இது வருமான வரி செலுத்தும் சீசன் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த மாதம் வருமான வரி செலுத்துவோருக்கு கொஞ்சம் டென்சனாகத் தான் இருக்கும். அதுவும் இந்தியாவில் சொல்லவே வேண்டாம்.
இம்மாதம் எல்லாரும் வருமான வரியை எப்படி மிச்சப்படுத்து என்பது குறித்து பல முதலீடுகளை செய்து பரபரப்பாக இருப்பார்கள். ஆனால் இந்த 7 நாடுகளில் உள்ள மக்கள் மட்டும் அந்த டென்சனே இல்லாமல் இருப்பார்கள். ஆமாங்க, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் உட்பட இன்னும் சில நாடுகளில் உள்ள மக்கள் வருமான வரியே செலுத்த வேண்டாமாம்.
UAE!
ஐக்கிய அரபு எமிரேட் நாடு மிக அழகான, செழிப்பான நாடு. இங்கு பொருளாதார, கல்வி முறை, சுகாதாரம் என அனைத்திலும் அதன் மக்களுக்கு அந்நாட்டு அரசு சிறந்த வசதிகளை வழங்கியுள்ளது.
இந்நாட்டின் முக்கிய வருமான ஆதாரமே எண்ணெய் வளமும், வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான கார்ப்பரேட் வரிகளும் தான். அதனால் அந்நாட்டு மக்கள் அவர்களின் தனிப்பட்ட வருமானத்திற்கு வருமான வரி ஏதும் செலுத்த வேண்டியதில்லை. அதனால் தான் அங்குள்ளவர்கள் மிக வசதியாகவும், நிம்மதியாகவும் அவர்களின் வாழ்க்கையைக் கழிக்கின்றனர்.
மொனாக்கோ (Monaco)
உலகின் இரண்டாவது சிறிய நாடான மொனாக்கோ, மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள மிக அழகான நாடாகும். அதிலும் வாழ விலை உயர்ந்த நாடுகளில் இதுவும் ஒன்றாகும். அதாவது மக்கள் வாங்கும் தினசரி தேவைகளுக்கான பொருட்களின் விலை மிக அதிகமாக இருக்கும்.
சரி, இப்போ விஷயம் இதுதான், இந்நாட்டு மக்கள் எவ்வித capital gains taxes மற்றும் wealth taxes போன்ற வரிகள் செலுத்தத் தேவையில்லை.
கத்தார் (Qatar)!
உலகின் எண்ணெய் வளங்களை அதிக கொண்ட நாடு தான் கத்தார். இங்கும் மக்கள் அவர்களின் வருமான வரியைச் செலுத்தத் தேவையில்லை. ஆனால் தனிநபர் ஒருவர் கத்தார் அரசின் எந்தவொரு வர்த்தகம், அசையும்/அல்லது அசையா சொத்துக்களிலிருந்து வருமானம் ஈட்டினால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.
பஹ்ரைன் (Bahrain)
எண்ணெய் வளங்கள் மிக்க, 50 இயற்கைத் தீவுகள் மற்றும் 22 செயற்கை தீவுகள் கொண்ட சிறிய நாடுதான் பஹ்ரைன். இங்குள்ள மக்கள் தனிநபர் வருமானம், மூலதன ஆதாயங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் விற்பனை மூலம் ஈட்டும் லாபத்திற்கு வரி ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் எரிவாயு துறையில் செயல்படும் வணிகங்களுக்கு அதிக வரி விதிக்கப்படும்.
பெர்முடா (Bermuda)
பெட்முடாவில் செட்டில் ஆக நினைத்தால் உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ். ஏனெனில் இங்கு தனிநபர் வருமான வரி இல்லை என்பது ஒரு விஷயம். ஆனால் லிஸ்ட் இன்னும் முடியல இந்நாட்டில் வாட் வரி (VAT), கார்ப்பரேட் வரிகள், விற்பனை வரிகள் செலுத்த வேண்டியதில்லை. குறிப்பாக முதலாளிகள் ஊதிய வரி செலுத்த வேண்டியதில்லை.
குவைத் (Kuwait)
இங்கும் தனிநபர் வருமான வரி செலுத்த தேவையில்லை. ஆனால் சமூக பாதுகாப்பிற்கு அங்குள்ளவர்களுக்கு பங்களிப்பை கொடுக்க வேண்டும்.
தி பஹாமாஸ் (The Bahamas)
இந்நாடு சுற்றுலா தலங்களுக்கு பெயர் போனது. அதன்மூலமே இந்நாட்டிற்கு அதிக வருமானம் கிடைக்கிறது. அதனால் அங்கு வசிப்பவர்கள் தனிநபர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. அதுமட்டுமின்றி மூலதன ஆதாயங்கள், பரம்பரைச் சொத்துக்கள் மூலம் பெறும் வருமானத்திற்கு வரிகள் ஏதேனும் செலுத்த வேண்டியதில்லை.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications