலாம்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்: டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது இணையம் மூலமாக மார்க்கெட்டிங் செய்வதைக் குறிக்கிறது. நீங்கள் ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை தொடங்கலாம் அல்லது ஒரு ஃப்ரீலான்சராக டிஜிட்டல் மார்க்கெட்டராக வேலை செய்யலாம். சில நேரங்களில் ஒரு நிறுவனத்திற்கு தேவைப்படும் கன்டென்ட் ரைட்டிங், SEO ஆப்டிமைசேஷன் போன்ற வேலைகளை செய்வதற்கு ஆட்கள் தேவைப்படுவார்கள். இது போன்ற வேலையை செய்து பணம் சம்பாதிக்கலாம்.
ஃப்ரீலான்சிங்: ஃப்ரீலான்சர் மற்றும் பீவர் போன்ற தளங்களில் பதிவு செய்து ஃப்ரீலான்சிங் வேலை செய்யலாம் இதில் பல்வேறு வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கும். டேட்டா என்ட்ரி, காப்பி ரைட்டிங், ட்ரான்ஸ்லேஷன், அப்ளிகேஷன் டெவலப்பர் போன்ற அனைத்து வேலை வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு அதில் ஏதேனும் ஒரு வேலையை தேர்ந்தெடுத்து செய்யலாம்.
உணவு விற்பனை: உணவு விநியோகம் மற்றும் உணவு வணிகம் வேகமாக வளர்ந்து வருகிறது. இன்றெல்லாம் படித்து முடித்த பட்டதாரிகளும் பகுதி நேரமாக ஸ்டால்கள் மற்றும் டிரக்குகளில் உணவுகளை விற்பனை செய்கின்றனர் நீங்கள் சமைப்பதில் ஆர்வம் மிக்கவராக இருந்தால் உணவு விற்பனையைத் தொடங்கலாம்.
அப்ளிகேஷன் டெவெலப்மென்ட்: மொபைல் அப்ளிகேஷன்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே சரியான அப்ளிகேஷனை உருவாக்கினால் நல்ல லாபம் பெறலாம். அதன் மூலம் நீங்கள் ஒரு மொபைலை அப்ளிகேஷன் நிறுவனத்தையும் தொடங்கலாம். இதற்கு நீங்கள் ஆப் டெவலப்மெண்ட் மற்றும் கோட் ஆகியவற்றில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். உங்களுக்கு கோடிங்கில் திறமை இருந்தால் மக்களுக்கு தீர்வுகளை வழங்கும் அப்ளிகேஷன்களை உருவாக்கலாம்.
ஃபேஷன்: பியூட்டி பார்லர் அல்லது பிற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் கடையை திறக்கலாம். நாளுக்கு நாள் வளரக்கூடிய தொழில்களில் இதுவும் ஒன்று. எனவே நீங்களும் ஒரு ஃபேஷன் தோழில் தொடங்கி லாபம் பெறலாம். ஆன்லைன் வர்த்தகங்கள் அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து விதவிதமான ஆடைகள், சருமத்திற்கு தேவையான கிரீம்கள், பாடி லோஷன்கள் போன்றவற்றை விரும்பி வாங்கும் மக்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே உங்கள் சொந்த பிராண்டையும் தேவைப்படும் உரிமங்களைப் பெற்று ஆரம்பிக்கலாம்.
பயணம் மற்றும் சுற்றுலா: நீங்கள் சுற்றுலா தளங்களை பற்றிய விரிவான தகவல்களைக் கொண்டிருந்தால். ஒரு பயண நிறுவனத்தை திறக்கலாம் அல்லது சுற்றுலா பயணிகளுக்கு தேவைப்படும் வழிகாட்டுதல்களை வழங்கலாம்.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications