பல்வேறு முக்கிய திட்டங்கள் மற்றும் அரசின் கொள்கைகளுக்கான கெடு செப்டம்பரில் வருகிறது. ரூ.2000 நோட்டு டெபாசிட் அல்லது மாற்றுதல், சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை தருதல், இலவச ஆதார் அப்டேட்கள் இதில் அடங்கும். இதில் பல கெடுக்கள் ஏற்கெனவே நீட்டிக்கப்பட்டவை. இப்போது அடுத்த மாத இறுதியில் முடிகிறது.
செப்டம்பர் 30க்குள் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் அல்லது மாற்றவேண்டும் என்ற கெடுவை மேலும் நீட்டிக்கப் போவதில்லை என்ற முடிவில் நிதியமைச்சகம் உறுதியாக இருக்கிறது. மக்களவையில் மத்திய இணை நிதியமைச்சர் பங்கஜ் சௌத்திரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் செப்டம்பர் 30க்கு மேல் ரூ.2000 நோட்டை மாற்றுவதற்கு கால அவகாசம் தரப்படுமா என்ற கேள்விக்கு இல்லை என்று மறுத்துவிட்டார்.

கடந்த மே 19 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆனால் பொது மக்களுக்கு இதற்கு நான்கு மாத அவகாசத்தை தந்து நோட்டை வங்கிகளில் டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ அறிவுறுத்தியது.
மார்ச் 31 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிதித்துறை குறிப்பில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையிலான ஆறு மாத காலத்துக்குள் சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் கேஒய்சிக்காக ஆதார் விவரங்களை தர வேண்டும் என்று கூறியிருந்தது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா, பிபிஎப், தேசிய சேமிப்பு சான்றிதழ் ஆகிய திட்டங்கள் இதில் அடங்கும். ஆதார் எண்ணை வழங்காவிட்டால் தற்போதுள்ள வாடிக்கையாளர்களின் கணக்குகள் அக்டோபர் 1ஆம் தேதி முடக்கப்படும்.
தகுதி வாய்ந்த டிரெடிங் மற்றும் டிமேட் அக்கவுன்ட்தாரர்கள் தங்களது கணக்குகளுக்கு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வாரிசுகளை நியமிக்க வேண்டும் என்று இந்திய செக்யூரிட்டீஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு அறிவித்துள்ளது. ஆனால் இந்த தேதியை பின்னர் 2023 மார்ச் 31 வரை நீட்டித்தது.
இலவச ஆதார் கார்டு அப்டேட்களை செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என்று Unique Identification Authority of India அறிவித்துள்ளது.
ஆக்ஸிஸ் வங்கியின் மேக்னஸ் கிரெடிட் கார்டு ஆண்டுக் கட்டணத்தை ரூ.10000 பிளஸ் ஜிஎஸ்டியில் இருந்து ரூ.12500 ஆக செப்டம்பர் 1இல் இருந்து உயர்த்துவதாக அறிவித்துள்ளது.இதுவரை தரப்பட்ட ரூ.10000க்கான வருடாந்திர டிஸ்கவுன்ட் வவுச்சர் இனி தரப்படமாட்டாது.
மாதம் ரூ.1 லட்சம் செலவு செய்தால் கிடைக்கக்கூடிய மாதாந்திர 25,000 EDGE ரிவார்டு பாயிண்ட்கள் செப்டம்பர் 1 உடன் நிறுத்தப்படும்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ வீகேர் திட்டத்துக்கான கெடுவை நீட்டித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 5-10 ஆண்டுகளுக்கு அதிக வட்டிவிகிதம் அளிக்கப்பட்டது. இந்தத்திட்டம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐடிபிஐ வங்கி தனது ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டமான அம்ரித் மஹோத்சவ்வின் செல்லுபடி காலத்தை செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. இந்தத் திட்டத்தின் இரண்டு கால அளவுக்கு 7.10-7.65 சதவீதம் வட்டி தரப்பட்டது. மற்றவர்களைக் காட்டிலும் மூத்த குடிமக்களுக்கு இந்தத் திட்டத்தில் கூடுதல் வட்டி அளிக்கப்பட்டது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications