இந்தியாவின் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றான அம்பானி குடும்பம் அதன் தொழில் வெற்றிக்காக மட்டும் அறியப்படவில்லை. அவர்களது ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கும் பேர் போனது. அம்பானி குடும்பத்தார் தங்களது தினசரி வாழ்வில் பல்வேறு ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றி நல்ல உடல்நலத்துடனும் தெளிவான மனச் சிந்தனையுடனும் வெற்றிகரமாகச் செயல்படுகின்றனர். அவர்களிடம் உள்ள இந்த நல்ல பண்புகளை கற்று நமது வாழ்க்கையையும் சிறப்பாக மாற்றலாம்.
உணவுக்கு முன்னுரிமை: அம்பானி குடும்பத்தாரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வித்தாக இருப்பது நல்ல உணவு முறையாகும். அவர்களது உணவில் வைட்டமின், தாதுக்கள், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்திருக்கும். அவர்கள் கொறிக்கும் உணவுகளை சாப்பிடுவதில்லை. அதற்கு பதிலாக வீட்டில் தயாரித்த பலகாரங்களையே சாப்பிடுகின்றனர்.

புதிய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொழுப்பற்ற புரதங்கள் அவர்களது உணவில் எப்போதும் நிறைந்திருக்கும். இந்த பழக்கம் உடலில் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆற்றலையும் நாள் முழுவதும் தருகிறது.
முகேஷ் அம்பானி உணவு விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறார். முக்கியமாக குஜராத்தி ஸ்டைல் ஆரோக்கியமான மற்றும் சத்துகள் நிறைந்த உணவை சாப்பிடுகிறார்.
உடல்பயிற்சிக்கு முக்கியத்துவம்: தினசரி உடல்பயிற்சி செய்யாமல் அம்பானி குடும்பத்தார் யாரும் இருப்பதில்லை. நீதா அம்பானி கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கிறார். பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை அவர் செய்கிறார். அத்துடன் யோகா, நீச்சல், நடனம் ஆகியவற்றையும் செய்கிறார்.
முகேஷ் அம்பானி எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும் விடாமல் உடல்பயிற்சி செய்கிறார்.
இந்த வாடிக்கையால் அவர்களது உடல் ஆரோக்கியம், மன வளம் சிறப்பாக இருக்கிறது.
உடலை நீர்ச்சத்துடன் வைத்திருத்தல்: உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இதை அம்பானிகள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். நாள் முழுவதும் நிறைய தண்ணீர் அருந்துகின்றனர். இதனால் உணவு நன்றாக ஜீரணம் ஆவதோடு சருமமும் பளபளப்பாகக் காணப்படும். நீதா அம்பானி இயற்கை சாறான பீட்ரூட், இளநீர், மூலிகை டீ, பிரஷ் ஜூஸ் அருந்திக் கொண்டே இருப்பார்.
மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை: அம்பானிகள் தங்களது வாழ்க்கையில் மன அழுத்தத்தை சமாளிக்கும் நுட்பங்களை பின்பற்றுகின்றனர். நீதா அம்பானி தியானத்தை செய்கிறார். இது அவரது மனதையும் உடலையும் சமச்சீராக வைத்திருக்கிறது.
இந்தப் பயிற்சி பதற்றத்தை தணிக்கிறது. கவனத்தை அதிகரித்து உணர்ச்சியைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. மன உளைச்சலை கட்டுப்படுத்தத் தெரிந்து கொண்டால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளலாம். மறக்காமல் தியானத்தையும் நம் அன்றாட பழக்கமாக கொள்ள வேண்டும்.
தேவை ஆழ்ந்த தூக்கம்: நல்ல ஆழ்ந்த தூக்கத்துக்கு அம்பானிகள் முன்னுரிமை தருகின்றனர். தூக்கம்தான் உடல் ஆரோக்கியம், மனத்தெளிவு, உணர்ச்சி கட்டுப்பாடுக்கு அவசியம் என்பதை புரிந்து வைத்துள்ளனர்.
சீரான தூக்கம் இருந்தால் அமைதியான வாழ்க்கை அமையும். அம்பானிகள் வாழ்க்கையில் தொழிலுக்கு அதிக நேரம் தேவைப்படும் நேரத்திலும் நல்ல தூக்கம் இருந்தால் மனம் விரைவாகச் செயல்படும்.
குடும்பத்தார், நண்பர்களுடன் நேரம் செலவிடுதல்: குடும்ப உறுப்பினர்களுடனும் நெருங்கிய நண்பர்களுடன் உறவாடுவதற்கு அம்பானி குடும்பத்தார் போதிய நேரத்தை ஒதுக்குகின்றனர். சமூக உறவுக்கு அவர்கள் முக்கியத்துவம் தருகின்றனர். விழாக்கள், விடுமுறைகள் போன்றவற்றில் கலந்து கொண்டு எல்லாருடனும் நல்ல உறவை பேணுகின்றனர்.
அம்பானிகள் எல்லா பண்டிகைகளையும் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர். இது அவர்களை நல்ல சமூக பந்தத்தில் ஆழ்த்துகிறது.
வாழ்நாள் முழுவதும் தனிகுண வளர்ச்சி: தங்களது வாழ்க்கை முழுவதும் நல்ல பண்புகளை அம்பானிகள் கற்றுக் கொள்கினஅறனர். வாசிப்பு, கருத்தரங்களில் பங்கேற்பு, எல்லா விஷயங்களையும் அறிந்து வைத்தல் போன்றவற்றுக்கு நேரம் தருகின்றனர். இந்த பழக்கம் அவர்களது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் அவர்களை சிறந்து விளங்க வைக்கிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விழாவின்போது இந்த ஆண்டு கலந்து கொண்ட முகேஷ் அம்பானி தனது ஊழியர்களிடம் பேசுகையில் உங்களது ஆற்றலை வீணாக்காதீர்கள். கடந்த கால அனுபவத்தை ஆராய்ந்து தவறுகளை களையுங்கள் என்றார்.
Story written by: Jayachandran
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications