மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே நிதித்துறையினர் மத்தியில் ஒரு பரபரப்பு காணப்படும். ஏனெனில் நிதியாண்டு முடிவடையவுள்ள நிலையில், ஒரு நிதியாண்டில் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் என்ற பரபரப்பு இருக்கும்.
ஆக நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்த மார்ச் 31-க்குள் செய்ய வேண்டிய 7 முக்கிய அம்சங்கள் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
ஆதார் பான் இணைப்பு
ஆதார் பான் இணைப்புக்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். இதற்காக ஏற்கனவே அரசு பல முறை கால அவகாசத்தினை கொடுத்த நிலையில், இந்த முறை கால அவகாசம் நீடிப்பது சந்தேகமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. ஆக இதுவரையில் பான் ஆதாரினை இணைக்காதவர்கள் மார்ச் 31 -க்குள் இணைத்துக் கொள்வது மிக அவசியமான ஒன்று. அப்படி இணைக்காத பட்சத்தில் உங்கள் பான் எண் செயலற்று போகலாம். இதனால் பல சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.
வரி சேமிப்பு முதலீடுகள்
பொதுவாக ஒரு நிதியாண்டில் நீங்கள் செய்த நிதி பரிவர்த்தனைகளை கொடுத்து வருமான வரி தாக்கல் என்பதை செய்வோம். ஆக அந்த வருமான வரி தாக்கலில் சில வரி சலுகைகளும் இருக்கும். குறிப்பாக செய்யும் முதலீடுகள், இன்சூரன்ஸ் பிரிமீயம், டிராவல் அலவன்ஸ் போன்ற பலவற்றிற்கும் வரி சலுகை என்பது கிடைக்கும். குறிப்பாக 80 சி பிரிவின் கீழ் வரி சலுகை என்பது கிடைக்கும். அஞ்சலகத்தின் பல திட்டங்கள், இ.எல்.எஸ்.எஸ் என பலவும் இதில் சலுகைகளை வழங்குகின்றன. ஆக இதனை பெற வேண்டுமெனில் நீங்கள் மார்ச் 31-க்குள் முதலீடு செய்திருக்க வேண்டும்.
பார்ம் 12B
சம்பளதாரர் ஒருவர் ஒரு நிதியாண்டின் பாதியில், ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு புதிய நிறுவனத்திற்கு பணி மாறியவர்கள், பாரம் 12பி-யை புதிய நிறுவனத்திடம் வழங்க வேண்டும். இது முந்தைய நிறுவனத்திற்கும், உங்களுக்குமான நிதி ஆதாரங்களை அறிந்து கொள்ள பயன்படும். ஆக இதுவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. இதனையும் மார்ச் 31-க்கு முன்பாக வழங்கப்பட வேண்டும்.
தாமதமான அல்லது திருத்தம் செய்யப்பட்ட ITR
கடந்த 2021 - 22ம் நிதியாண்டுக்கான தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கால அவகாசமும் மார்ச் 31, 2023 அன்று முடிவடைய உள்ளது. அதேபோல ஏதேனும் சில காரணங்களுக்காக சில விவரங்கள் வருமான வரி தாக்கலில் விட்டு போயிருந்தாலும் கூட அதனை மார்ச் இறுதிக்குள் செய்து கொள்ளலாம்.
சிறப்பு திட்டங்கள்
எஸ்பிஐ, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்திய வங்கி, பஞ்சாப் & சிந்த் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளும் பல சிறப்பு வைப்பு நிதி திட்டங்களை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளன. இந்த திட்டங்கள் பலவும் மார்ச் 31, 2023ல் முடிய உள்ளன. குறிப்பாக எஸ்பிஐ-யின் அம்ரித் கலாஷ் டெபாசிட் எஃப்டி திட்டம், ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சீனியர் சிட்டிசன் கேர் எஃப்டி, இந்தியன் வங்கியின் IND SHAKTI 555 நாள் எஃப்டி திட்டம், ஐடிபிஐ வங்கியின் நமான் சீனியர் சிட்டிசன் டெபாசிட் திட்டம், பஞ்சாப் & சிந்த் வங்கியின் ஸ்பெஷல் எஃப்டி திட்டம் என பலவும் முடிவடையவுள்ளன.
KYC அப்டேட்
ரிசர்வ் வங்கி அறிவித்த கே.ஓய்.சி அப்டேட் என்பது மார்ச் 31, 2023-க்குள் செய்யப்பட வேண்டும். ஆக அதற்குள் அப்டேட் செய்யாதவர்கள் இதனை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
நீண்டகால மூலதன ஆதாய வரி
நீண்டகால மூலதன ஆதாய வரி சலுகையை பெற மார்ச் 31-க்குள் விற்பனை செய்யப்படும் பங்குகள் உள்ளிட்ட அசெட்டுகளுக்கு வரி இல்லை. எனினும் இதனை ஒரு வருடத்திற்கு மேலாக நீங்கள் தொடர்ந்திருக்க வேண்டும். இது வீடு, பத்திரங்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications