சர்வதேச பெண்கள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் இந்திய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களை ஆளும் பெண் வாரிசுகள் பற்றி தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
சமீபத்தில் இந்திய வர்த்தக சந்தையில் பல நிறுவன தலைவர்கள், நிர்வாகத்தை தனது வாரிசு கைகளுக்கு கொடுத்தனர். ஹெச்சிஎல், டிவிஎஸ் நிறுவனத்தை துவங்கி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வரையில் இதில் அடங்கும்.
அப்படி இந்திய சந்தையில் பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியங்களை நிர்வாகம் செய்யும் பெண் தலைவர்கள் யார்..?
ரோஷினி நாடார்
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களான ஷிவ் நாடார் உருவாக்கிய ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை தற்போது அவரின் ஒரே மகளான ரோஷினி நாடார் சிறப்பாக நிர்வாகம் செய்து வருகிறார். இவரது தலைமையில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் லாபம், வருவாய் அனைத்தும் அதிகரித்துள்ளது.
நிசாபா கோத்ரேஜ்
கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார் நிசாபா கோத்ரேஜ். இவர் ஆதி கோத்ரேஜ் மற்றும் பரமேஷ்வர் கோத்ரேஜ் ஆகியோரின் இளைய மகள் ஆவார். ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் மற்றும் வார்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். நிசாபா கோத்ரேஜ் பிற கோத்ரெஜ் குழும நிறுவனங்களின் நிர்வாக குழுவிலும் உள்ளார்.
தன்யா துபாஷ்
கோத்ரேஜ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை பிராண்ட் அதிகாரியாக உள்ளார் தன்யா துபாஷ். இவர் நிசாபாவின் சகோதரி ஆவார். அவர் பிரவுன் பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்றுள்ளார். தான்யா பல்வேறு கோத்ரெஜ் குழும நிறுவனங்களில் நிர்வாக குழுவிலும் உள்ளார்.
ஈஷா அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் ஆகியவற்றில் ஈஷா அம்பானி இயக்குநராக உள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானியின் ஒரே மகள் ஈஷா அம்பானி.
பிரித்தி சுரேகா
பிரித்தி சுரேகா தனது தந்தையால் நிறுவப்பட்ட முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனமான இமாமியின் இயக்குநராக உள்ளார். இந்நிறுவனத்தின் சர்வதேச வணிகம் மற்றும் உலகளாவிய பிராண்ட் மூலோபாய பிரிவின் தலைவராக உள்ளார் பிரித்தி சுரேகா.
வனிஷா மிட்டல்
ஸ்டீல் தொழிலதிபரான லட்சுமி மிட்டலின் மகள் வனிஷா மிட்டல் ஆர்சிலர்-மிட்டல் நிறுவனத்தில் non-executive director ஆக உள்ளார். அவரது சகோதரர் ஆதித்யா மிட்டல் ஆர்சிலர்-மிட்டலின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
பியா சிங்
DLF இன் நிறுவனர் சவுத்ரி ரக்வேந்தர் சிங்-கின் பேத்தியும், DLF தலைவர் மற்றும் CEO குஷால் பால் சிங்கின் மகளுமான பியா சிங் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நிர்வாகமற்ற இயக்குநராக உள்ளார். வார்டன் கல்லூரியில் நிதியியல் பிரிவில் பட்டம் பெற்றள்ள பியா, DLF நிறுவனத்தில் 18 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார். DLF ரீடெய்ல் டெவலப்பர்ஸ் லிமிடெட் மற்றும் DT சினிமாஸ் லிமிடெட் ஆகியவற்றிற்கு தலைமை தாங்கினார்.
குடும்ப வர்த்தகம்
குடும்ப தொழில் அல்லது வர்த்தகத்தை கவனிப்பது என்பது என்ன பெரிய விஷயமா என்று பலரும் கேட்கலாம், சிறிய வர்த்தகமாக இருந்தால் நீங்கள் சொல்வது போல் பெரிய கஷ்டம் இல்லையென்றாலும் அடுத்த நிலைக்கு செல்ல முயற்சிக்கும் அனைவருக்கும் சவால்கள் நிறைந்திருக்கும்.
சவால்
இதிலும் குறிப்பாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு பிரபலமாக இருக்கும் நிறுவனங்கள், உலக நாடுகளில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களில் நிர்வாகம் வாரிசு கைகளுக்கு மாறும் போதும் பெரும் தடுமாற்றத்தை சந்திக்கும். இந்த தடுமாற்றத்தை இவர்கள் அழகாக கடந்து தொடர்ந்து நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் வைத்து வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications