இந்தியாவை கலக்கும் 7 பாட்டிகளின் சமையல் நிறுவனங்கள்.. இவர்கள் யார் தெரியுமா?

நம் வீட்டில் ஒரு பாட்டி இருந்தால் போதும் ஏதாவது சின்னதாக உடல் சரியாக போனால்கூட அக்கறையாக ஒரு கஷாயத்தை செய்து தருவார்கள். அல்லது ஏதாவது கைப்பக்குவமாக ஒரு மருந்தைத் தருவார்கள். பாட்டிமார்களின் கைப்பக்குவமே தனிதான். அதேபோல்தான் அவர்களது சமையல் கலையும்.தினுசுதினுசாக ஏதாவது பலகாரத்தை செய்து தருவார்கள். இது இப்போதைய பாஸ்ட்புட் கலாசாரத்தையும் மிஞ்சும் அளவுக்கு இருக்கும். ஏதாவது இரண்டு மூன்று பொருட்களை வைத்து மிகச் சுவையான ஏதாவது ஒரு பட்சணத்தை செய்து தந்து அசத்தி விடுவார்கள்.
அந்த வகையில் இன்றைக்கு ஒரு ஏழு பாட்டிகள் செய்யும் சமையல் உலக அளவில் பிரபலமாக உள்ளது.

இந்தியாவை கலக்கும் 7 பாட்டிகளின் சமையல் நிறுவனங்கள்.. இவர்கள் யார் தெரியுமா?

1. ஹர்பஜன்ஸ் பச்பன் பாத் ஆஜயே: சண்டீகரை சேர்ந்தவர் ஹர்பஜன் கவுர். 97 வயதான இந்தப் பாட்டியின் சமையல் வெகு பிரமாதம். கேட்டால் என் கையில் என்ன இருக்கிறது. எல்லாம் சுத்தமான நெய்யின் மகிமை என்று சர்வசாதாரணமாகக் கூறுகிறார் ஹர்பஜன் கவுர்.

அவரது தயாரிப்புகளை சுவைக்க சண்டீகருக்குப் போக வேண்டாம். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய குவிந்துள்ளன. அதைப் பார்த்து உங்களுக்குப் பிடித்ததை ஆர்டர் செய்து சாப்பிடலாம். பாட்டியின் ஸ்பெஷாலிட்டி என்று பார்த்தால் கோபி ஷல்கம் கஜார் கா அச்சார்- இது ஒரு ஊறுகாய்.

டர்னிப், காலிபிளவர், கேரட்டை வைத்து தயாரிக்கப்படுகிறது. சிறிய ஸ்பூனில் எடுத்து வைத்தால் ஒரு பிளேட் சாதம் சர்ரென்று தொண்டைக்குள் இறங்கிவிடும். அவ்வளவு சுவை. அதுமட்டுமல்லாமல் அவரது அமிர்தசரஸ் மாங்காய் ஊறுகாய், கடலை மாவை வைத்து செய்யும் இனிப்பான பேசன் டி பர்பி ஆகியவற்றின் ருசியே அலாதி. சாப்பிட்டால் மெய் மறந்து விடுவீர்கள். அவரது பெயரிலேயே உள்ள பிராண்டில் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.

2. பிக்கிள்டு வித் லவ்: கொரானா தொற்றுநோய் காலத்தின் போது உஷா குப்தா என்பவர் தொடங்கிய பிக்கிள்டு வித் லவ் கோவிட் காலத்தில் வெளியே சென்று சாப்பிட முடியாமல் தவித்த பலரது வயிற்றை நிரப்பியது.

கோவிட் காலத்தின் போது நிறைய பேருக்கு சாப்பிட உணவு கிடைக்கவில்லை. ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்ததால் இந்த நிலைமை. இதே தான் 88 வயதான உஷா குப்தாவுக்கும் அவரது கணவர் ராஜ்குமாருக்கும். துரதிர்ஷ்டவசமாக ராஜ்குமார் கொரானா காலத்தில் காலமானார்.

