கொரோனா பரவல் முடிவுக்கு வந்ததையடுத்து கடந்த ஆண்டின் மத்தியில் இருந்து நிறுவனங்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை அலுவலகத்துக்கு வந்து பணியாற்றும் படி வலியுறுத்தி வருகின்றன. இதனால் ஊழியர்களும் அலுவலகத்துக்கு திரும்ப தொடங்கி விட்டனர்.
அதேசமயம் பெரும்பாலான பணியாளர்கள் அலுவலகத்துக்கு திரும்ப தயங்குகிறார்கள் என்ற பேச்சு நிலவுகிறது. ஆனால் நிறுவனத்தின் கட்டளையை ஏற்று அலுவலக பணிக்கு திரும்ப பணியாளர்கள் தயாராக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பணியாளர்கள் அலுவலக பணிக்கு திரும்ப வேண்டும் என்ற நிறுவனங்களின் உத்தரவு தொடர்பாக சிஸ்கோ ஏபிஜேசி கடந்த நவம்பரில் ஒரு ஆய்வை மேற்கொண்டது.

இந்த ஆய்வில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், தைவான், தாய்லாந்து மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளை சேர்ந்த 9,200 முழு நேர பணியாளர்கள் மற்றும் 1,650 முதலாளிகள் பங்கேற்றனர். இந்த ஆய்வின் முடிவில் பல சுவாரஸ்மான தகவல் கிடைத்தன.
அந்த ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள பணியாளர்களில் 10ல் 7 பேர் (76 சதவீதம்) அலுவலகத்திற்கு திரும்புவதற்கான தங்கள் நிறுவனத்தின் உத்தரவுக்கு சாதகமாக பதிலளித்தனர். மேலும் பதிலளித்தவர்களில் 82 சதவீதம் பேர், வாரத்துக்கு சில நாட்களாவது அலுவலகத்துக்கு வர விருப்பம் தெரிவித்தனர்.
பணியாளர்கள் அலுவலக வேலைக்கு திரும்புவது தனிப்பட்ட வேலைக்காக அல்ல, மாறாக கூடிவேலை செய்தல் (80 சதவீதம்), அலுவலக சகாக்களுடன் இணைந்து குழுவாக சிக்கல் தீர்ப்பது (53 சதவீதம்) மற்றும் சொந்தமான வளர்ச்சி உணர்வை வளர்ப்பது (58 சதவீதம்) உள்ளிட்டவை அடங்கும். இந்த மாற்றம் ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்களின் பணியிடங்களுக்கான தேவைகளில் ஏற்படும் மாற்றத்தை குறிக்கிறது.
இந்தியா முழுவதும் அலுவலக லேஅவுட்ஸ் மற்றும் இருக்கை ஏற்பாடுகள், இணைந்து வேலை பார்த்தல் மற்றும் குழுவாக சிக்கல் தீர்ப்பது நோக்கங்களுக்கு உகந்ததாக இல்லை என்று 64 சதவீத ஊழியர்கள் கருதுகின்றனர். கூடி வேலை பார்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், ஆய்வில் பங்கேற்ற 85 சதவீத முதலாளிகள் இன்னும் குறைந்தபட்சம் பாதி அலுவலகங்களை தனிப்பட்ட பணியிடங்களுக்கு ஒதுக்குகின்றனர்.
தனிப்பட்ட பணியிடங்கள் (40 சதவீதம்), பெரிய (48 சதவீதம்) மற்றும் சிறிய (58 சதவீதம்) மீட்டிங் அறைகள் அலுவலகத்தில் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் பயனற்றவை அல்லது மிதமான அளவில் மட்டுமே சிறந்த முறையில் செயல்பாடு இருக்கும் என்று ஊழியர்கள் கருதுகின்றனர்.
அலுவலக உற்பத்தி திறனை அதிகரிப்பதில் மீட்டிங் அறைகள் பயனற்றதாக இருக்கும் என்று முதலாளிகள் மத்தியில் கருத்து நிலவுகிறது. நிறுவனங்கள தங்கள் அலுவலக இடங்களில் மாற்றங்கள் செய்வதில் முன்னேற்றம் அடைந்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 10 முதலாளிகளில் 8 பேர் தொற்றுநோய்க்கு பிந்தைய மாற்றங்களை செய்துள்ளனர். அடுத்த 2 ஆண்டுகளில் 90 சதவீதம் பேர் அவ்வாறு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
சிஸ்கோ ஏபிஜேசியின் ஒருங்கிணைப்பு விற்பனை பிரிவின் நிர்வாக இயக்குனர் சந்தீப் மெஹ்ரா கூறுகையில், பிராந்தியத்தில் உள்ள ஊழியர்கள் ஹைபிரிட் வேலைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர் மற்றும் அடிக்கடி அலுவலகத்துக்கு வரவும் தயாராக உள்ளனர்.
ஆனால் பணியிடங்கள் அவர்களின் வளர்ந்து வரும் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வுடன் இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications