டோரன்டோ: இந்தியாவை பூர்வீகமாக கொண்டு கனடாவில் வேலை செய்து வரக்கூடிய ஒரு ஐடி ஊழியர் 70 லட்சம் ரூபாய் சம்பளம் போதியதாக இல்லை என கூறியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த பல்வேறு ஐடி ஊழியர்களும் ஆன்சைட் வேலையாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கின்றனர். பலர் அங்கேயே செட்டில் ஆகிவிடுகின்றனர். இந்த நிலையில் இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட ஒரு ஐடி ஊழியர்கள் ஆண்டுக்கு 70 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் அது தங்களுக்கு போதவில்லை எனக் கூறியிருக்கிறார்.

பியூஷ் மோங்கா என்பவர் கனடாவில் வசிக்கும் ஒரு இந்தியரிடம் நேர்கானல் நடத்தி வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் அந்த நபர் டோரன்டோவில் வசிக்கும் தனக்கு ஆண்டுக்கு 70 லட்சம் ரூபாய் ஊதியம் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த சம்பளம் நிச்சயமாக இங்கே வாழ்வதற்கு போதுமானதாக இல்லை என கூறியுள்ளார். ஏனெனில் டோரன்டோவில் காஸ்ட் ஆஃப் லிவிங் மிக அதிகமாக இருக்கிறது என கூறுகிறார். இன்போசிஸ் நிறுவனத்தின் சார்பில் கனடாவின் டோரன்டோவில் இவர் வேலை செய்து வருகிறார் .
இவர் தன்னுடைய சம்பளத்தில் மாதந்தோறும் நான்காயிரம் டாலர்களை வீட்டு வாடகைக்காக மட்டுமே செலவிடுகிறார். இதனை சுட்டிக்காட்டி தான் சம்பளம் போதவில்லை என கூறியுள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தில் எஸ்ஏபி ஸ்பெசலிஸ்ட் ஆக பணிபுரியும் இவருக்கு ஆண்டுக்கு 1.15 லட்சம் டாலர்கள் சம்பளமாக கிடைக்கிறது.
அவரது இந்த வீடியோ ஆயிரக்கணக்கானவர்களின் பார்வையையும், ஏராளமானவர்களின் லைக்குகளையும் பெற்றுள்ளது. பலரும் தங்களுடைய கருத்துக்களை இந்த பதிவின் கீழ் பின்னூட்டங்களாக பதிவிட்டுள்ளனர். அதற்கு ஒரு நபர் இன்போசிஸ் நிறுவனத்தில் நானும் இதற்கு முன்பு எஸ்ஏபியாக பணிபுரிந்து இருக்கிறேன்.
இதன் ஒரு பகுதியாக உடன் பணி புரிந்த பலரையும் இன்போசிஸ் நிறுவனம் அமெரிக்காவிற்கு அனுப்பியது. ஆனால் காஸ்ட் ஆப் லிவிங் பிரச்சினை காரணமாக ஏராளமானவர்கள் ஓராண்டுக்குள்ளேயே நிறுவனத்தை விட்டு வெளியேறி விட்டனர் என கூறியுள்ளார்.
ஒரு பயனாளர் மனிதர்களுக்கு எவ்வளவு பணம் கிடைத்தாலும் போதாது என்று தான் கூறுவார்கள் நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள் இந்தியாவை விட அங்கே வாழ்க்கைத் தரம் 20 மடங்கு சிறந்ததாக இருக்கிறது .எனவே அதை அனுபவியுங்கள் என தெரிவித்துள்ளார். ஒருவர் , ஒரு மாதத்திற்கு 4000 டாலர்கள் வீட்டு வாடகைக்கு மட்டுமே வழங்க வேண்டுமா என ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications