இன்போசிஸ் நாராயண மூர்த்தி இந்திய இளைஞர்களை நாட்டின் பொருளாதாரத்தை 2வது அல்லது 3வது இடத்திற்கு முன்னேற்ற தினமும் 12 முதல் 14 மணிநேரம் என வாரத்திற்கு 70 பணிநேரம் பணியாற்ற அறிவுறுத்தியது ஒட்டுமொத்த கார்பரேட் உலகையும் பரபரப்பாக்கியது. மருத்துவர்கள் முதல் ஊழியர்கள் வரையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இதேவேளையில் பல தொழிலதிபர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதை சரி எனவும் 70 மணிநேரம் பணியாற்றுவதை ஒரு சிறு வித்தியாசத்துடன் செய்ய வேண்டும் என முதலீட்டு வல்லனரான ராஜேஷ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆனா அது எப்படி..? வாங்க பார்ப்போம்.

ராஜேஷ் தனது பதிவில் நீங்கள் வேலைபார்க்கும் நிறுவனத்திற்காக வெறும் 40 மணி நேரம் மட்டும் உழையுங்கள் போதும். மீதிமுள்ள 30 மணி நேரம் உங்களுக்காக - சிறு தொழில் செய்ய, பிடித்த ஹாபியை தொடர, பிடித்தவொன்றை கற்க, கற்றதை பயிற்சி செய்ய, மனதிற்கு பிடித்ததை செய்ய செலவிடுங்கள் என கூறியுள்ளார்.
மேலும் அவர் நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் உங்களுக்கான மாற்று அதாவது ரீப்ளேஸ்மென்ட் எப்போதும் இருக்கும். நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் நீங்கள் வெறும் ஒரு எண் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.
70 மணிநேரம் பணியாற்ற ஆதரவாக கருத்து தெரிவிக்கும் எந்த ஒரு தொழிலதிபரும் ஒவ்வொரு வருடமும் இந்த சம்பள உயர்வு தருகிறோம், வேலைவாய்ப்புக்கு வாழ்நாள் கேரென்டி, இலவசமாக ஊழியரின் குடும்பத்திற்கு முழு ஹெல்த் இன்சூரன்ஸ், கல்விக்கு உதவி போன்றவற்றை அனைத்து ஊழியர்களுக்கும் உறுதி அளிப்பது இல்லை.
ராஜேஷ் தனது பதிவில் இறுதியாக வாழ்க்கையை கொண்டாடுங்கள். அனுபவியுங்கள். குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக இருங்கள். கடைசி வேளையில், கண் மூடுகையில், உங்களுக்காக மற்றும் உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் செலவழித்த நிமிடங்கள் தான் நினைவிற்கு வரும்.
வேறு வேலை ஏதுமில்லாத, வயதான பணக்காரர்கள், தங்களின் வாயில் உள்ளதை வாந்தி எடுப்பதை கண்டுகொள்ள வேண்டாம். இவ்வளவு வயதாகியும், ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்தியும், Point of Diminishing Returns மற்றும் Point of Negative Returns பற்றிய புரிதல் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது என அவரது பதிவு முடிகிறது.
இதேவேளையில் வளர்ந்து வரும் நிறுவன முதலாளிகள் வாரத்திற்கு 70 முதல் 90 மணிநேரம் பணியாற்றுகின்றனர் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications