இந்திய பங்குச்சந்தையில் அவ்வப்போது நிறுவனங்களின் புதிய ஐபிஓ அறிமுகம் செய்யப்படும் என்பது தெரிந்ததே.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் இந்திய பங்குச்சந்தையில் ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள 71 புதிய அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022ஆம் ஆண்டில் பங்குச்சந்தை
2022ஆம் ஆண்டு பங்குச் சந்தையைப் பொறுத்தவரை ஒரு சிக்கலான ஆண்டு என்றும் குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் பங்குச்சந்தையும் ரத்தக்களறி ஆனது என்பது தெரிந்ததே.
பணவீக்கம்
பொருளாதார மந்தநிலை, பண வீக்கம் ஆகியவை காரணமாக பங்குச்சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருந்தது என்பதும், இதன் காரணமாக பல பெரிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது என்பதும் குறிப்பாக ஓலா உள்பட சில நிறுவனங்கள் தங்களது ஐபிஓ வெளியீட்டை ஒத்தி வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஐபிஓ-க்கள்
இந்த நிலையில் இந்திய பங்குச்சந்தையில் விரைவில் 71 புதிய ஐபிஓ-க்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி என்றும் கூறப்படுகிறது.
ரூ.70,000 கோடி
எம்க்யூர் பார்மாசூட்டிகல்ஸ், நவி டெக்னாலஜிஸ், பிகாஜி ஃபுட் மற்றும் மொபிக்விக் ஆகியவை உள்பட சில புதிய நிறுவனங்கள் தங்களது ஐபிஓ-க்களை வெளியிடுவதற்கான ஒப்புதலை செபியிடம் பெற்றிருப்பதாக தெரிகிறது. மேலும் 71 நிறுவனங்களில் 43 நிறுவனங்கள் சுமார் ரூ.70,000 கோடி திரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
ரூ.35,456 கோடி ஐபிஓ
2022-23 நிதியாண்டின் முதல் பாதியில், 14 இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.35,456 கோடியை திரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் 25 ஐபிஓக்கள் மூலம் ரூ.51,979 கோடி திரட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications