பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில் 74% மக்கள் தங்களுடைய அன்றாட செலவுகளை சரி கட்ட கூட வருமானம் ஈட்ட முடியாமல் தவித்து வருவது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த நகர்ப்புற பகுதிகளில் பொதுமக்கள் பொருளாதார சிக்கல்களுக்கு ஆளாவது கடந்த ஓராண்டு காலத்தில் 14 % அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் நகர்ப்புற பகுதிகளில் பல்ஸ் கன்சல்டண்ட் என்ற அமைப்பு மக்களின் பொருளாதார சூழல்கள் குறித்து ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.
இதன் படி பாகிஸ்தானை சேர்ந்த நகர்ப்புற மக்களில் 74% பேர் தங்களின் மாதாந்திர செலவினங்களுக்கு போதுமான வருமானத்தை கூட ஈட்ட முடியவில்லை என்பது தெரிய வருகிறது. இது 2023 ஆம் ஆண்டில் 60% ஆக இருந்த நிலையில் தற்போது 74 என உயர்ந்துள்ளது.

பல்ஸ் கன்சல்டண்ட் பாகிஸ்தானை சேர்ந்த 11 நகர்ப்புற மக்களிடம் நடத்திய ஆய்வு அறிக்கை முடிவில் இந்த புள்ளி விவரங்கள் வெளிவந்துள்ளன. இதன்படி 60% பேர் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய செலவினங்களை கூட குறைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். 40% பேர் மாதந்தோறும் கடன் வாங்கி தான் தங்களது செலவுகளை மேற்கொள்கிறார்களாம்.
மேலும் 10 % பேர் தங்களுடைய பிரதான வேலை போக பகுதிநேர வேலைக்கு சென்று தான் தங்களின் செலவினங்களை கவனித்துக் கொள்கிறார்களாம். பாகிஸ்தான் 240 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கிறது. இங்கே கிட்டத்தட்ட 56 % மக்கள் தங்களுடைய வருமானத்தை அப்படியே செலவு செய்கின்றனர். செலவு போக எதிர்காலத்திற்காக சேமித்து வைப்பதற்கு தங்களிடம் எந்த தொகையும் மீதம் இருப்பதில்லை என ஆய்வில் பதில் அளித்துள்ளனர்.
பாகிஸ்தான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து வருகிறது. கடந்த மாதம் செபா ஷெரிப் தலைமையிலான அரசு 3 ஆண்டு பொருளாதார திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது. இதன்படி மாகாணங்கள் மத்திய பட்ஜெட்டுக்கு கூடுதல் நிதியை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது மாகாணங்கள் மத்திய பட்ஜெட்க்கு இதற்கு முன்பு 39.4% பங்களித்த நிலையில் அது தற்போது 48.7 % பங்களிப்பு செய்ய வேண்டும் என அந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு நிதி நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகள் கடன் வழங்கியுள்ளன. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கூட உதவிக்கரம் நீட்டியுள்ளன.
Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications