2023இல் இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது, இந்கிய மக்களால் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் அதிகம் கவனித்த விஷயமாக உள்ளது. இதன் படி 2023ல் போர்ப்ஸ் நிறுவனத்தின் தகவல் படி புதிதாக 169 தொழில்முனைவோர், தொழிலதிபர்கள் மற்றும் பெண்கள் உலக பில்லியனர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
உலகளவில் பெரும் பணக்கார பட்டியலில் இந்தியாவே சேர்ந்த முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, திலீப் சங்வி ஆகியோர் டாப் இடங்களைப் பிடித்திருந்தாலும். 2023 ஆம் ஆண்டில் முதல் முறையாக பில்லியனர்கள் பட்டியலில் இடம் பிடித்த 7 முக்கியமான இந்தியர்கள் பற்றி இங்கு விரிவாகக் காணலாம்.

ரோஹிகுவா சைரஸ் மிஸ்திரி: 2022 ஜூன் மாதத்தில் எதிர்பாராதவிதமாக சைரஸ் மிஸ்திரி காலமான நிலையில் அவரது மனைவி ரோஹிகுவா சைரஸ் மிஸ்திரி பில்லியனர் அந்தஸ்தைப் பெறுகிறார். அவரது குடும்ப சொத்தான டாடா சன்ஸின் 18.4 சதவீத பங்குகள் அவரை பில்லியனர்கள் லீகில் கொண்டு சேர்த்துள்ளது.
டாடா குழுமத்தில் அவரது கணவருக்கு உள்ள பங்கு இவருக்கு வந்து சேர்ந்துள்ள நிலையில் போர்ப்ஸ் மதிப்பின்படி ரோஹிகுவாவின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 8.2 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.68,368 கோடியாகும்.
அஷ்வின் தேசாய் : பில்லியனர்கள் கிளப்பில் சேரும் அஷ்வின் தேசாயின் கம்பெனியான Aether 2022 ஜூனில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அதன் மூலம் 103 மில்லியன் அமெரிக்க டாலர் நிதிதிரட்டிய பின் 10 சதவீத பிரீமியத்தில் பங்குகள் பட்டியலிடப்பட்டன. 72 வயதான தொழில்முனைவரான ஆஷ்வின் 2013இல் ஏதர் நிறுவனத்தை நிறுவினார்.

இந்த நிறுவனம் அக்ரோகெமிக்கல், பார்மாசூட்டிகல், ஆயில் மற்றும் கேஸ் நிறுவனங்களுக்கு கெமிக்கல்களை சப்ளை செய்வதில் சிறந்து விளங்குகிறது. போர்ப்ஸ் ரியல் டைம் டேட்டா அறிக்கையின் படி தேசாயின் நிகர சொத்து மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்திய மதிப்பில் ரூ.8338 கோடிகள்.
நிதின் மற்றும் நிகில் காமத் : பெங்களூரின் பிரபல சகோதரர்களான நிதின் மற்றும் நிகில் காமத் ஒரு லோ-காஸ்ட் புரோக்கரேஜ் சர்வீஸ் நிறுவனமான Zerodha-வை 2010இல் தொடங்கியதில் இருந்து தங்கள் சாதனைத் தடத்தைப் பதித்தனர்.

12 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு மேல் பெற்ற ஜிரோதாவின் சிஇஓ-வான நிதின் காமத்தின் நிகர மதிப்பு 2.7 பில்லியன் அமெரிக்கன் டாலர்களாக இருந்தது. இந்திய மதிப்பில் ரூ.22.513 கோடி. நிகிலின் நிகர மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டாலராகும். இந்திய மதிப்பில் 9,172 கோடி. WTF is with Nikhil Kamath என்ற பாட்காஸ்ட்டின் மூலமும் பிரபலமானவர் நிகில் காமத்.
அபய் சோய் : Max Healthcare Institute-இன் தலைவரான அபய் சோய், Radiant Life Care நிறுவனத்துடன் இணைந்தது மூலமாக இந்தியாவின் இரண்டாவது பெரிய லிஸ்டடு ஹாஸ்பிடல் செயினாக ரேடியண்ட் லைஃப் கேரை உருவாக்கினார். கோவிட் உச்சக்கட்டத்தில் இது நிகழ்ந்தது.

போர்ப்ஸ் கணிப்பின்படி அபய் சோயின் நிகர மதிப்பு 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்திய மதிப்பில் ரூ.15,842 கோடி.
அபய்யின் அபாரமான தலைமையானது 2023 ஆம் ஆண்டுக்கான போர்ப்ஸ் இந்தியா லீடர்ஷிப் அவார்ட்ஸ் நிகழ்வில் ஆண்டின் சிறந்த தொழில்முனைவர் என்ற விருதைப் பெற்றார்.
மனோகர் லால் அகர்வால் : இந்தியாவின் பிரபலமான ஸ்நாக்ஸ் பிராண்டான ஹல்திராமின் நிறுவனர் மனோகர் லால் அகர்வால். அவரது உழைப்பின் காரணமாக அந்த நிறுவனம் பிரபலத்தின் உச்சத்தை எட்டிவிட்டது.

மனோகர் லால் அகர்வாலின் தற்போதைய நிகர மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்திய மதிப்பில் ரூ.8338 கோடி. 1937இல் தொடங்கப்பட்ட ஹல்திராம் நிறுவனம் இன்றைக்கு நாட்டு மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
ராஜிவ் ஜெயின் : GQG Partners நிறுவனரும், தலைவரும், தலைமை இன்வெஸ்ட்மெண்ட் ஆபிஸருமான ராஜிவ் ஜெயின் அதானி குரூப்பின் நிதி நடவடிக்கைகளில் முக்கியப் பங்கை ஆற்றியவர். பங்கு வர்த்தகத்தின் மூலம் ரூ.15,446 கோடி சம்பாதித்துள்ளார். பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தில் அவர் செய்துள்ள பெரும் முதலீட்டின் மூலம் ராஜிவ்வின் தற்போதைய நிகர மதிப்பு 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்திய மதிப்பில் ரூ.26,683 கோடி.

ரேகா ஜுன்ஜுன்வாலா : தனது கணவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மதிப்புமிக்க பங்குகளை பரம்பரை உரிமையில் பெற்றுள்ளார் ரேகா ஜுன்ஜுன்வாலா. அத்துடன் டைடான் கம்பெனி மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் உள்ள பங்குகளையும் நிர்வகித்து வருகிறார்.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா 2022இல் காலமான பின்னர் நிதி நிலைமையை பொறுப்பாகப் பார்த்து வரும் ரேகாவின் தற்போதைய நிகர மதிப்பு 7.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்திய மதிப்பில் ரூ.63,375 கோடி.
மேற்கண்ட 7 பேரும் இந்திய பில்லியனர்களும் வெவ்வேறு விதமான துறைகளில் பரிமளித்துள்ளனர். அவர்களது சாதனை என்பது இந்தியாவின் தொழில்முனைவு உத்வேகத்தின் பிரதிபலிப்பாகவே எல்லாராலும் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications