700 ஆண்டுகால பழமை!. புகழ்பெற்ற ஆங்கிலேய ரிப்லி கோட்டை விற்பனைக்கு வந்தது!. விலை என்ன தெரியுமா?.

700 ஆண்டுகால பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினரிடம் இருந்த புகழ்பெற்ற ஆங்கிலேய ரிப்லி கோட்டை 700 ஆண்டுகளில் முதல் முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. பழமையான இந்த கோட்டையை தற்போது ரூ.225 கோடிக்கு விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் வடக்கு யார்க்ஷயரில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ரிப்லி கோட்டை. 445 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கோட்டை, 700 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தினரின் வசம் இருந்துவந்தது. இந்த கோட்டையில் ஹோட்டல், கிரிக்கெட் மைதானங்கள், படப்பிடிப்பு தளங்கள், காபி ஷாப்கள், குளம் , ஒரு தனியார் ஹெலிபேட், கார் பார்க்கிங், பரிசுப் பொருட்கள் கடை ஆகியவை உள்ளன. இந்தநிலையில் தற்போது இந்த பழமையான கோட்டையை ஏலத்தில் விடப்பட்டுள்ளது. சுமார் (£21 மில்லியன்) ரூ.225 கோடிக்கு விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. எஸ்டேட் ஒன்பது இடங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, தனித்தனியாகவோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ வாங்கலாம்.

700 ஆண்டுகால பழமை!. புகழ்பெற்ற ஆங்கிலேய ரிப்லி கோட்டை விற்பனைக்கு வந்தது!. விலை என்ன தெரியுமா?.

மேலும், ரிப்லி கோட்டையில் திருமணங்கள் மற்றும் நிகழ்வுகளை நடத்தவும் பிரபலமாக இருக்கிறது. 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டையை சர் தாமஸ் இங்கில்பி (Sir Thomas Ingilby) என்பவர் 50 ஆண்டுகளாக பராமரித்து வந்தார். சர் தாமஸ் 18 வயதாக இருந்தபோது அந்த எஸ்டேட்டைக் கைப்பற்றினார். 1308ம் ஆண்டு Edeline Thwenge என்பவரை திருமணம் செய்துபோது, வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது இந்த கோட்டை. மேலும், இது குடும்பத்தின் மரபு வீரக் கதைகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது, இந்த கோட்டை லண்டனுக்கு வெளியே, பிரித்தானியாவில் விற்பனைக்கு வரும் மிக விலையுயர்ந்த சொத்தாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மேலும், அவரின் மகன், கிங் எட்வர்ட் III-ஐ ஒரு காட்டு பன்றி தாக்கியபோது உயிரைக் காப்பாற்றியதற்காக, அவருக்கு சர்பத்ரி (knighthood) பட்டம் வழங்கப்பட்டது. சர் தாமஸ் மற்றும் அவரது மனைவி லேடி இங்கில்பி (Lady Ingilby) ஓய்வெடுக்க விரும்புகிறார்கள். தாங்கள் பல ஆண்டுகள் பராமரித்து வந்த இந்த கோட்டையை விற்பனை செய்யும் நிலையில், ஒருபுறம் மகிழ்ச்சியாகவும், மறுபுறம் வேதனையாகவும் உணர்வதாக சர் தாமஸ் கூறினார். "நாங்கள் இது வரை செய்த அனைத்தையும் வெற்றிகரமாக முடித்து விட்டோம். வருங்கால தலைமுறைகளுக்காக கோட்டையின் பாரம்பரியத்தைக் காப்பாற்றி விட்டோம்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எஸ்டேட் முகவர் நிறுவனமான கார்ட்டர் ஜோனாஸைச் சேர்ந்த மார்க் கிரேன்ஜர் மேலும் கூறுகையில், 445 ஏக்கர் நிலத்துடன், வணிகம், விவசாயம், விளையாட்டு அல்லது பாதுகாப்பு முயற்சிகளில் ஆர்வமுள்ள வாங்குபவர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது. தலைமுறை தலைமுறையாகப் போற்றப்படக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க குடும்ப வீடாகவும் வணிகமாகவும் இதை மேலும் மாற்றுவதற்கு எண்ணற்ற சாத்தியக்கூறுகள் உள்ளன என்று கூறினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+