சோகத்தில் இரு்நதபோதும் பசியால் வாடியவர்களுக்கு உதவ உஷா குப்தா முடிவு செய்தார். வீட்டில் சமைத்து வேண்டியவர்களுக்கு விநியோகம் செய்தார். கிட்டத்தட்ட 65,000 பேருக்கு நான்கு நகரங்களில் கோவிட் காலத்தில் உணவுகளை விநியோகம் செய்தார்.

அவருக்கு அவரது பேத்தி ராதிகா பாத்ரா உதவியாக இருந்தார். இருவரும் சேர்ந்து பல வகையான ஊறுகாய்கள், சட்னிகளை தயாரித்து விற்றனர். இதில் கட்டா ஆம் என்ற புளிப்பு மாங்காய் ஊறுகாய் ரொம்பவே பிரபலம். அத்துடன் மாங்காய் துருவல் சட்னி, குலாபி மீத்தா அச்சார் எனப்படும் இனிப்பு ஊறுகாய் மக்களிடையே பிரபலமானதாகும்.

3. ஃபெர்ன்ஸ் பிக்கிள்ஸ்: நடாலின் பெர்னாண்டஸ் ஃபெர்ன் பிக்கிள்ஸை தொடங்கினார்.
1937-இல் கோவாவை சேர்ந்த நடாலின் பெர்னாண்டஸ் தனது கணவர் பெஞ்சமினுடன் சேர்ந்து இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். சன்னமாக நறுக்கிய பல வகையான காய்கறிகளை வைத்து அவர் செய்த ஊறுகாய்கள் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கின.

கோவாவில் இருந்து புனே வரை இருந்த பிரிட்டிஷ் சிப்பாய்களுக்கு இது பேவரைட் ஐட்டமாக இருந்தது. இது பற்றி நடாலின்னின் பேரன் பிரையன் பெர்னாண்டஸ் கூறுகையில், எனது பாட்டி புதுமையான பல வகையான ஈரமான மசாலா ஐட்டங்களை தயாரித்து விற்றார். அவற்றை பாட்டிலில் அடைத்து விற்றார் என்றார்.

கத்தரிக்காய் ஊறுகாய், மாங்காய் தொக்கு மற்றும் காரமான மாங்காய் கசுண்டி எனப்படும் வங்காள ஸ்பெஷல் சட்னி, செம காரமான கோவா ஸ்பெஷல் விண்டாலு பெர்ன் பிக்கிள்ஸின் சிறப்பு ஐட்டங்களாகும்.

4. குஜ்ஜு பென் நா நாஷ்டா: ஊர்மிளா ஆஷர் குஜ்ஜு பென் நா நாஷ்டா என்ற தயாரிப்பை தொடங்கினார். அவர் பல வகையான ருசியான குஜராத்தி பலகாரங்களை செய்தார்.
80 வயதான ஊர்மிளா ஆஷர் தயாரிக்கும் தெப்லா, டோக்ளா, சாபுதானா கிச்சடி, ஃபாராலி பாட்டிஸ் அவரது ஸ்பெஷாலிட்டியாகும்.

2019இல் அவரது குடும்பம் பல இழப்புகளை தாங்கி நிதி சிக்கலுக்கு ஆனபோது ஊர்மிளா ஆஷர் குடும்பத்துக்காக களம் இறங்கினார். எளிமையாகத் தொடங்கிய இந்தத் தொழில் ஒரு பிரபலமான வியாபாரமாக உருவெடுத்துள்ளது.

இதுபற்றி அவரது பேரன் ஹர்ஷ் கூறுகையில், எனது நண்பர்களும் பந்தங்களும் எனது பாட்டியின் உணவை மிகவும் விரும்புவார்கள். ஆனால் இந்தளவுக்கு மக்கள் அவரது சுவையில் மயங்குவார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் 500 கிலோ ஊறுகாய் மற்றும் காலைச்சிற்றுண்டியான மிருதுவான தெப்லா ரொட்டி, டோக்ளா, பூரன் போளி மிகவும் புகழ் பெற்றவையாகும் என்றார்.

80 வயதைக் கடந்த ஊர்மிளா ஆஷர் மாஸ்டர்செப் இந்தியா சீசன் 7இல் பங்கேற்று கலக்கினார்.

5. போஜுஸ் கிச்சன்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர் சேர்ந்து போஜுஸ் கிச்சனை தொடங்கினர். பல வகையான ருசியான மோமோஸ்களை தயாரித்தனர்.

போஜுஸ் கிச்சன் என்றால் நேபாள மொழியில் பாட்டியின் சமையலறை என்று பெயர். 87 வயதான மய்யா தாபா கோவிட் காலத்தில் இதைத் தொடங்கினார். மய்யா அவரது மகள் ஆர்த்தி, பேத்தி சித்ரங்கடா ஆகியோர் சேர்ந்து 2000 ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலை தொடங்கினர்.

கோவிட் காலத்தின் போது வேகவைத்த, பான் ப்ரைடு, டீப் ப்ரைடு, ஹோல் வீட் மோமோஸ்களை தயாரித்தனர்.

6. அம்மிஜிஸ்: அம்மிஜிஸ்ஸை ராஜிந்தர் கவுர் சத்தா தொடங்கினார். அதில் சுவையான மசாலா டீயை தயாரித்து விற்றார். அமிர்தசரஸில் சுவையான மசாலா டீ சாப்பிட்டதை நினைத்து 96 வயதான ராஜிந்தர் கவுர் சத்தா அம்மிஜிஸ்ஸை ஆரம்பித்தார்.

1948-இல் எனக்கு திருமணம் ஆனது. புகுந்த வீட்டில் யாரும் அறிமுகமில்லாத சமயத்தில் ஒரு அந்நிய நபர் போல உணர்ந்தேன். அந்த வீட்டில் தயாரிக்கும் டீ எனக்குப் பிடிக்காது. அந்த வேளையில் மார்க்கெட்டுக்கு சென்று சில மசாலா பொருட்களை வாங்கி வந்தேன்.
அதை வைத்து மசாலா டீயை செய்தேன். இது குடும்பத்தில் எல்லாருக்கும் பிடித்துப் போனது. அத்தோடு என்னையும் பிடித்தது என்றார் கவுர்.

அவரது பேத்தி அமிர்தா சத்வால் கூறுகையில் பாட்டியின் ஷிகஞ்சி எனப்படும் லெமனேட், புல்லட் மிர்ச்சி எனப்படும் வரமிளகாய், பூண்டு, நிலக்கடலை சேர்த்து செய்த டாப்பிங், குட்மிர்ச்சி அச்சார் எனப்படும் வெல்லம் மற்றும் பச்சை மிளகாயை வைத்து செய்யப்படும் ஊறுகாய், பஞ்சாபி சிக்கன் ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கும் என்றார்.

இன்றைக்கு கவுரின் தயாரிப்புகள் அனைத்தும் இந்திய அளவில் மிகவும் பிரபலமாக உள்ளது.

7. ஸ்வீட் காரம் காபி: ஸ்வீட் காரம் காபி நிறுவனம் ஜானகி பாட்டியின் கைவண்ணத்தில் உருவானதாகும். ஜானகி பாட்டி செய்யும் கைமுறுக்கு, தட்டை ஆகியவை குழந்தைகளின் பேவரிட் ஆகும்.

அவரது கைப்பக்குவத்தை மறந்துவிடாமல் இருக்க பேரக்குழந்தைகள் தங்களது வேலையை விட்டு விட்டு ஸ்வீட் காரம் காபியை தொடங்கினர்.

வெறும் 2000 ரூபாய் முதலீட்டில்தான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
சமையலை நான் மேற்பார்வை செய்தேன். இதில் நான் எதையும் காம்ப்ரமைஸ் செய்வதில்லை. எனது குடும்பத்துக்கு செய்வது போன்றே வியாபாரத்துக்கும் தயாரிப்போம் என்கிறார் ஜானகி பாட்டி.

Story written by: Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+