ஐடி துறையில் தான் உயர் அதிகாரிகள் அடிக்கடி வெளியேறுகிறார்கள் என பார்த்தால், ஒட்டுமொத்த இந்திய கார்ப்ரேட் துறையிலும் இதே கதையாக தான் உள்ளது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரிகளின் (CFO) சமீப காலமாக அதிகளவில் பதவிகளை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு காலத்தில் சிஇஓ-க்கு இணையாக நீண்ட காலம் பதவியில் இருக்கும் தலைவராக பார்க்கப்பட்ட CFO-க்கள் தற்போது பொசுக்கு பொசுக்குன்னு பேப்பர் போடும் நபர்களாக மாறியுள்ளனர்.

இஷ்வா கன்சல்டிங் (Ishwa Consulting) என்ற லீடர்ஷிப் கன்சல்டிங் நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் 10 தலைமை நிதி அதிகாரிகளில் 7 பேர் 24 மாதங்களுக்குள் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.
முக்கிய ஆய்வு:
2020ஆம் ஆண்டு முதல், இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத 300 நிறுவனங்களின் தலைமை நிதி அதிகாரிகளின் பதவிக் காலத்தை இந்த ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. ஒரு காலத்தில் நிலையான பதவியாகக் கருதப்பட்ட இந்தப் பணி, தற்போது பல்வேறு காரணங்களால் அதிகளவிான அட்ரிஷன் விகிதத்தை எதிர்கொண்டு வருகிறது.
தலைமை நிதி அதிகாரிகள் குறைந்த காலக்கட்டத்தில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முக்கிய காரணமாக இருப்பது, பதவியின் பொறுப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகளில் ஏற்படும் பொருந்தமற்ற மை முக்கியமானதாக உள்ளது.
தலைமை நிதி அதிகாரிகள் வெளியேற்றம்:
இஷ்வா கன்சல்டிங்கின் அறிக்கையின்படி, 48% தலைமை நிதி அதிகாரிகள் ஒரு நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட பிறகு பதவியின் பொறுப்புகள் மாறியதாலோ அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் தெளிவாக வரையறுக்கப்படாத காரணத்தாலோ இப்பதவியை விட்டு வெளியேறுவதாக தெரிகிறது.
இதற்கு அடுத்தபடியாக, 31% பேர் மற்றொரு தொழில்துறையில் வாய்ப்புகளைத் தேடி வெளியேறியுள்ளனர். வெறும் 20% பேர் மட்டுமே செயல்திறன் குறைபாடு காரணமாக பதவியை இழந்துள்ளனர்.
முக்கிய துறைகள்:
மேலும் தலைமை நிதி அதிகாரிகளின் பதவிக் காலம், அவர்கள் பணியாற்றும் துறையைப் பொறுத்து மாறுபடுகிறது. உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் துறைகளில் பணியாற்றும் தலைமை நிதி அதிகாரிகள், சராசரியாக நான்கு ஆண்டுகளுக்கு மேல் பதவியில் நீடிக்கின்றனர். ஆனால், கன்ஸ்யூமர் தொழில்கள், பின்டெக், மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் CFO-க்கள் மிகவும் குறைந்த காலக்கட்டத்தில் ராஜினாமா அதிகமாக உள்ளது. இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் நான்கில் ஒரு தலைமை நிதி அதிகாரி, முதல் ஆண்டிலேயே பதவியை விட்டு வெளியேறுகிறார்.
ஐபிஓ முக்கிய பங்கு:
IPO வெளியிட திட்டமிட்டு பணியமர்த்தப்படும் தலைமை நிதி அதிகாரிகளின் பதவி காலம் தான் மிகவும் குறைவாகவும் நிலையற்றதாகவும் உள்ளதாக இந்த ஆய்வுகள் கூறுகிறது.
இஷ்வா கன்சல்டிங்கின் தரவுகளின்படி, 15-20% தலைமை நிதி அதிகாரிகள், நிறுவனங்களை பங்குச் சந்தை அறிமுகத்திற்கு தயார்படுத்துவதற்காக பணியமர்த்தப்படுகின்றனர். ஆனால், இவர்களில் 60% பேர், பங்குச் சந்தை பட்டியலிடும் திட்டம் தமாதமாகவோ அல்லது கைவிடப்பட்டோ பிறகு பதவியை விட்டு வெளியேறியுள்ளனர்.
பங்குச் சந்தையில் களமிறங்க தயாராகும் நிறுவனங்களுக்கு, தலைமை நிதி அதிகாரிகளின் ஸ்பெஷல் திறன்கள் மிக முக்கியமானவை. இவர்கள் பொதுவாக வங்கித் துறையில் வலுவான தொடர்புகளைக் கொண்டவர்களாகவும், முதலீட்டாளர்களுடன், நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு இணையாக தொடர்புகளை கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும். இது தான் ஒரு வெற்றிகரமான ஐபிஓ வெளியிட முக்கிய தேவை.
ஆனால், இத்தகைய திறமையான தலைமை நிதி அதிகாரிகளை பணியமர்த்துவது நிறுவனங்களுக்கு அதிக செலவை (அதிக சம்பளம்) ஏற்படுத்தும் விஷயம். இந்த சூழ்நிலையில், பங்குச் சந்தை அறிமுகத் திட்டங்கள் மாறும்போது, நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் இயக்குநர் குழு இத்தகைய பணியமர்த்தல்களை மறுஆய்வு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதேபோல் CFO-ம் பணியை தொடர்வது குறித்து முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதேபோல் இந்திய சந்தையில் தற்போது ஐபிஓ வெளியிட தயாராகும் நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காரணத்தால் திறன்வாய்ந்த CFO அதிகாரிகளுக்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவும் CFO-க்கள் குறைந்த காலக்கட்டத்தில் அதிக சம்பளத்திற்காக வேறு நிறுவனங்களுக்கு மாறுகின்றனர்.
தலைமை நிதி அதிகாரிகளின் உயர்ந்த பதவி மாற்ற விகிதம், இந்திய நிறுவனங்களுக்கு பல சவால்களை உருவாக்குகிறது.
முக்கிய நிறுவனங்கள்:
அதானி கிரீன், திலிப் பில்ட்கான், டிஎல்எஃப் (DLF) போன்ற பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிலும், அரவிந்த் ஸ்மார்ட்ஸ்பேசஸ், ஆக்சிஸ் வங்கி, பைஜூஸ், மற்றும் அன்அகாடமி போன்ற பட்டியலிடப்படாத நிறுவனங்களிலும் இத்தகைய உயர்மட்ட பதவி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications