கடந்த வாரத்தில் தொடர்ந்து சந்தையானது ஏற்ற இறக்கத்தினை கண்ட நிலையில், டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மூலதனமானது 1,29,047.61 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் பலத்த ஏற்ற இறக்கத்திற்கு மத்தியில் 589.31 புள்ளிகள் அல்லது 1.03% அதிகரித்துள்ளது.
வழக்கமாக டாப் கெயினாராக இருந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது இந்த வாரத்தில் குறைந்துள்ளது.
Array
அதே சமயம் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் டாப் கெயினர்களாக உள்ளன. இதே எப்போதும் முதலிடத்தில் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்ட்டெல், ஐசிஐசிஐ வங்கி டாப் லூசர்களாக உள்ளன.
டிசிஎஸ் சந்தை மூலதனம்
நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், அதன் சந்தை மூலதனத்தில் 71,761.59 கோடி ரூபாய் அதிகரித்து, 13,46,325.23 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று குறைந்து, 3,640.45 ரூபாயாக குறைந்துள்ளது.
இன்ஃபோசிஸ் மூலதனம்
இதுவே மற்றொரு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 18,693.62 கோடி ரூபாய் அதிகரித்து, 7,29,618.96 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த அமர்வில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று குறைந்து, 1,735.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸின் மூலதனம்
நாட்டின் முன்னணி நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 16,082.77 கோடி ரூபாய் அதிகரித்து, 4,26,753.27 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் பஜாஜ் பைனான்ஸின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 1.55% குறைந்து, 7069.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி மூலதனம்
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பானது 12,744.21 கோடி ரூபாய் அதிகரித்து, 8,38,402.80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 0.80% குறைந்து, 1,513.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி சந்தை மூலதனம்
தனியார் முன்னணி நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி-ன் சந்தை மூலதனம் 5,393.86 கோடி ரூபாய் அதிகரித்து, 5,01,562.84 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 1.29% குறைந்து, 2,771.65 ரூபாயாக சரிந்து முடிவடைந்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனமானது 2,409.65 கோடி ரூபாய் அதிகரித்து, 4,22,312.62 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஆனது கடந்த அமர்வில் 0.81% குறைந்து, 473.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் சந்தை மூலதனம்
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1,961.91 கோடி ரூபாய் அதிகரித்து, 5,50,532.73 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது, 1.66% குறைந்து, 2,343.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பார்தி ஏர்டெல் மூலதனம் சரிவு
நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 10,489.77 கோடி ரூபாய் குறைந்து, 3,94,519.78 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் இந்த பங்கு விலையானது 1.94% குறைந்து, 718.35 ரூபாயாக அதிகரித்து குறைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் மூலதனம்
ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனமானது 3,686.55 கோடி ரூபாய் குறைந்து, 4,97,353.36 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இவ்வங்கியின் பங்கு விலையானது 0.84% குறைந்து, 716.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 2,537.34 கோடி ரூபாய் குறைந்து, 15,27,572.17 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 3% குறைந்து, 2,408.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications