இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனத்தை நிறுவியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இன்போசிஸ் நாராயண மூர்த்தி 3one4 Capital என்னும் வென்சர் கேப்பிடல் நிறுவனத்தின் தி ரெக்கார்ட் என்னும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய போது இந்தியாவின் இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் பணியாற்ற வேண்டும் என்று பேசியது பெரும் சர்ச்சையானது.
இதற்கு தொழிற்துறையை சேர்ந்த பலர் சாதகமாக பதில் அளித்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக இருக்கும் ஓலா-வின் சிஇஓ பாவிஷ் அகர்வால் டிவிட்டரில் முக்கியமான பதிவை இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் 70 மணிநேர பணி தொடர்பாக தெரிவித்துள்ளார்.

பாவிஷ் அகர்வால் டிவிட்டரில் நமது தாத்தா காலத்தில் சுதந்திர தினத்திற்காக பாடுப்பட்டனர், அப்பா காலத்தில் உணவு, வீடு உள்ளிட்ட அத்தியாவசியமான விஷயங்களுக்காக பாடுப்பட்டனர். அதேபோல பிடிக்கிறதோ இல்லையோ இந்த தலைமுறையினர் கடுமையாக உழைத்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற பாடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எல்லோரும் அனைத்து விதிமான முயற்சிகளையும் எடுக்க வேண்டும், இந்த பயணத்தில் நாம் இருக்கிறோம் என்பதே விடவும் பெரிய மனநிறைவு இருக்க முடியாது என பாவிஷ் அகர்வால் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியான டிவி மோகன்தாஸ் பாய் தொகுத்த தி ரெக்கார்ட் நிகழ்ச்சியில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி இன்றைய இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக தினமும் 12- 14 மணிநேரம் என வாரத்திற்கு 70 மணிநேரம் கடினமாக உழைக்க வேண்டும், அப்போது தான் கடின உழைப்புக்கு பெயர்போன் சீனா போல் உயர முடியும்.

இதன் மூலம் இந்தியாவின் மரியாதை உயர்வது மட்டும் அல்லாமல், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக 2வது அல்லது 3வது இடத்திற்கு உயர முடியும் என பேசினார். நாராயணமூர்த்தி-யின் பேச்சுக்கு பல தொழிலதிபர்கள், தலைவர்கள், ஸ்டார்ட்அப் சிஇஓ-க்கள் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்தது கூடுதல் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிவையில் மோகன்தாஸ் பாய், நாராயண மூர்த்தி கருத்தை நிருபிக்க மோகன்தாஸ் பாஸ் 2019 பைம்யூஸ் சர்வே தரவுகளை அடிப்படையாக எடுத்து இந்தியாவில் 15 முதல் 59 வயது வரையில் இருக்கும் நகரத்து ஆண்களின் சாரசரி வார பணிநேரம் 61.6 மணிநேரமாக உள்ளது.
நாராயண மூர்த்தி கூறும் வாரத்திற்கு 70 மணிநேர பணி நேரம் என்பது 30 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கானது, செழிப்பான வளர்ச்சிக்கு கடின உழைப்பு தேவை என்பதை இந்த டேட்டா காட்டுகிறது என டிவீட் செய்துள்ளார்.
நாராயண மூர்த்தியின் 70 மணிநேரம் பணி குறித்துக்கு அவருடைய மனைவி சுதா மூர்த்தி கூறுகையில் மூர்த்தி வாரத்திற்கு 80 -90 மணிநேரம் வேலை பார்க்க கூடியவர், அதற்கு குறைவாக அவர் பணியாற்றியதே கிடையாது. அவர் எப்போது கடுமையாக உழைப்பை நம்புபவர் மற்றும் அப்படியே வாழ்ந்தவர். அவருக்கு தோன்றியதை தான் அவர் பேசினார் என சுதா மூர்த்தி .
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications