இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான ஓலா இந்தக் கொரோனா காலத்தில் அதிகளவிலான வர்த்தகத்தையும், வருவாயும் இழந்து மோசமான நிலையில் இருக்கிறது. மொத்த வர்த்தகச் சந்தையும் ஓலா நிறுவனத்திற்குக் கைகொடுக்காத நிலையில் ஓலா நிறுவனத்தின் நிர்வாகத்திலும் மிகப்பெரிய பிரச்சனை வெடித்துள்ளது.
ஆம், 2020ஆம் ஆண்டில் மட்டும் ஓலா நிறுவனத்தின் CXO பரிவு அதிகாரிகளில் சுமார் 7 பேர் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர், சமீபத்தில் இந்நிறுவனத்தின் ஓலே எலக்ட்ரிக் பிரிவு தலைவர் மற்றும் துணை நிறுவனரான அன்கித் ஜெயின் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அன்கித் ஜெயின்
அன்கித் ஜெயின் ஓலே நிறுவனத்தில் சுமார் 5 வருடங்களாக, இந்நிறுவனத்தின் துணை நிறுவனரான பவிஷ் அகர்வால் உடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்கித் ஜெயின் அவர்களின் வெளியேற்றம் இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய நிறுவனம் கைப்பற்றல்
அன்கித் ஜெயின் வெளியேற்றத்தின் மூலம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் தற்போது இரு உயர் பதவி பணியிடங்கள் காலியாகியுள்ளது. லாக்டவுன் காலத்தில் ஓலாவின் வர்த்தகம் சரிந்தாலும், இக்காலகட்டத்தில் தான் Amsterdam நாட்டைச் சேர்ந்த ஒரு எலக்ட்ரிக் வாகன நிறுவமான Etergo-வை கைப்பற்றியது.
ஐபிஓ திட்டம்
கடந்த நிதியாண்டு வரையில் ஓலா 2021ஆம் ஆண்டில் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு இருந்தது, இதற்காக நிறுவனத்தின் வளர்ச்சியைப் பல பிரிவுகளில் வளர்க்க வேண்டும் என CXO பிரிவில் புதிதாகப் பல அதிகாரிகளை நியமித்து வந்தது ஓலா நிர்வாகம். ஆனால் கொரோனா பாதிப்பின் எதிரொலியாகத் தற்போது 2020ல் மட்டும் சுமார் 7 உயர் அதிகாரிகள் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
முக்கிய வர்த்தகப் பிரிவுகள்
ஓலா எலக்ட்ரிக், ஓலா, ஓலா மொபிலிட்டி, ஓலா பைனான்சியல் சர்வீசஸ் ஆகிய 4 முக்கிய வர்த்தகப் பிரிவில் இருந்து தற்போது உயர் அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். இதன் மூலம் ஓலா உயர் மட்ட நிர்வாகத்தில் முக்கியப் பிரச்சனை இருப்பதாகத் தெரிகிறது.
வர்த்தக விரிவாக்கம்
கடந்த மார்ச் 2019ல் இந்நிறுவனத்தின் நஷ்ட அளவீட்டை 2,676.7 கோடி ரூபாயில் இருந்து 1,160 கோடி ரூபாய் அளவில் குறைத்து தொடர்ந்த வர்த்தக விரிவாக்கம், வாகனங்கள் மற்றும் கார் ஒட்டுனர்களின் எண்ணிக்கை அதிகரித்தல், புதிய சேவைகள் அறிமுகம் எனத் தொடர்ந்து அதிகளவிலான வர்த்தகத்தை ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
95 சதவீத வருவாய் இழப்பு
இந்தக் கொரோனா காலத்தில் மட்டும் ஓலா சுமார் 1400 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து கடந்த 2 மாதத்தில் சுமார் 95 சதவீத வருவாயை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications