அமெரிக்க நிறுவனங்கள் அடுத்தடுத்து இந்தியர்களை உயர்பதவியில் அமர்த்தி வருகின்றனர், 15 வருடத்திற்கு முன்பு மாஸ்டர் கார்ட் துவங்கி சமீபத்தில் யூடியூப் தலைவர் வரையில் இந்தியர்களின் ஆதிக்கம் அமெரிக்க நிறுவனங்களில் அதிகமாக உள்ளது. இந்தியர்களை நியமிப்பது மூலம் அமெரிக்க நிறுவனங்கள் நிலையான வளர்ச்சி மட்டும் அல்லாமல் வேகமாக வர்த்தக விரிவாக்கத்தையும் சந்தித்து வருகிறது.
இது கூகுள், மைக்ரோசாப்ட், அடோபி போன்ற பல நிறுவனங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த மேஜிக்-ஐ சிறு நிறுவனங்களும் கொண்டு வர முயற்சி செய்து, பல நிறுவனங்கள் அதிகப்படியான இந்திய ஊழியர்களை பணியில் அமர்த்தியது.

இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான Zachary Kirkhorn வெளியேறும் நிலையில் இப்பதவியில் இந்திய வம்சாவளியை தேர்ந்த வைபவ் தனேஜா நியமிக்கப்பட்டு உள்ளார். 45 வயதான வைபவ் தனேஜா Tesla's Master of Coin எனப்படும் தலைமை நிர்வாக அதிகாரி பதவியும், கூடுதல் பொறுப்பாக தலைமை கணக்கியல் தலைவராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
வைபவ் தனேஜா 2017 இல் டெஸ்லா நிறுவனத்தில் சேர்ந்தார். டெஸ்லா 2016 இல் வாங்கிய சூரிய ஆற்றல் நிறுவனமான SolarCity-யில் வைபவ் முதலில் துணைத் தலைவராகவும் பின்னர் கார்ப்பரேட் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றினார். டெஸ்லா கைப்பற்றல் மூலம் டெஸ்லா-வில் இணைந்தார்.

வைபவ் தனேஜா தலைமையில் SolarCity மற்றும் டெஸ்லா ஆகிய இரு நிறுவனங்களின் கணக்கியல் குழுக்கள் ஒருங்கிணைக்கும் முக்கிய பொறுப்பை சிறப்பாக செய்து முடித்து மூலம் டெஸ்லா நிதியியல் பிரிவில் முக்கிய பொறுப்பு வகித்தார்.
ஜனவரி 2021 இல் டெஸ்லாவின் இந்தியப் பிரிவான டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் அண்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநராகவும் வைபவ் தனேஜா நியமிக்கப்பட்டார். சுமார் 20 வரும் நிதியியல் மற்றும் கணக்கியல் பிரிவில் அனுபவம் கொண்ட வைபவ் தனேஜா டெக்னாலஜி, பைனான்சியல், ரீடைல், டெலிகாம் என பல துறையில் பணியாற்றியுள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரிகளான தீபக் அஹூஜா, Zachary Kirkhorn ஆகியோர் உடனும், டெல்ஸா உலகளாவிய வர்த்தகத்தின் காலாண்டு முடிவுகளையும் வெளியிடுவதிலும் நெருங்கி பணியாற்றியவர் வைபவ் தனேஜா.

டெல்லி பல்கலைகழகத்தில் காமர்ஸ் பிரிவில் பட்டம் பெற்று, 1996ல் PWC எனப்படும் PriceWaterhouseCoopers நிறுவனத்தில் சேர்ந்தார். இவருடைய பணியை பாராட்டும் வகையில் இந்திய அலுவலகத்தில் இருந்து அமெரிக்க அலுவலகத்திற்கு மாறப்பட்டார். சுமார் 17 ஆண்டுகள் பணியாற்றிய வைபவ் தனேஜா சோலார் சிட்டி நிறுவனத்தில் சேர்ந்து தற்போது டெஸ்லா CFO என்னும் முக்கிய பதவியை பெற்றுள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications