ஐடி துறையில் சமீபத்திய காலமாக பணி நீக்கம் என்பது மோசமான அளவில் இருந்து வருகின்றது. இந்த போக்கு இன்னும் சில காலம் தொடரலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது.
இது குறித்து நாஸ்காம் மற்றும் வேலை தேடும் தளமான இண்டீட் நடத்திய ஆய்வில், இன்றைய இளைஞர்கள் மத்தியில் வேலை எனும்போது டெக் துறையிலேயே அதிகம் வேலை தேடுவதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வானது மிகப்பெரிய அளவில் பணி நீக்கம் இருந்து வரும் நிலையில் வந்துள்ளது. என்னதான் பணி நீக்கம் இருந்தாலும், சம்பள குறைப்பு என பல சவால்கள் இருந்தாலும் ஐடி துறையின் மீதான மோகம் என்பது மட்டும் குறையவில்லை என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.
டெக் துறையில் விருப்பம்
இந்த ஆய்வில் கலந்து கொண்ட 70% பேர் டெக் துறையில் தான் விருப்பம் தெரிவித்துள்ளனராம். இந்த ஆய்வில் 79% பேர் சரியானதொரு வாய்ப்பினை நிறுவனங்கள் வழங்கினால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களது வேலையில் இருக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
2022ம் நிதியாண்டில் இந்தியாவின் டெக் துறையில் 3,80,000-க்கும் அதிமான பிரெஷ்ஷர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஐடி நிறுவனங்களின் திட்டம் என்ன?
நாஸ்காமின் மூத்த துணைத் தலைவரும், தலைமை வியூக அதிகாரியுமான சங்கீதா குப்தா கூறுகையில், பணியிடங்களும் பணியாளர்களும் மாறி வருகிறார்கள். எனினும் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்கள் புதிய திட்டங்கள், ஊழியர்களின் திறனை அதிகரிக்க புதிய புதிய கோர்ஸ்கள் என பலவற்றையும் நிறுவனங்களும் கையாண்டு வருகின்றன. இது ஐடி துறையில் திறன் வாய்ந்த ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளவும், ஐடி துறையில் புதியதாக ஒரு வடிவத்தினை கொடுக்கவும் பயன்படும் எனலாம்.
ஹைபிரிட் மாடல் பணி
தொடந்து தேவையானது அதிகரித்து வரும் நிலையில் ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே வீட்டில் இருந்து பணிபுரியவும், ஹைபிரிட் மாடல் பணியினையும் அனுமதித்துள்ளன. இந்த ஆய்வில் Gen Z பிரிவில் (1997 - 2012ல் பிறந்தவர்கள்) அதிகளவில் அலுவலகத்தில் இருந்து பணியாற்ற விரும்புவதாகவும், 85% பேர் அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து பணியாற்றும் கலப்பின பணியினை விரும்புவதாகவும் கூறியுள்ளது.
ஒர்க் லைப் பேலன்ஸ்
Gen Z ஊழியர்கள் பெரும்பாலும் தங்களது ஒர்க் லைப் பேலன்ஸை சரியாக வைத்துக் கொள்ளவே நினைக்கின்றனர். மொத்தத்தில் வேலை குடும்பம் என இரண்டையும் சரியாக கையாள நினைக்கின்றனர்.
நிறுவனங்களும் தேவையை தொடர்ந்து ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள பற்பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் மூலம் அட்ரிஷன் விகிதத்தினை தக்க வைத்து கொள்ள முயல்கின்றன.
பணி நீக்கம்
ஐடி துறையினை பொறுத்தவரையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில்,பணி நீக்கம் என்பது இருந்து வருகின்றது, இந்தபோக்கு இன்னும் சிறிது காலத்திற்கு நீடிக்கலாம் என்றாலும், பற்பல துறைகளிலும் டிஜிட்டல் தேவையானது அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு இந்த துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அதுவரையில் ஐடி துறையில் சில ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம்.
இது ஒரு சுழற்சி தான்
சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று ஐடி துறையில் இது ஒரு சுழற்சி தான். இது எப்போதும் இருப்பது தான். ஆக இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை, விரைவில் ஐடி துறையானது மீண்டும் வரும். அப்போது பணியமர்த்தல் அதிகரிக்கும். இது ஐடி துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியல்ல. உலகம் முழுக்க நிலவி வரும் மெதுவான வளர்ச்சி, மந்த நிலை அச்சத்தின் மத்தியில் சரிவினைக் கண்டு வருகின்றது. ஆக இந்த நிலை மாறும்போது நிச்சயம் ஐடி துறையிலும் வளர்ச்சி காணும். அதுவரையில் இதுபோன்ற ஏற்ற தாழ்வுகள் என்பது சகஜம் என்றும் கூறியிருந்தது.
பணியமர்த்தல் அதிகரிக்கும்
இந்த அறிக்கையின் வெளிப்பாடு தான் இந்த ஆய்வு என்றும் கூறலாம்,. ஏனெனில் என்னதான் பிரச்சனை என்றாலும், ஐடி துறையின் மீதான ஆர்வம் என்பது குறைந்ததாக தெரியவில்லை. சமீபத்திய ஆய்வொன்று ஐடி துறையில் நடப்பு ஆண்டில் பற்பல சவால்கள் இருந்து வந்தாலும், மறுபுறம் பணியமர்த்தல் என்பது அடுத்த ஆண்டு அதிகரிக்கும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications