இந்திய அரசியலில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த ஒரு ஒப்பற்ற தலைவர் என்றால் அது டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் தான். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமூகத்திற்காகவும் தன்னையே அர்ப்பணித்தவர். இவர் சிறந்த பொருளாதார நிபுணர் மட்டுமின்றி சிறந்த கல்வியாளரும் கூட. அவருடைய சிந்தனைகளும் செயல்களும் இன்றளவும் மக்களின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இப்படி தனது வாழ்வை பிறருக்காக அர்ப்பணித்த அம்பேத்கருக்கு இன்று பிறந்தநாள். இன்றைய தினம் அவரைப் பற்றிய பெரிதும் அறியப்படாத விஷயங்கள் குறித்து தான் பார்க்கவுள்ளோம்.
மத்திய பிரதேசத்தின் மோவ் நகரில்.. ராம்ஜி மாலோஜி சக்பால் மற்றும் பீமாபாய் முற்பக்கர் சக்பால் ஆகியோருக்கு 1981-ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தவர். அம்பேத்கர் மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய 126-ஆவது பிறந்தநாள் இன்று. இந்த பதிவில் அம்பேத்கரை பற்றி பெரிதும் அறியப்படாத உண்மைகளை பார்ப்போம்.

அம்பேத்கரின் உண்மையான பெயர்: அம்பவடேகர் என்ற குடும்பப் பெயரைக் கொண்டவர் அம்பேத்கர். மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான அம்பாவடே என்ற பெயரிலிருந்து எடுக்கப்பட்டது. பள்ளி பதிவுகளில் எல்லாம் அவருடைய குடும்ப பெயரை சேர்த்துக் கொண்டார். அம்பேத்கருடைய ஆசிரியரின் பெயர் மகாதேவ் அம்பேத்கர். அம்பவடேகர் என்ற இயற்பெயரை கொண்ட அம்பேத்கரின் மீது அளவற்ற பற்று இருந்த காரணத்தினால் அந்த ஆசிரியர் தனது பெயரில் உள்ள அம்பேத்கரை அவருக்கு வழங்கினார்.
வெளிநாட்டிற்குச் சென்று முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர்: வெளிநாட்டிற்கு சென்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் அம்பேத்கர். தெற்காசியாவில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற நபரும் இவர்தான். அவர் தனது தலைமுறைகளில் மிகவும் படித்த இந்தியர்களில் ஒருவராக இருந்தார்.
மஹத் சத்தியாகிரகம்: 1927-ஆம் ஆண்டு நடைபெற்ற மஹத் சத்தியாகிரகம், டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் அரசியல் சிந்தனையிலும், செயலிலும் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மஹத் என்ற சிறிய ஊரில் இந்த சத்தியாகிரகம் நடத்தப்பட்டது. சவதர் ஏரி என்று அழைக்கப்பட்ட ஒரு பொதுக்குளத்தில் இருந்து தலித் மக்கள் தண்ணீர் குடிப்பதற்கு உரிமை இல்லை என்றிருந்த சமூகக் கட்டுப்பாட்டை எதிர்த்து அம்பேத்கர் இந்த போராட்டத்தை முன்னெடுத்தார்.
வேலை நேரத்தை மாற்றினார்: 1942 முதல் 1946 வரை வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் உறுப்பினராக இருந்த டாக்டர் அம்பேத்கர் பல தொழிலாளர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் மாற்றங்களைக் கொண்டு வந்தார். 1942-ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழிலாளர் மாநாட்டின் போது 12 மணி நேர வேலையை 8 மணி நேரமாக மாற்றினார். அதோடு அகவிலைப்படி, ஊழியர்களுக்கான காப்பீடு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஊதிய அளவை அவ்வப்போது திருத்தும் சட்டம் என பல விஷயங்களைக் கொண்டு வந்தார்.
அம்பேத்கரின் சுயசரிதை: 1935 முதல்1936-ஆம் ஆண்டுகளில், அம்பேத்கர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இந்தியா திரும்பிய பிறகு, தனது சொந்த வாழ்க்கையின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு 20 பக்க சுயசரிதை ஒன்றை எழுதினார். அந்த சுயசரிதையின் தலைப்புதான் "வெயிட்டிங் ஃபார் எ விசா". இந்த நூல், அம்பேத்கர் தனது சிறுவயது முதலே அனுபவித்த தீண்டாமையை உணர்வுபூர்வமாக படிப்பவற்கு எடுத்துச் சொல்லும்.
அரசியலமைப்பின் 370 வது பிரிவை எதிர்த்தார்: அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவில் பாரபட்சம் இருப்பதாகவும், ஒற்றுமைக்கு எதிராக கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அதை எதிர்த்து போராடினார்.
இந்தியாவின் நீர் மற்றும் மின்சார கொள்கையை உருவாக்குவதில் முக்கிய பங்கு: தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம், பக்ராநங்கல் அணைத்திட்டம், ஹிராகுட் அணை திட்டம் என அனைத்திலும் அம்பேத்கரின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. மத்திய மற்றும் மாநில அளவில் நீர் பாசன திட்டங்களை மேம்படுத்த பெரிதும் உதவினார். மின்சார துறை வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications